மனநல மறுவாழ்வு மையங்களை ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு போட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான காரணம் என்வென்று நாம் விசாரித்தபோது, ’பணத்தைக் கொடுத்தால் ஆட்களைக் கடத்துகிறார்கள்...’ என்பது ஆதாரபூர்வமாக தெரியவருகிறது. இந்த மறுவாழ்வு மையங்களில் நடக்கும் சில அட்ராசிட்டிகள், அச்சச்சச்சோ ரகம். சென்னையைச் சேர்ந்தவர் ஃபாத்திமா. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான தனது கணவரை, தி.நகரைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் பரிந்துரைபடி சென்னை சிட்லபாக்கத்திலிருந்த எவர்கிரீன் மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கிறார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில், திடீரென ஒரு நாள் ’உங்கள் கணவருக்கு உடல்நிலை சரியில்லை... குளோபல் மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறோம்’ என்று அந்த மறு வாழ்வு மையத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. உடனே ஓடிப் போய் பார்த்திருக்கிறார். உடம்பில் ஏராளமான காயங்களுடன் இறந்து கிடக்கிறார் கணவர். கணவரை கொடுமைப்படுத்தி அடித்தே கொன்றிருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் ஃபாத்திமா, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். இந்த வழக்கில்தான், மனநல மருத்துவத்துறைக்கு மறுவாழ்வு மையங்களை ஆய்வு செய்யுமாறு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.மறு வாழ்வு மையத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ‘’அண்ணாநகர் பகுதியில் இருந்த ஒரு மதுபோதை மறுவாழ்வு மையத்தில் எங்கள் உறவினரை குடி நோய்க்காக சேர்த்தோம். ஆனால், அங்கே சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் அடித்து உதைத்து சித்திரவதை மட்டுமே செய்தார்கள். குடி நோயாளிகள் மட்டுமின்றி முதியவர்கள் சிலரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதை என் கண்களால் பார்த்தேன். குடும்ப வன்முறை, சொத்து போன்ற காரணங்களுக்காக, சாதாரண மனிதர்களையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். இதை பார்த்து எங்கள் உறவினரை அழைத்துச்செல்ல விரும்பினோம். இரண்டு மடங்கு பணம் கொடுத்தால்தான் வெளியே அனுப்புவோம் என்று சொல்லி, பணத்தை வாங்கிய பிறகே வெளியே அனுப்பினார்கள். பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் இவர்கள் தூக்கிவந்து கட்டிப் போட்டு விடுவார்கள். நீங்கள் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்’’ என்றார். இதனை பரிசோதனை செய்வதற்காக சென்னை பல்லாவரத்திலுள்ள பிரபல மனநல மருத்துவமனைக்கு போன் செய்து பேசினோம். ‘’சார், என் மனைவி மென்டல் மாதிரி பிஹேவ் பண்றாங்க...’’ என்றதும், “ஆன்லைன்ல பணத்தைக் கட்டுங்க. அட்ரஸை கொடுங்க... உடனே நாங்க வந்து ஆளை கூட்டிக்கிட்டு வந்துடுறோம்’’ என்று கேஷுவலாக சொன்னார் அந்த மருத்துவமனையின் ஜி.ஆர்.ஓ. எனப்படும்கெஸ்ட் ரிலேஷன்ஷிப் ஆபீஸர். நாம் அடுத்தபடியாக, ‘அவர் உங்களுடன் வர மறுத்தால் என்ன செய்வது?’ என்று நாம் கேட்டதும், ‘அதெல்லாம் நாங்க பார்த்துக்கிடுறோம்... வலுக்கட்டாயமா இன்ஜெக்ஷன் போட்டு கூட்டிக்கிட்டு போயிடுவோம். முதல்ல பணம் கட்டுங்க...’ என்று பகீரிட வைத்தார்.’’இப்படித்தான் பல்வேறு தனியார் மனநல மருத்துவ மையங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன’’ என்கிறார் பிரபல மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் வி.சுனில்குமார். மேலும் அவர், “சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மாநில மனநல மருத்துவ ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் மனநல சிகிச்சை மையங்கள், மதுபோதை மறுவாழ்வு மையங்கள், மதுபோதை மறுவாழ்வு மற்றும் மன சிகிச்சை மையங்கள் என மூன்று விதமான மையங்கள் நடத்தமுடியும்.2017ம் ஆண்டு மனநலப் பாதுகாப்பு சட்டத்தின்படி 30 படுக்கைகள் கொண்ட மையத்திற்கு ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவர், ஒரு எம்.டி. மனநல மருத்துவர், ஒரு எம்.பில். படித்த மருத்துவ உளவியல் நிபுணர், ஒரு மனநல சமூகப் பணியாளர், 2 செவிலியர்கள் இருக்கவேண்டும். மேலும், கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் சட்டப்படி மறுவாழ்வு மையத்தை ரெசிடென்ஷியல் ஏரியாவில் இருந்தால் அதை இண்டஸ்ட்ரியலாக மாற்றவேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு தடையில்லாச் சான்று வேண்டும். இத்தனை சட்டதிட்டங்கள் இருந்தாலும், இவற்றை இந்த மறுவாழ்வு மையங்கள் கண்டுகொள்வதே இல்லை. பணத்தைக் கொடுத்து அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு மையங்களை நடத்துகிறார்கள். எனவே, மறுவாழ்வு மையங்களுக்கு ஒரே ஒரு மனநல மருத்துவர் மட்டுமே ஆய்வுக்குச் செல்கிறார். அவரை நன்றாக கவனித்துவிடுகிறார்கள். உண்மையில் ஒரு குழுவாக ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ உளவியல் நிபுணரும் ஆய்வுக்கு சென்றால்தான் அங்குள்ள கட்டமைப்பு வசதிகள், உளவியல் பரிசோதனை வசதிகள் மற்றும் உளவியல் சிகிச்சை வசதிகள், தகுதியான மருத்துவ உளவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதையும் ஆய்வு செய்யமுடியும். வரம்பு மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான், போலியாக நடத்துபவர்கள் அச்சப்படுவார்கள்’’ என்றார். .இந்த நிலவரம் குறித்து தமிழ்நாடு மனநல மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் மலையப்பனிடம் கேட்டோம். “நோயாளி தானாக முன் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை, அவர் முன்வராத போது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்து, மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர்படுத்தி அவருடைய ஒப்புதலுக்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கமுடியும். போன் கால் மூலம் தொடர்புகொண்டு சொன்னதும் வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லுதல் என்பது ஆள் கடத்தலில் வரும். இதுபோன்ற மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலாளரின் உத்தரவுப்படி ஏற்கெனவே காவல்துறையினர், மனநல மருத்துவர் கொண்ட மூன்று பேர் கொண்ட குழுவானது மையங்களை ஆய்வு செய்துவருகிறது.நீதிமன்ற தீர்ப்பின்படி இன்னும் விரைவாக குழுக்களைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மறுவாழ்வு இல்லங்கள் என்றால் எங்களிடம் மட்டுமே அனுமதி பெற்றால் போதும். மனநல மருத்துவமனை என்றால் கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் ஆக்ட்படியும் அனுமதி பெற்றிருக்கவேண்டும். அதேபோல், முறையாக படித்த மனநல ஆலோசகர்கள் யார்? என்பதை முடிவு செய்ய ஒரு கமிட்டியை அமைத்துள்ளோம். அதன்படி, முறையான மனநல மருத்துவப் படிப்பை படித்தவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கமுடியும் என்று உத்தரவிடப்படும்...’’ என்றார். அதிரடி அவசியம்.- -மனோ சௌந்தர்