“இவர்கள் சண்டைக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா சுவாமி?” என்று அலுத்துக்கொண்ட சிஷ்யை, “ராஜ்பவன் ஏரியாவுல வாங்கியது”என்றபடி வெயிலுக்கு இதமாக இளநீரைக் கொடுத்தார். “அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால் மனிதர்கள் கொஞ்சம் உஷ்ணமாகத்தானே இருப்பார்கள். ஆளுநருக்கும் தி.மு.க அரசுக்கும் மோதல் முற்றிவரும் நிலையில், குடிமை பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாகவும், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதா குறித்தும் பேசியது ஆட்சியாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், தமிழக சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் ’மாநில அரசுக் அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இன்னொரு பக்கம் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியும் ஐந்து கோடி ரூபாயில் இருந்து மூன்று கோடி ரூபாயாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர்களுக்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், அவை செலவழிக்கபட்டது குறித்தும் குடையத் தொடங்கிவிட்டது தி.மு.க அரசு”.“அடிமட்டம் வரைக்கும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லும்...”“அது மட்டுமல்ல... ஏப்ரல் 19-ம் தேதி சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ராஜ்பவன் நம்முடைய இடம்தான். அதனுடைய வரலாறு படித்து பார்த்தேன். அந்த இடத்தையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். 700 ஏக்கரில் கிண்டி ரேஸ்கோர்ஸ் இடம் உள்ளது.அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள்; அதையும் எடுத்துக்கொள்ளலாம். அங்கு புதிய சட்டமன்றம் உருவாக்கலாம். இதை இந்தக் கால கட்டத்திலேயே கட்ட வேண்டும்’ என்று கலாய்ப்பதுபோல பேசினாலும் இதன் பின்னணியில் சீரியஸான திட்டம் இருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இதையடுத்து புதிய சட்டமன்றம் கட்டப்பட வாய்ப்புள்ள இடங்களின் பட்டியலில் ராஜ்பவனும் சேர்க்கப்பட்டுள்ளதாம்...””சபாஷ், சரியான போட்டிதான்... அது சரி, சில நாட்களாக சசிகலாவும் தினகரனும் பேசிக்கொள்வதுகூட இல்லையாமே... மோதல் முற்றிவிட்டதா?”“சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக இருந்த ‘ஜெயா ப்ளஸ்’, 2017ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிகாலத்திலேயே ஒரம் கட்டப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க-வுக்கென்று ’நியூஸ் ஜெ’ சேனலும், ’நமது அம்மா’ நாளிதழும் தொடங்கப்பட்டன.இதனால் ’ஜெயா ப்ளஸ்’ மற்றும் ’நமது எம்.ஜிஆர்’ நாளிதழுக்கு அரசு விளம்பரம் மறுக்கப்பட்டதால், கடந்த ஐந்தாண்டுகளாக திணறி வருகிறது நிர்வாகம். அதனால்,அந்த சேனலையும் நாளிதழையும் மூடிவிடவேண்டும் என்கிறார் சசி. ஆனால் தினகரனோ அதை ஏற்க மறுத்து, சித்திக்கு புத்தி ஏன் இப்படிப் போகுது?’ என்று புலம்பித் தள்ளுவதோடு, தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாராம்.“அவர் என்றைக்குத்தான் தொடர்பு எல்லைக்குள் இருந்தார்... கொடநாடு விவகாரத்தில் அடுத்த எபிசோட் ஆரம்பமாகிறதுபோல?”“சமீபத்தைய சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின்ஆவேசமாக பேசியபோது, ’கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை நிச்சயம்’ என்று சீறினார். அதன் தொடர்ச்சியாக விசாரணை வேகமெடுத்துள்ளது.எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கனகராஜ். சென்னை மந்தைவெளியில் உள்ள காவலர் குடியிருப்பில் அவரிடம் தொடர்ந்து இருநாட்களாக போலீஸார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.அப்போது இவரும் மர்ம விபத்தில் இறந்த கனராஜும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பேசியது தெரியவந்திருக்கிறது. அதாவது, பாதுகாப்பு அதிகாரியான கனகராஜுன் செல்போனை வாங்கி அதில் பேசியது எடப்பாடி பழனிசாமியாகதான் இருக்கும் என்பது போலீஸாரின் சந்தேகம்.இதைத் தொடர்ந்து இந்த பேச்சின் ரிக்கார்டுகள் திருச்சியில் இருக்கும் பி.எஸ்.என்.எல் டவரின் சர்வரில் பதிவாகியிருக்கும் என்று சைபர் க்ரைம் நிபுணர்கள் தகவல் கொடுக்கவே அதை ஆராயத் தொடங்கியிருக்கிறது காவல்துறை. இதை எடப்பாடிக்கு எதிரான முக்கியமான துருப்பாக கருதுகிறது ஆளும் தரப்பு.”.“அடேங்கப்பா...”