தமிழக அரசியல் களத்தை படு சூடாக்கியுள்ளது, அண்ணாமலை வெளியிட்டிருக்கும் தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப் பட்டியல். இதனை சட்டரீதியில் எதிர்கொள்வதாக தி.மு.க. அறிவித்திருக்கும் அதேநேரம், ‘பா.ஜ.க. ஃபைல்ஸ்’ ரிலீஸ் செய்யப்பட இருப்பதுதான், பரபர பொலிடிக்கல் டிவிஸ்ட். ‘ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்’ என்று சில மாதங்களாகவே அண்ணாமலை சொல்லி வந்தார். சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைத்து தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப் பட்டியல் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். அதில் தி.மு.க.வின் சொத்து மதிப்பாக 1 லட்சத்து 31 ஆயிரம் கோடி என அறிவித்து அலறவிட்டார். அதோடு ரஃபேல் வாட்ச் சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில், அதற்கொரு ரசீதும் வெளியிட்டார். அண்ணாமலை கமலாலயத்தில் தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சீனியர் வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ எம்.பி., பி.வில்சன் எம்.பி. ஆகியோர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள், ‘‘அண்ணாமலை சம்பந்தமில்லாத சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். யார் மீதெல்லாம் குற்றம் சாட்டியிருக்கிறாரோ அவர்களெல்லாம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அநேகமாக அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்று எச்சரிக்கை கொடுத்தனர்..தி.மு.க.வின் அடுத்தகட்ட மூவ் குறித்து அக்கட்சியின் சட்டத்துறை மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “இந்தியாவிலேயே வலிமையான வழக்கறிஞர் அணி தி.மு.க.வில்தான் இருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க. தலைவர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக தி.மு.க. சட்டத்துறை விரிவாக ஆய்வு நடத்தி வருகிறது. மேலும் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ள அமைச்சர்கள், தி.மு.க. புள்ளிகள் என ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களது வழக்கறிஞர்கள் மூலம் அண்ணாமலை மீது வழக்குத் தொடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தி.மு.க. சட்டத்துறையில் உள்ள சீனியர் வழக்கறிஞர்களான என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன். மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமையில் இதற்கென பிரத்யேகமாக அட்வகேட் டீம் செயல்படுகிறது. அண்ணாமலை வெளியிட்டுள்ள 12 தி.மு.க. தலைவர்கள் குறித்து குற்றச்சாட்டுகளையும், தி.மு.க. கட்சி சொத்து குறித்தும் ஆய்வு செய்ய 13 அட்வகேட் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் சீனியர் இருவர், ஜூனியர்கள் 8 பேர் என மொத்தம் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி சீனியர் அட்வகேட் பலரும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டு முதலில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று தி.மு.க. தலைவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனங்கள் சார்பாகவும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நோட்டீஸுக்கு அண்ணாமலை சரியான விளக்கமும் ஆதாரங்களையும் வெளியிடவில்லை என்றால், தி.மு.க. தலைவர், தி.மு.க. கட்சி, நிறுவனங்கள் என தனித்தனியே மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்..அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியலில் இடம் பெற்றுள்ள தி.மு.க. எம்.பி. கலாநிதியிடம் இதுகுறித்து கேட்டோம். “தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் கிடையாது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து 2 வருடங்களை நெருங்கிவிட்ட நிலையில், எந்த ஊழலையும் அண்ணாமலையால் முன்வைக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதோ பேப்பரை கொண்டு, வீடியோ படம் காட்டி தி.மு.க. தலைவர்கள் மீது அவதூறு பரப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். ஊழலுக்கும் சொத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் எப்படி ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தார் எனத் தெரியவில்லை.அரசியல் தெரியாதவர் தலைவர் பதவிக்கு வந்தால் இப்படி அரைகுறையாக எதையாவது செய்ய வேண்டியிருக்கும். அண்ணாமலை பொத்தாம் பொதுவாக சொன்னது போன்று நானும் அண்ணாமலை மீது குற்றம் சாட்டுகிறேன். பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை வந்த பிறகு 5 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் பல்வேறு வழிகளில் வசூல் செய்திருக்கிறார். இதற்கு அண்ணாமலை விளக்கம் அளிக்கட்டும். அதேபோன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் தலா 200 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார்கள் என குற்றம்சாட்டுகிறேன். இதற்கு அவர்கள் எல்லாம் பதில் அளிக்கட்டும். நான் 10 ஆண்டுகளாக பிளாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷலிஸ்டாக இருந்து, தற்போதுதான் அரசியலுக்கு வந்து எம்.