கடவுளின் தேசம் என்று பெருமை பேசும் கேரளம், அதன் சாக்கடைக் கழிவுகளை மட்டும் கவனமாக தமிழகத்துக்குத் திருப்பி, குடிநீரை மாசுபடுத்தும் வகையில் ஆடுகிறது, விபரீத விளையாட்டு.முல்லைப் பெரியாறு தண்ணீரை நம்பி தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழெட்டு நகராட்சிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மக்களும் உள்ளனர். இந்த பகுதி மக்களுக்கு கேடு விளைவிக்கும் கேரளத்தின் செயல் குறித்துப் பேசினார், சமூக ஆர்வலர் கே.பி.முத்தையா.”தேக்கடி, குமுளி போன்ற சுற்றுலா தலாங்களில் ஸ்டார் ஹோட்டல் தொடங்கி சாதாரண விடுதிகள், ரிசார்ட்கள் உள்ளன. இங்கிருந்தும் மக்களின் குடியிருப்புகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் மொத்தமும் ஆனவச்சால் ஓடை வழியாக தமிழகத்திற்குச் செல்லும் முல்லைப் பெரியாறில் நேரடியாக கலக்கிறது. இந்தத் தண்ணீர் தமிழகத்திற்கு நுழைந்த 6வது கி.மீட்டரில், லோயர் கேம்ப் தலைமதகுப் பகுதியில் கூடலூர், கம்பம், சின்னமனூர் நகராட்சிகளுக்கும், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, தேவாரம், பண்ணைபுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்குச் செல்கிறது. மேலும், முல்லைப் பெரியாறு தண்ணீர் குடிநீருக்கு பல கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும் தண்ணீர் இங்கிருந்துதான் செல்கிறது..மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு கேரளாவிலிருந்து செல்லும் சுரங்கப் பகுதியையும் அதற்கு முன்பு கலக்கும் கழிவுநீர் ஓடையையும் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு பல லட்சங்களை செலவு செய்து சாக்கடையில் வரும் மரம், செடி, கொடிகள், குப்பைகள் சுரங்கப் பகுதியை அடைக்காமல் பாதுகாக்கும் வேலையைத்தான் செய்ய முடிகிறது, சாக்கடை நீர் கலப்பதை நிறுத்த முடியவில்லை. அதோடு, முல்லைப் பெரியாறு அணை, நீர் தேங்கும் பகுதி பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்திருப்பதால், அவர்கள் தமிழக அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்ப்தும் கெடுபிடி செய்வதுமே வழக்கமாக உள்ளது.வன விலங்குகள் நிறைந்த பகுதியில் சாக்கடை நீர் ஓடுவதையும், அது ஆற்றில் கலப்பதையும் எப்படி அனுமதிக்கிறார்கள்? இந்த சாக்கடை தண்ணீரை குடித்து வனவிலங்குகள் பாதிக்காதா? அதுவும் கோடை காலத்தில் அந்தப் பகுதியில் சென்றால் கருப்பு கலரில் துர்நாற்றம் வீசும் கழிவு சாக்கடையை மனசாட்சி இல்லாமல் சில கிலோமீட்டரில் குடிநீராக பயன்படுத்தும்போதும், தடுத்து மாற்று வழி செய்ய வேண்டாமா கேரள அரசு? இதற்காக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்ÕÕ என்றார்..அடுத்து பேசிய பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ’’குமுளி, தேக்கடி, அட்டப்பள்ளம், மன்னாக்குடி, ஒட்டகத்தல மேடு, அமராவதி பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள், ரிசார்ட்டுகள் மட்டுமின்றி 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பொதுக்கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக ஆனவச்சால் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு திறவை கால்வாயில் கலக்கிறது. பட்டவர்த்தனமாக இந்த கேடுகெட்ட செயலை அரங்கேற்றி வருகிறது குமுளி பஞ்சாயத்து நிர்வாகம்.கேரளாவில் எந்த ஆற்றிலும் சாக்கடை கழிவுகளை கலக்க அம்மாநில அரசு அனுமதிப்பதில்லை. ஆறுகளை சுத்தமாக பராமரிப்பதில் மலையாளிகள் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறார்கள். கேரளாவில் ஓடும் எந்த ஆற்றிலும் இரண்டு கைகளால் தண்ணீரை அள்ளிப் பருக முடியும் என்கிற நிலையே இன்றளவும் நீடித்து வருகிறது. அவ்வளவு சுத்தமாக தங்களுடைய ஆற்றை பராமரிப்பவர்கள் கிட்டத்தட்ட 1 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாற்றை அதன் தொடக்க முனையிலேயே சீரழிப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல..மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் மலையாளிகள் இந்த விஷயத்தில் தங்களுடைய நேர்மையை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இல்லை அப்படித்தான் கழிவுநீரை முல்லைப் பெரியாறோடு கலந்து விடுவோம் என்றால் நீங்கள் ஒய்யாரமாக மாட்டி வைத்திருக்கும் கடவுளின் தேசம் என்கிற போர்டை கழற்றி எறியுங்கள்...ÕÕ என்றார் ஆவேசமாக.இதுகுறித்து முல்லைப் பெரியாறு சிறப்பு கோட்ட தமிழக பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஷார் இர்வினோவிடம் கேட்டோம். “தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இந்த பிரச்னை குறித்து எழுதியிருக்கோம். குமுளி பஞ்சாயத்து நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு பிளான்ட் ஒன்று போடுவதாகச் சொன்னார்கள். அதனை முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைப்பதற்கு பிளான் பண்ணினார்கள். இந்த விஷயத்தில் தமிழக அரசின் காவேரி டெக்னிக்கல் கமிட்டி அமைப்பு மூலம் வேறு இடத்தில் பிளான்ட் போடுவது நல்லது. சுத்திகரிப்பு பிளான்ட் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க முன்வந்தால், தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் நேரடியாக அழைத்துச் சென்று பேசலாம் என்று கேரள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் முறைப்படி எழுதியிருக்கேன்..அதேபோல், ஆயிரம் கன அடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் செல்லும்போது, பெரிதாக தெரிவதில்லை. ஆனால், தற்போது குடிநீருக்கு நூறு கன அடி தண்ணீர் செல்வதால், மிகவும் மோசமாக உள்ளது. இதைத் தவிர்க்க தற்போது, கோடை காலம் முடியும் வரை சாக்கடை தண்ணீரை ஆற்றில் கலக்காமல் இருக்க மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து தடுத்து நிறுத்த முயற்சி செய்து வருகிறேன். அதுக்கான பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் பேசவுள்ளேன்ÕÕ என்றார் நிதானமாக.விஷத்தை ஆரம்பத்திலேயே முறிச்சிடுங்க._ பொ.அறிவழகன்