பொருளாதாரம் படிக்க வந்த மாணவியின் அழகை காம ரசம் சொட்ட வர்ணித்த தனியார் கல்லூரி பேராசிரியர், உளவியல் பாடம் படிக்க வந்த மாணவிகளுக்கு செக்ஸ் பாடம் எடுத்து பாலியல் தொல்லை தந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட மூவரை கைது செய்து சிறையில் தள்ள, களங்கப்பட்டுக் கிடக்கிறது மதுரை!மதுரை கருமாத்தூர் அருகே உள்ளது அருளானந்தர் தன்னாட்சி கல்லூரி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரிப் பேராசிரியர்கள் இவ்வளவு கூத்தும் நடந்திருக்கிறது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் நம்மிடம், “இந்தக் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ஜெகன் கருப்பையா. இவர் கன்னியாகுமரியில் இருந்து படிக்க வந்த மாணவி கவிதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அழகை வர்ணிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்..‘உன் நினைவாகவே இருக்கிறது. பேப்பர் திருத்தும் போதெல்லாம் உன் முகம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது. நீ ஏன் சுடிதாருக்கு மேல் ஷால் போட்டுட்டு வர்றே, உனக்குத்தான் ஒண்ணுமே இல்லையே...” என்றெல்லாம் அந்த மாணவியைப் பார்க்கும் போது வக்கிரமாக வர்ணித்திருக்கிறார் ஜெகன் கருப்பையா. ஒரு கட்டத்தில் இவரது பாலியல் தொல்லை தாங்க முடியாத கவிதா இதுபற்றி கல்லூரி நிர்வாகம், மகளிர் ஆணையம், முதல்வரின் தனிப்பிரிவு, தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட 15 இடங்களுக்கு புகார் அனுப்பினார். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, மகிளா நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதன்பிறகே, நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கின..தொடர்ந்து செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தியின் விசாரணையில் பல்வேறு பேராசிரியர்கள் தாமாக முன்வந்து ஜெகன் கருப்பையாவின் பாலியல் லீலைகளை அடுக்கினார்கள். அதன்பிறகே ஜெகன் கருப்பையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம்” என்றவர்கள் அதன் தொடர்ச்சியாக நடந்தவற்றையுக் விவரித்தார்கள்.... “கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இதே கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கிலத் துறை பேராசிரியர் ஞானசேகரனையும் இப்போது கைது செய்துள்ளோம். உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவி சுமிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்தக் கல்லூரி மாணவர் கருப்பசாமி உள்ளிட்ட அவரின் நண்பர்கள், மிரட்டி ஞானசேகரனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். இதேபோன்று இன்னும் சில மாணவிகளையும் அவருக்கு விருந்தாக்கியுள்ளனர். அப்படி சிக்கிக்கொண்ட மாணவிகளிடம் கருப்பசாமி உள்ளிட்ட மாணவர்களும், பாலியல் சீண்டலில் ஈடுபட, விஷயம் கல்லூரிக்குள் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து, இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய தென்மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கர்க் உத்தரவிட்டார். தொடர்ந்து பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதே கல்லூரியின் மற்றொரு பேராசிரியர் ஸ்டாலின் என்பவரும் இதே புகாரில் சிக்கியிருக்க, அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்” என்றார்கள்..இந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே பொதுமக்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி பேசிய மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன், “எந்த சச்சரவும் இல்லாமல் 40 வருடங்களாக இயங்கிய அருளானந்தர் கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்கிறது.ஞானசேகரன், ஸ்டாலின் ஆகியோர் மீது புகார் வந்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்காது. கல்லூரி நிர்வாகம் மாற்றப்பட்டு புதிய நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும். கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்” என்றார் ஆவேசமாக..அருளானந்தர் கல்லூரி மட்டுமல்ல, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் மாடக்குளம் கருப்பையாவும் இதேபோன்ற விவகாரத்தில் கைதாகியிருக்கிறார். உளவியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றுச் சென்றவருக்கு வரும் ஜூன் மாதம் வரை பணி நீட்டிப்பு கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். அவர் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசியது புகாராகி கைதாகியிருக்கிறார்..இதுபற்றி பேசிய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் பிரேமலதா, “உளவியல் துறை பேராசிரியர் கருப்பையா, மாணவிகளிடம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அவர்களிடம் பேசுவது சகஜமாக இருந்திருக்கிறது. ‘ஆண் குழந்தை வேண்டுமா? பெண் குழந்தை வேண்டுமா? அதை எப்படி பிறக்க வைக்க வேண்டும் தெரியுமா? அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் அவரின் மகள் வயது மாணவிகளிடம் வக்கிரமாக பேசியிருக்கிறார். இதனால், கோபமடைந்த மாணவி ஒருவர், துணைவேந்தரிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க்கிடம் புகார் கொடுத்தார். அதன் பிறகு தான் பேராசிரியர் கருப்பையாவும் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார் கோபமாக.அருளானந்தர் கல்லூரியின் துணை முதல்வர் ரூபஸிடம் இதுபற்றி கேட்டோம்... “இரண்டு பேராசிரியர்கள் மீது பாலியல் வழக்குப் போடப்பட்டுள்ளது. வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார் சுருக்கமாக. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் சார்பாக பேசிய பேராசிரியர்கள், “அந்த மாணவி யாரிடமும் புகார் கொடுக்கவில்லை. கருப்பையா மீதும் யாரும் புகார் கொடுக்கவில்லை. நாங்களும் விசாரிக்கிறோம். போலீஸும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள் பட்டும்படாமல்.மாதா, பிதா, குரு... அதன் பின்னரே தெய்வம் என்கிறோம். நம்பிக்கை துரோகம் செய்யும் இவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனையாக இருக்கும்!- பாலா