“தலையில வெட்டு சரியா விழலை... இப்படியாடா சொதப்புவீங்க?” -பள்ளி மாணவி அனுப்பிய இந்த ஒற்றை வாய்ஸ் மெசேஜ், ஒட்டுமொத்த தேனி போலீஸையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தந்தைக்கு மகளே சவக்குழி வெட்ட நினைத்த கதையில், யாருமே எதிர்பார்க்காத திகில் ட்விஸ்ட்தான் இந்தக் கட்டுரை!``என்ன நடந்தது?" என பி.சிபட்டி காவல்நிலைய போலீஸாரிடம் கேட்டோம். “பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரைச் சேர்ந்தவர், வேணுகோபால் பாண்டியன். பழைய இரும்பு மொத்த வியாபாரி. இவருக்கு ஒரு மகனும் 16 வயசுல ஒரு மகளும் இருக்காங்க. போனவாரம், ராத்திரி 8 மணியளவுல, தலையில பலத்த காயத்தோட விழுந்து கிடந்திருக்கார், வேணுகோபால் பாண்டியன்.பக்கத்துலயே அவரோட ஸ்கூட்டரும் விழுந்துகிடந்ததால தவறிவிழுந்துட்டார்னு நினைச்சு, தேனி அரசு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அங்க, அவரோட தலையில பத்துக்கும் மேற்பட்ட இடங்கள்ல வெட்டுவிழுந்திருக்கறது தெரியவந்தது. உடனடியா போலீஸுக்கு தகவல் சொன்னாங்க.வழக்குப்பதிவு செஞ்சு விசாரிக்கத் தொடங்கினோம். அந்தப் பகுதியில இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செஞ்சோம். அதுல டூவீலர்ல போன வேணுகோபாலை இன்னொரு டூவீலர்ல சிலர் பின்தொடர்வது தெரிஞ்சுது. அதோட பதிவு எண்ணை வச்சு விசாரிச்சோம். அப்பதான் கண்றாவியான விஷயங்கள் எல்லாம் தெரியவந்துச்சு” என்றவர், தொடர்ந்து விவரித்தார்.. “வேணுகோபால் பாண்டியனின் மகள், பெரியகுளத்தைச் சேர்ந்த முத்துகாமாட்சி என்கிற வாழவந்தானை காதலிச்சுட்டு வந்திருக்கா. அதை அவளோட அப்பா கண்டிச்சிருக்காரு. இந்த விஷயம் தெரியவந்ததும் முத்துக்காமாட்சியைப் பிடிச்சு விசாரிச்சோம். அப்போ, தானும் தன் நண்பர்களான பெரியகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார், கண்ணப்பன் ஆகியோரும் சேர்ந்து வேணுகோபால் பாண்டியனை அரிவாளால் வெட்டினதை ஒப்புக்கொண்டான்.அவனோட செல்போனை வாங்கிப் பார்த்தப்ப, அதுல இருந்த வாய்ஸ் மெசேஜை கேட்டு நொந்துபோயிட்டோம். அந்தப் பெண் போன வருஷம் தேனியில படிச்சப்பவே அங்க ஒரு பையனைக் காதலிச்சிருக்கா. விஷயம் தெரிஞ்சதும் வேணுகோபால் பாண்டியன் மகளை அடிச்சு கண்டிச்சிருக்கார்.அதுக்கப்புறம், பொண்ணை தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டார். அங்கேயும் இங்கேயுமா மாறிமாறி போயிட்டு வந்துகிட்டு இருந்திருக்கா. ரெண்டு மாசத்துக்கு அப்புறம் காதலை மறந்திருப்பான்னு நினைச்சு, `படிப்பு பாழாகுது, இங்கேயே வந்துடு'ன்னு கூப்பிட்டிருக்கார். ஆனா அந்தப் பெண் வரவிரும்பல..`ஏன் இப்படி அடம்பிடிக்கிறா?'ன்னு விசாரிச்சப்பதான், அந்த ஊர்ல இருக்கற முத்துக்காமாட்சிக்கும் அவளுக்கும் லவ் ஏற்பட்டிருக்கற விஷயம் தெரியவந்துச்சு. அவங்க ரெண்டுபேரும் தவறான தொடர்புல இருந்ததையும் கண்டுபிடிச்சுட்டார். மகளைக் கண்டிச்சும் கேட்காததால கடுமை காட்டியிருக்கார், வேணுகோபால் பாண்டியன்.