தனக்கு இருக்கும் ‘அற்புத’ சித்திகளைப் பற்றி ஈஷாவின் ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோக்கள் ரொம்பவே பிரபலம். அந்த வகையில், பாம்பு விஷம் பற்றி ஜக்கி வாசுதேவ் பேசிய வீடியோவுக்கு எதிராக சைபர் க்ரைமில் கொடுக்கப்பட்டுள்ள புகாரால், எகிறுகிறது க்ரைம் ரேட். புகார் அளித்திருக்கும் இந்து மதப் பற்றாளரும், ‘நம் கோயில் நம் பெருமை நம் உரிமை’ அமைப்பின் நிறுவனருமான ரங்கராஜன் நரசிம்மனிடம் பேசினோம். “ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவின் பேச்சுக்கள் மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போலவும், மக்களை ஆபத்தில் சிக்க வைப்பதாகவும் உள்ளன. குறிப்பாக பாம்புகளைப் பற்றி அவர் பேசியிருப்பது தவறு. பாம்பின் சுபாவம் கடிப்பது. எனவே பாம்பை யாரும் வெறும் கையால் தொட முயற்சிக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் ஜக்கி, ‘பாம்புகளோடு எனக்கு ஐந்து வயது முதலே தொடர்பு உள்ளது. நாகப் பாம்பை அதன் நடுப்பகுதியைப் பிடித்து தூக்கினால் அது அமைதியாக இருக்கும். நீங்கள் பதட்டம் காட்டாமல் இருந்தால் அதுவும் எதிர்ப்பைக் காட்டாது. நான் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைதியாக தியானம் செய்துவிட்டு கண்ணைத் திறக்கும்போது என் முன்னால் பல பாம்புகள் இருக்கும்’ என்று சொல்கிறார். அதோடு, அவரே ராஜ நாகம் போன்ற சில பாம்புகளை தூக்கும் வீடியோக்களும் உள்ளன..இன்னொரு வீடியோவில் நாகப் பாம்பை தன் கழுத்தில் போட்டபடி ஜக்கி பேசிக்கொண்டு இருக்கிறார். பார்ப்பதற்கு அது நாகம் போல தெரிந்தாலும், உண்மையில் அது எலி பிடிக்கும் சாரைப் பாம்பு. ஆனால் மக்கள் அவரது பேச்சால், அதை நாகம் என்று நம்பி ஏமாற வாய்ப்புள்ளது. இன்னொரு வீடியோவில் வேறு ஒரு கதை சொல்கிறார். காட்டில் கிடந்த ஒரு கல்லைத் தூக்கினாராம். அதன் அடியில் ஒரு பாம்பு இருந்ததாம். உடனே அதைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டாராம்.இதெல்லாம் என்ன பிரமாதம் என்பதைப் போல ஸ்பெஷல் ஐட்டமாக, ஒரு நிகழ்ச்சியில் கண்களில் தாரை தாரையாக நீர் வடித்தபடி அமர்ந்திருக்கிறார் ஜக்கி. அவர் கையில் ஒரு டெஸ்ட் டியூப் உள்ளது. அதில் ஏதோ திரவம். அவரது சிஷ்யப் பெண் ஒருவர் பவ்யமாக நடந்து வந்து, அவர் காலில் எதையோ வைத்துத் தேய்க்கிறார். பிறகு வழக்கம்போல, மக்களிடம் பேசத் தொடங்குகிறார். தன் கையில் இருப்பது நாகப் பாம்பின் விஷம் என்று கூறும் ஜக்கி, அதை பாலில் கலந்து ‘மடக் மடக்’ என்று குடிக்கிறார். அதைப் பார்த்ததுமே அதிர்ந்துவிட்டேன். இதெல்லாம் என்ன வேலை? யாருக்காக இதையெல்லாம் செய்து காட்டுகிறார்? இதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறார்? தானே சிவன். தனக்கு அற்புத சக்தி இருக்கிறது என்று மக்களை நம்ப வைக்க நினைக்கிறாரா ஜக்கி?.