சென்னை தலைநகரமா, இல்லை கொலை நகரமா? என்று பதறவைக்கும் அளவுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்திருக்கும் அரசியல் கொலைகளால் நடுங்கிக்கிடக்கிறார்கள், சென்னைவாசிகள்.சென்னை கே.கே. நகர் அம்பேத்கர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் வி.சி.க. நிர்வாகியான குட்டி என்கிற ரமேஷ். ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் டீ குடிக்க வந்தார். அப்போது அங்கு வந்த காரில் இருந்து இறங்கியவர்கள் ரமேஷை கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டு காரில் ஏறிப் பறந்தனர். இது முதல் சம்பவம்..இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அதே நாள் இரவு அரங்கேறிய சம்பவம் கொஞ்சம் நடுக்கத்தை அதிகமாகவே கூட்டியது. தமிழக பா.ஜ.க-வின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநிலப் பொருளாளராக இருந்தவர், சங்கர். இவர், ஏப்ரல் 27ம் தேதி இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இன்னொரு காரில் வந்து வழிமறித்த மர்ம கும்பல், சங்கரின் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கித் தப்பியோடிய சங்கரை ஓட ஓட விரட்டிச் சென்று நடுரோட்டில் கூறுபோட்டது கும்பல். சங்கர் பா.ஜ.க. நிர்வாகி மட்டுமல்ல. ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும்கூட.இந்த இரு படுகொலைகள் மட்டும் அல்ல. சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளன. பட்டப்பகலில் அரசியல் வி.ஐ.பி.க்கள் வெட்டி கொலை செய்யப்படுவதையெல்லாம் கண்டு பதறிப்போயிருக்கும் பொதுமக்கள், தலைநகர் சென்னையில் ‘ரவுடிகள் ராஜ்ஜியம்’ நடப்பதாகக் கதறுகிறார்கள்..இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். “சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குட்டி என்ற ரமேஷ், ‘ரியல் எஸ்டேட் பிசினஸ்’செய்து வந்தார். கட்சிக்காக பணத்தை தண்ணீராக செலவழித்தவர், குறுகிய காலத்திலேயே கட்சியில் மிகப்பெரிய இடத்துக்கு வந்தார். ஏப்ரல் 14ம் தேதி நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின் போது கூட வடை, பாயசத்துடன் பொதுமக்களுக்கு விருந்து அளித்து அசத்தினார்.ரியல் எஸ்டேட் பிசினஸில் இவருக்கு ஏகப்பட்ட பகை. இதனால் கூலிப்படை கூட்டம் ஒன்றை எப்போதும் நெருக்கமாக வைத்திருந்தார். மாதம் ஒரு முறை கூலிப்படைக்கு வேண்டியதை திருப்தியாக செய்வார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் 200 ஏக்கர் நில பேரத்தில் ஈடுபட்ட ரமேஷ், அப்போது அங்கே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, தன்னை எதிர்த்தவரை தன் கைவசம் இருந்த கூலிப்படையினர் மூலம் போட்டுத்தள்ளினார். அதுபோலவே சென்னை எம்.கே.பி. நகரில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் தகராறிலும் நிலத் தரகர் ஒருவரின் கதையை முடித்திருக்கிறார். இதுதவிர சில அடிதடி வழக்குகள், கட்டப்பஞ்சாயத்துகள் என ஊரைச் சுற்றி பகையைத் தேடி வைத்திருந்தார், ரமேஷ்..இது போன்ற பிரச்னைகளில் இருந்தெல்லாம் தப்பித்துக் கொள்ளவே சிறுத்தைகளிடம் ஐக்கியமாகி , கட்சித் தலைமை மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார், ரமேஷ். ஆனாலும் எதிர் ‘டீம்’ மூன்று தடவை அவருக்கு ‘ஸ்கெட்ச்’போட்டது. அதில் இருந்து மிக லாகவமாக தப்பித்த ரமேஷ், இந்தமுறை வசமாக மாட்டிக்கொண்டார்” என்றார் விளக்கமாக.பா.ஜ.க நிர்வாகியான சங்கர் கொலை குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம்... “சங்கரின் நட்பு வட்டம் பெரியது. அதில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களும் அடக்கம். சங்கர் ‘ஸ்கிராப்’ வணிகத்திலும் கொடிகட்டிப் பறந்ததால், பலமான தொழில் போட்டியும் நிலவியது. இவரின் நண்பர்களில் ஒருவரான குமரன் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பழிக்குப் பழியாக குமரன் படுகொலைக்குக் காரணமான மண்ணூர் வெங்கடேசனின் கதையை முடித்தனர். இதன் தொடர்ச்சியாகவே சங்கரை கொடூரமாக போட்டுத் தள்ளி இருக்கிறது வெங்கடேசனின் ‘டீம்’.இந்தக் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார், ஜெகன், குணா, சரத்குமார் உள்ளிட்ட 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுதவிர பெண் விஷயத்தில் ஏற்பட்ட மோதலில் சங்கரின் கதை முடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மைகள் தெரியவரும்” என்றார்..நடந்த சம்பவங்கள் குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதியிடம் கேட்டதற்கு, “ பெரும்பாலான கொலைகளுக்குக் காரணம் முன்பகை, தொழில் போட்டி ஆகியவைதான். இதுதவிர சில சமயங்களில் ஆதாயக் கொலைகளும் நடப்பதுண்டு. இதுபோன்ற கொலைகளைத் தவிர்க்க போலீஸாரால் முடியும். அதற்காக சரியான முறையில் திட்டமிட்டு, பழைய குற்றவாளிகளை தேடிப்பிடித்து கட்டுக்குள் வைக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் பாயவேண்டும். போலீஸாரைப் பார்த்தாலே குற்றவாளிகள் நடுநடுங்கும் அளவுக்கு நிலைமை வந்தால், கொலைகள் தடுக்கப்படும்”என்றார் ஆதங்கத்துடன்.‘தொடர் கொலைகள் தடுக்கப்படுமா?’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் கேட்டதற்கு “சென்னை நகரில் நடக்கும் கொலைகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளில் பலர், ‘பழைய குற்றவாளிகள்’ என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்களை ஒடுக்குவதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குப் பிறகு குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது” என்றார் உறுதியுடன்.அவசரத் தேவை ஓர் அதிரடி ஆக்ஷன்!கணேஷ்குமார்