பி. ஆகியிருக்கிறேன். அதுவும் எதிர்க்கட்சி எம்.பி.யாக இருக்கும் என்னால் எப்படி சம்பாதிக்க முடியும்? என் மீது அண்ணாமலை கூறிய அவதூறு குறித்து 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்’’ என கொதித்தார்..தி.மு.க. ஃபைல்ஸ் என்ற பெயரில் எப்படி சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டாரோ, அதே பாணியில் பா.ஜ.க.விற்கு பதிலடி கொடுக்க அறிவாலயம் தயாராகி வருவதாக பேசிய தி.மு.க மூத்த தலைவர் ஒருவர், ‘‘பா.ஜ.க.வில் இதுவரை பல தலைவர்கள் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் குறித்து தகவல்களை சேகரிக்க தனியார் ஏஜென்சி ஒன்றை தி.மு.க. தலைமை நியமித்துள்ளது. அந்த தனியார் நிறுவனம் முதற்கட்டமாகத் திரட்டிய தகவலின்படி வானதி சீனிவாசன், பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ். ஷா, கரு.நாகராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், சி.பி.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி, அமர்பிரசாத் ரெட்டி என இன்னும் பல தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது. அதேபோன்று அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக வந்த பிறகு, ஹிஜாவு, ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் தொடர்புடையவர்களுக்கு எப்படி பா.ஜ.க.வில் பதவி கொடுக்கப்பட்டது? அதேபோல் பா.ஜ.க.வில் சமீபத்தில் இணைந்த ரவுடிகள் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.அதில், செங்கல்பட்டு பகுதி ஏரிக்கரையில் மணற்கொள்ளையைத் தடுப்பவர்களின் தலையை வெட்டிக் கொல்லும் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யா, தமிழக பா.ஜ.க.வின் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள சேலம் ரவுடி முரளி, வடசென்னையைக் கலக்கிய கல்வெட்டு ரவி, சென்னை சூர்யா, வடசென்னை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கஞ்சா வியாபாரி புளியந்தோப்பு அஞ்சலை ஆகியோரின் வழக்குகள் தூசு தட்டப்பட உள்ளன. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சிவக்குமார் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி எழிலரசிக்கு பா.ஜ.க. அடைக்கலம் கொடுத்துள்ளது. இப்படி கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பலர் பா.ஜ.க.வில் இணைந்தது ஏன் என தனித்தனியே ஃபைல் ரெடியாகி வருகிறது. இந்த ஃபைல்ஸ் அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் நடைபயணத்திற்கு முன்பாக வெளியிடும் வேலைகள் நடக்கிறது. ஆனால், இதனை நிச்சயம் தி.மு.க. சார்பில் வெளியிடாது. வேறு அரசியல் அமைப்பு மூலம் இந்த தகவல்களை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. இந்த விஷயத்தை சும்மா விடாது’’ என்றார்..தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இது பற்றி கேட்டதும், ‘‘நாங்கள் ஏற்கெனவே சொன்னது போல அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் தகுந்த ஆதாரத்தை அண்ணாமலை வெளியிடவில்லை என்றால், நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கவே அண்ணாமலைக்கு இனி நேரம் சரியாக இருக்கும். அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாத நபர் என்பதை நிரூபித்துவிட்டார். அவரது தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தில் இருந்து தப்பிக்க ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதுபோன்ற நாடகத்தை அண்ணாமலை அரங்கேற்றி இருக்கிறார். 20 ஆண்டுகாலம் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறது. இதுநாள் வரை எந்த ஊழல் வழக்கும் நிரூபிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரிய பெரிய தலைவர்களைப் பார்த்தவர்கள் நாங்கள். அண்ணாமலையை நாங்கள் தலைவர் என்றுகூட ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்றார். தி.மு.க. பதிலடிக்கு தயாராவது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டோம். “ஒருவரின் சொத்து மதிப்பு பலவித காரணங்களால் உயரலாம். அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தியும், குறுக்கு வழியிலும் சொத்து மதிப்பை உயர்த்துவதுதான் தவறு. சட்டத்துக்கு எதிரானது. அதை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து செய்வது தி.மு.க.! அதைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். பா.ஜ.க.வுக்கு போட்டியாக கோமாளித்தனமாக எதையாவது செய்தால் அதில் சிக்கிக் கொள்வது தி.மு.க.வினராகத்தான் இருக்க முடியும். காரணம், நேர்மை என்றால் பா.ஜ.க.தான். இதனால்தான் மோடியின் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே, பா.ஜ.க.வினர் மீது சுட்டுவிரல் நீட்டி குற்றச்சாட்டு சொல்லக்கூடிய அருகதை தி.மு.க.வினருக்கு இல்லை. முடிந்தால் முயற்சி செய்யட்டும்...’’ என்றார். அரசியல் களம் அனல் பறக்கிறது. பாபு, படங்கள் : ம.செந்தில்நாதன்