பாம்புகளில் ராஜ நாகம் போன்றவை கடும் விஷம் வாய்ந்தவை. எனவே பாம்புகளின் தன்மை அறிந்து, மனிதர்கள் விலகி நடப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால் தனது வீடியோக்கள் மூலம் பாம்புகளைப் பற்றி தவறான புரிதலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார் ஜக்கி. இந்த வீடியோக்களை பார்க்கும் மக்கள் ஜக்கியைப் போலவே பாம்புகளிடம் நடந்துகொள்ள நினைத்தால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி. எனவே, மக்களை தவறாக வழிநடத்தும் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளேன்’’ என்றார்.இதற்கு விளக்கம் கேட்டு ஈஷாவின் செய்தித்தொடர்பாளர் பிரதீப்பை அணுகினோம். “பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கையை சத்குரு ஜக்கி வாசுதேவ் பரப்புவதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. உண்மையில் பாம்புகளைப் பற்றிய முறையான புரிதலை மக்களுக்கு கொண்டுசேர்க்கும் முயற்சியில்தான் சத்குரு ஈடுபட்டுள்ளார். நமது தென்னிந்திய கிராமங்களில் பாம்புகள் உலவுவது சர்வசாதாரணம். ஆனால் இன்னமும் மக்களுக்கு பாம்புகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. அதனால்தான் பல நேரங்களில் மக்கள் பயந்துபோய் பாம்பை அடித்து கொன்றுவிடுகிறார்கள். எனவே, பாம்புகளைப் பற்றிய பயத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக பல வீடியோக்களில் பேசியுள்ளார்.அடுத்தது பாம்பு விஷத்தைக் குடித்துக் காட்டியதன் மூலம் தனக்கு அற்புத சக்தி இருப்பதாக ஜக்கி காட்ட முயல்கிறார் என்று குற்றம் சாட்டுவதும் தவறு. காரணம் அந்த வீடியோவிலேயே சத்குரு தெளிவாக கெமிக்கல் சேர்க்கப்படும் விஷம் என்பது வேறு, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் உள்ள ‘வெனம்’ எனப்படும் நஞ்சு வேறு என்று சொல்கிறார். கெமிக்கல் விஷம் உடலில் எப்படி ஏறினாலும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் நஞ்சு நேரடியாக ரத்தத்தில் கலந்தால் மட்டுமே உயிருக்கு ஆபத்து. குடலில் புண் இல்லாமல், பாம்பு விஷத்தை யார் உட்கொண்டாலும் ஆபத்து இல்லை என்றே கூறியுள்ளார். இதன் மூலம் பாம்பு விஷம் தொடர்பான முக்கியமான மூடநம்பிக்கை ஒழிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே இப்படி வீடியோக்களை முழுவதுமாகப் பார்க்காமல் அரைகுறையாகப் புரிந்துகொண்டு முன்வைத்த குற்றச்சாட்டுகளே. எனவே ரங்கராஜன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே தேவையில்லாத ஆணிகள்...” என்று முடித்தார்..பாம்பு விஷத்தை உட்கொண்டால் மனிதனை பாதிக்குமா என்று வேலூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ராமலிங்கத்திடம் கேட்டோம். “பாம்பின் விஷம் கெமிக்கல் விஷங்களிலிருந்து மாறுபட்டது, புரோட்டீன் என்பது நிஜம். ஆனால், அதற்காக அதை குடிக்க முடியாது. ஏனென்றால், இயல்பாகவே எல்லோருக்கும் வாய், பற்கள், வயிறு போன்ற பகுதிகளில் கண்ணுக்குத் தெரியாத புண்கள் இருக்கும். அந்த புண்கள் வழியாக பாம்பு விஷம் உடலுடன் கலந்துவிடும் என்பதால், நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...’’ என்றார். அச்சச்சோ... - அபிநவ்