“அரசு அலுவலகங்களில் எஸ்.சி., எஸ்.டி. சங்கங்களை தடை செய்ய வேண்டும்” என்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் திடீர் கொடி பிடிக்க… அவருக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள் அரசு ஊழியர்கள்!தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரான ஜான்பாண்டியன் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். சமீபத்தில் நெல்லையில் இந்தக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்தான், இப்படியொரு கோஷம் எழுந்துள்ளது. “ஏன் இந்த திடீர் கோஷம்?” என்று அந்தக் கட்சியின் நெல்லை நிர்வாகியான கண்மணி மாவீரனிடம் கேட்டோம். “மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திலும் எஸ்.சி., எஸ்.டி. சங்கங்கள் உள்ளன. இவர்கள் பட்டியல் சமூக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுப்பதில்லை. அதேபோல பிற சாதி ஊழியர்களையும் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். தவிர, உயரதிகாரிகளை மிரட்டவே இந்த சங்கங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த சங்கங்களை தடை செய்ய வேண்டும் என்கிறோம்.பி.சி.ஆர். என்கிற தீண்டாமை ஒழிப்புப் பிரிவையும் தடை செய்ய வேண்டும். அதையும் பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சிறு இடப் பிரச்னையில்கூட எதிராளி மீது பி.சி.ஆர். வழக்கு போடுகிறார்கள். சாதியைச் சொல்லி திட்டுவதாக பொய் வழக்கு போடுகிறார்கள். இதனால், பட்டியல் சமூக மக்களால் பொது இடங்களில் சகஜமாக புழங்க முடியவில்லை; வியாபாரம் செய்ய முடியவில்லை. உதாரணத்துக்கு, நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அங்கு பட்டியல் சமூகத்தினருக்கு வேலை கொடுப்பதில்லை. பி.சி.ஆர். வழக்குப் போட்டு விடுவார்களோ என்கிற பயமே இதற்குக் காரணம்” என்றார் ஆவேசத்துடன்..மத்திய, மாநில அரசு எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நலச்சங்க மாவட்டத் தலைவர் சுந்தரமோ, “சங்கம் அமைப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமை. இதை யாரும் மாற்ற முடியாது. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவே இட ஒதுக்கீடு. இப்போது ஜான் பாண்டியன் கட்சியினர் எஸ்.சி., எஸ்.டி. சங்கங்களை தடை செய்யச் சொல்வது சரியல்ல. இப்படிச் சொல்பவர்கள் சொந்த சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள்? பட்டியல் சமூகத் தலைவர்கள் சொந்த சமூகத்தினருக்காக போராடுவதில்லை. மாறாக, தங்கள் சொத்துக்களை பாதுகாக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இருப்பதால் பா.ஜ.க. அரசுதான் ஜான் பாண்டியன் போன்றவர்களைத் தூண்டிவிடுகிறது” என்றார் காட்டமாக! “இதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறதா?” என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஊடகப் பிரிவின் செந்தூர் பாண்டியனிடம் கேட்டோம். “தமிழ்நாட்டில் யார் என்ன சொன்னாலும், அதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்று சொல்லும் கூட்டம் பெருகி வருகிறது. ஜான் பாண்டியனுக்கு என்று தனிக் கொள்கை இருக்கிறது. யாருடைய பேச்சையும் அவர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார் சீரியஸாக.புதுசு புதுசா கிளப்புறாங்களே..!அ.துரைசாமி