அதனால, தன் காதலனோட சேர்ந்து அப்பாவையே தீர்த்துக்கட்ட திட்டம்போட்டு காதலன்கிட்ட பேசியிருக்கா. அவன் ஆரம்பத்துல மறுத்திருக்கான். ஒருகட்டத்துல அவனால மறுக்கவும் முடியல. அதுக்கப்புறம் அப்பாவை எப்படிக் கொல்லணும்னு இந்தப் பொண்ணுதான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கா.`இனிமே உங்க பேச்சைக்கேட்டு ஒழுங்கா படிக்கப் போறேன்'னு நாடகம் ஆடியதை நம்பி, பொண்ணை ப்ளஸ் ஒன்ல சேர்த்துவிட்டிருக்கார். ஸ்கூலுக்கு போய்வந்துட்டே, இன்ஸ்டாகிராம்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பி, அப்பாவோட நடமாட்டத்தைப்பத்தி தகவல் கொடுத்துகிட்டே இருந்திருக்கா.சம்பவத்தன்னைக்கு அப்பாகிட்டே ஷார்ட்ஸ் வேணும்னு கேட்டிருக்கா. அதை வாங்க அவர் போனதும், காதலனுக்கு தகவல் பாஸ் பண்ணியிருக்கா. உடனே முத்துக்காமாட்சி தன் நண்பர்களோட வேணுகோபால் பாண்டியனை தொடர்ந்திருக்கான். பைக்ல வேகமா போய்கிட்டிருந்த அவரை திடீர்னு எட்டி உதைஞ்சிருக்கான். நிலைதடுமாறி விழுந்தவரை சகட்டுமேனிக்கு வெட்டித் தள்ளிட்டு, `சக்ஸஸ்'னு, வாய்ஸ் மெசேஜ் போட்டுட்டு ஓடியிருக்காங்க” என்று சொல்லி நிறுத்தியவர்கள், அடுத்து சொன்னதுதான் பகீர் ரகம்.. “படுகாயத்தோட துடிச்ச வேணுகோபால் பாண்டியனை ஆம்புலன்ஸ்ல கொண்டுபோகும்போது அப்பாவி மாதிரி கதறிஅழுதுகிட்டு கூடவே வந்தா அந்தப் பொண்ணு. அப்பவே, ‘தலையில வெட்டு சரியாவே விழலை. இவர் உயிர்பிழைக்கக் கூடாதுடா... முட்டாப் பயலே சரியா எதையும் செய்யமாட்டியா?’ன்னு முத்துக்காமாட்சியைத் திட்டி இவ அனுப்பின வாய்ஸ் மெசேஜை கேட்டு எல்லாரும் திகைச்சுப்போயிட்டோம்.இதுல, கொலையாளிக்கு 2 லட்ச ரூபாய் பணமும் கொடுத்திருக்கா இந்தப் பாசக்கார மகள். மைனர் பெண் என்பதால சிறார் சிறையில அடைச்சிருக்கோம். முத்துக்காமாட்சியும் அவன் நண்பர்களும் கம்பி எண்ணிகிட்டிருக்காங்க. ஆஸ்பத்திரியில வேணுகோபால் பாண்டியன் சீரியஸா இருக்கார்” என்றனர் அதிர்ச்சி விலகாமல்.மாணவியின் செயல் குறித்து அரசு மருத்துவரும் மனநல ஆலோசகருமான பிரீத்தா நிலாவிடம் கேட்டோம். ``பொதுவா ஆணோ பெண்ணோ ஹார்மோன் மாற்றம் என்பது இயல்புதான். இதை பெற்றோர் கவனித்து சரியான முறையில் எடுத்துச் சொல்லவேண்டும். ஆனால், இன்றைக்குப் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளோடு செலவிடும் நேரத்தைவிட, மொபைலுக்கு செலவிடும் நேரமே அதிகம்..இதுபோன்ற நேரத்தில் தன்னுடன் அன்பாகப் பேசுபவரை நோக்கி நகர்ந்துவிடுகிறார்கள். குடும்பங்கள் சிதைவதற்கே இதுதான் காரணம். இதற்கு ஒரே தீர்வு, குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவிடுவதுதான். அதையும் மீறி அவர்கள் தவறு செய்வது தெரிந்தால், அவர்களைத் திட்டுவதைவிட, முறையாக கவுன்சலிங் எடுத்துக்கொள்ளச் செய்வதுதான் சரியான வழி” என்கிறார்.ஐ.டி உலகம், அப்பாக்களைக்கூட வில்லனாக்கிவிடுகிறது! - பொ.அறிவழகன்படங்கள்: சுகுமார்