“ஆனால், இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை எடப்பாடி. நீதிமன்ற வெற்றிகளைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையமும் தன்னை அங்கீகரித்ததில் ஏகத்துக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் மனிதர்.ஏப்ரல் 20ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் கிளம்பினர். அப்போது, சென்னை மாவட்டத்தின் எட்டு மாவட்டச் செயலாளர்களை மட்டும் தனது அறைக்கு அழைத்தவர், ‘நான் மன உளைச்சலில் இருந்த காலகட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தது நீங்கள்தான்.அதே உறுதியுடன் எப்போதும் இருங்கள். இனி ஒற்றைத் தலைமைதான். அதில் மாற்று சிந்தனையே வேண்டாம். இப்போதும் சிலர் வழிகாட்டுதல் குழு பற்றி முணுமுணுப்பதாகக் கேள்விபட்டேன். வழிகாட்டுவதற்கு நான் இருக்கும்போது குழு எதற்கு? சட்டசபை வளாகத்தில் பன்னீரை பார்த்தீர்கள்தானே... மனிதர் தனியாக நின்றுக்கொண்டிருந்தார்... ஈ, காக்காய்கூட அவரை சீந்தவில்லை. இரு நாட்களுக்கு முன்பு பன்னீர் மதுரைக்கு சென்றபோதும் யாரும் அவரைச் சென்று பார்க்கவில்லை. எனக்கு எதிராக யார் வந்தாலும் இதுதான் நிலைமை...” என்று எச்சரிகை விடுத்துள்ளார்.”வெயிலுக்கு இதமாக சிஷ்யை கொடுத்த ரோஸ்மில்க்கை குடித்து விட்டு அடுத்த தகவலை ஆரம்பித்தார் வம்பு.“இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பா.ஜ.க-வின் மையக்குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற முக்கியமான அரசியல் நகர்வுகள், அடுத்து செய்ய வேண்டிய திட்டங்கள் போன்றவை இதில் விவாதிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 20ம் தேதி தமிழக பா.ஜ.க-வின் மையக்குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றன. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி..காரணம், அண்ணாமலை விவகாரம்தானாம். தி.மு.க., அ.தி.மு.க. புள்ளிகளை அடுத்து தமிழகத்தில் தனக்கு எதிராக செயல்படும் சில பா.ஜ.க புள்ளிகளின் சொத்துகள் பட்டியலையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளதாம் அண்ணாமலை அண்ட் கோ. இதுகுறித்து மையக்குழு கூட்டத்தில் பிரளயத்தை எழுப்ப சிலர் காத்திருந்தார்கள். இதைக் கேள்விபட்டுதான் கூட்டத்தையே ரத்துசெய்துவிட்டாராம் ரவி.” “சரிதான்...”“அரசியல் விவகாரங்களில் தனக்கு முக்கியமான பாயின்ட்டுகளை எடுத்துக் கொடுக்கவும், யூகங்களை வகுத்துக் கொடுக்கவும் ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருந்தார் அண்ணாமலை. தற்போது அந்தக் குழுவேகூட அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கிறது என்கிறார்கள்... ‘நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்பதில்லை. நம்மையும் மதிப்பதில்லை. எதைப் பேச வேண்டாம் என்று சொல்கிறோமோ அதையே பேசுகிறார்’ என்று குமுறுகிறார்கள்.”சந்தோம் பக்கம் சத்தம் கேட்டதே?”“உமக்கும் கேட்டுவிட்டதா... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சென்னை சாந்தோமில் வசித்து வருகிறார். ஆட்சிபோன பிறகு பெரும்பாலும் இவர் கட்சியினரை சந்திப்பதில்லையாம். இது தலைமைக்கழகம் வரை புகாராக எதிரொலித்தது.இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் கட்சியினரை சந்தித்தாலும், சந்திப்புக்கு முன்பு மணிக்கணக்கில் காக்க வைக்கிறாராம். மெல்ல மெல்ல கூட்டம் சேர்வதை சி.சி.டி.வி வழியாக பார்த்து உறுதி செய்த பிறகே மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறார்.இப்படித்தான் கடந்த வாரத்தில் ஒரு கட்சி நிர்வாகியை கால்கடுக்க நெடுநேரம் நிற்க வைத்தாராம். திருமண பத்திரிகை வைக்க வந்த அவர், கதவு திறந்ததும் ஜெயகுமாரிடம், ”அண்ணே இது எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி. இப்படி இருக்காதீங்க. அதை சொல்வதற்குதான் இவ்வளவு நேரம் நின்றேன்” என்றவர் கடைசிவரை கையில் இருந்த தாம்பூலத்தை ஜெயக்குமார் கையில் கொடுக்கவில்லை.அதை தன் டிரைவரிடம் கொடுத்து காரில் வைக்கச்சொல்லி நகன்றவர், காரில் ஏறி அமர்வதற்கு முன்பு ’இனி இவர் எத்தனை தேர்தல் வந்தாலும் ஜெயிக்கவே மாட்டார்’ என்று திட்டிவிட்டே கிளம்பியிருக்கிறார்” என்ற வம்பு, “வருமான வரித்துறை வட்டாரத்தில் சலசலப்புகள் தெரிகின்றன. புது ஆட்களின் வருகை தென்படுகிறது. ரகசியமாக எதையோ திட்டமிடுகிறார்கள். அநேகமாக ரெய்டு இருக்கலாம். உமது நிருபர் படையை உற்று கவனிக்கச் சொல்லும்...” என்றபடி கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு கிளம்பினார்!