எடப்பாடிக்கு விசாரணை எப்போது என்று வம்பானந்தா துருப்புச் சீட்டை கிள்ளிப் போட்டுவிட்டார். பதினோரு மருத்துவமனைகளை கட்டப்போகிறோம் என்று தம்பட்டம் அடித்த எடப்பாடி, இப்போது எலி வலையில் சிக்கிவிட்டார். சாதாரண தனி ஒரு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்களை நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற முடியுமா என்பதை அரசுதான் சொல்ல வேண்டும். - தே.மாதவராஜ், கோயமுத்தூர்..’பழனிசாமியும் பன்னீரும் தி.மு.க.வுக்கு வரவேண்டும்..!’ எனும் ஆர்.எஸ்.பாரதியின்கமான் கமான் பேட்டி சூடோ சூடு. தி.மு.க.வின் படு சீனியரான பாரதி, உமது அட்டகாச கேள்விகளுக்கு பொளேர் பதில்கள் கொடுத்துவிட்டாரே...- ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்..தி.மு.க.வின் டபுள் கேம் பற்றி அதனது கூட்டணிக் கட்சிகளுக்கு நன்கு தெரியும் என்றாலும்கூட, நீங்கள் அதுகுறித்து தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளை தக்க சமயத்தில் எச்சரித்திருந்தது, உமது அரசியல் ஞானத்திற்கு மற்றுமொரு உதாரணம் என்ற சொல்லலாம்.- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி..’நாங்கள் ராவணன் பரம்பரை’ என்பதனை இலங்கை அரசு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு காட்டியே வருகிறது என டெல்லி வாத்தியார் பகுதியில் இடம்பெற்றிருந்த செய்தி உணர்த்துகிறது. அண்டை நாடு என இந்தியா பரிதாபப்படுவதை இலங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அச்சுறுத்தலை தர சீனாவோடு சேர்ந்து கூட்டுச்சதி பண்ணுவதை வேடிக்கை பார்ப்பது இந்திய பாதுகாப்புக்கு நல்லதல்ல.- குஞ்சன்விளை ரவி, கன்னியாகுமரி.-.’ஜம்பிங் ஜம்பிங் தோப்பு...? கிரீன் கருப்பு... ரெட் செங்ஸ்...’ கட்டுரை செம சலசலப்பு. அரசியலில் காலம் தள்ள என்னவெல்லாம் ஆட்டம் காட்ட வேண்டியிருக்கு... கரை வேட்டி கலர்களை மாற்றி மாற்றி கட்டவேண்டியுள்ளதை தோப்பு மூலமாக அறிந்துகொள்ளலாம்.- டி.ஜெயசீலி, சோனகன்விளை..நியூஸ் பெஞ்ச் பகுதியில் ’சத்தியின் புதிய முகம்’ என சத்யராஜின் வர்ணனையை கூறியுள்ளீர்கள். பொதுவாக, ஒரு வசனத்தை தவறில்லாமல் படிப்பதுதான் நடிகரின் வேலை. இங்கே திரைக்கதை, வசனத்தை செந்தில்பாலாஜி எழுதிக் கொடுத்திருப்பார். அதை பிசிறு இல்லாமல் பேசி முடித்துள்ளார் சத்யராஜ். வியப்பு ஒன்றும் இல்லையே.- டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை..கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக இருந்தது பன்னீர்செல்வம் விஷயம். தமிழ்நாட்டிலும் ஜம்பம் பலிக்காமல் கர்நாடகாவில் தேர்தலில் நிற்கப் போகிறாராம். அப்புறம் இரட்டை இலை முடக்குவதற்காகத்தான் இந்த செயல் என்று நினைத்தவுடன் பன்னீர் பலே கில்லாடியப்பா.- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு..மாடுகள் நாட்டின் செல்வம் என்பார்கள். அடிமாடுகளாக்கி அவற்றை வாயைக் கட்டி, லாரியில் மரண அவஸ்தையில் நிற்கக்கூட முடியாமல் காவலர்களுக்கு மாமூல் கொடுத்து கேரளாவுக்கு அனுப்புவது யார்? கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறை. இப்படி மாமூல் வாங்கி வாயில்லாத ஜீவனை கண்ணீர்விட வைப்பது பாவம் அல்லவா?- சு.ஆறுமுகம், கழுகுமலை.