ஆக்டிவாக இருந்தால் பதவி!டாக்டர் மஸ்தானின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவியை பிடிக்க பலரும் போட்டி போட்டுவந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுமான் மகன் சுபேர்கானுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார் ஸ்டாலின். சீனியர் தலைவர் துரைமுருகனின் சிபாரிசும் சுபேர்கானுக்கு இந்த பதவி கிடைக்க முக்கிய காரணமாம். தி.மு.க. மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த சுபேர்கான், பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி ஆக்டிவாக இருந்ததும் முதல்வர் கவனத்துக்குப் போனதாம். இனியும் ஆக்டிவ் முக்கியமுங்க. - பாபு.அழித்து விளையாடு!கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.வுக்கும் முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் செயலாளருமான செங்குட்டுவனுக்கும் மோதல் வலுத்துள்ளது. கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வைக்கப்படும் பேனர்களில் செங்குட்டுவன் படம், பெயர் இடம் பெறுவதில்லை. இந்நிலையில், அவரின் ஆதரவாளர்கள் ஜூன் 3ல் நடக்கும் தி.மு.க. மாநாட்டுக்கான சுவர் விளம்பரத்தில், மாவட்டச் செயலாளர் மதியழகன் பெயரை தவிர்த்தனர். இதனால் கடுப்பான மதியழகனின் ஆதரவாளர்கள், அந்த சுவர் விளம்பரங்களை அழித்துவிட்டனர். தி.மு.க.வினரே விளம்பரத்தில் இருக்கும் ஸ்டாலின், கருணாநிதி உள்ளிட்ட அனைவரது பெயர்களையும் அழித்து, எழுதி விளையாடுவது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரத்தை அழிக்கிறதோடு நிறுத்திக்கோங்க...- கிருஷ்ணன் .பள்ளபட்டி வெலை ஜாஸ்திங்கோ!23 கல் நட்டு கம்பி வேலி போட, 1 லட்சத்து 5 ஆயிரம் செலவானதாக பள்ளபட்டி நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கும்போது கையெழுத்துப் போட்ட கவுன்சிலர்கள், வேலியை பார்த்துவிட்டு கொதித்தெழுந்து கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர். கல், கம்பி மற்றும் கூலி உள்பட 35 ஆயிரம் கூட ஆகாது. இதற்கு 1 லட்சம் என்று கணக்குக் காட்டுவதா? நகராட்சியின் சூப்பர் நிர்வாகத்தைப் பாரீர்? என்று வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இதுபற்றி நகராட்சித் தலைவர் முனவர்ஜானிடம் கேட்டால், ’செலவு ஆகியிருக்கும். நகராட்சி பொறியாளர் எஸ்டிமேட் போட்டுத்தான் செஞ்சோம்’ என்கிறார். நகராட்சி பொறியாளர் மனோகரனோ, ’ஆமா, ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கு பில் இருக்கு’ என்று வியக்க வைக்கிறார். எத்தனை பில்லு கேட்டாலும் ஆபீஸர் தருவாரு. - அரவிந்த்.பணம் கொடு... இல்லன்னா வேலைய விடு..!திருச்சி குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்த காயத்ரி, பூலாங்குடி கிராம வி.ஏ.ஓ. உதவியாளராக திருச்சி கலெக்டரால் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் குண்டூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், காயத்ரிக்கு போன் செய்து, வேலைக்காக மற்ற இடங்களிலெல்லாம் 7 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். நீங்க 2 லட்சம் கொடுங்க... என்று கேட்டிருக்கிறார். அந்தப் பெண்ணோ, ’நான் பணம் கொடுப்பதாய் இருந்தால் நேரடியாக அமைச்சரிடம்தான் கொடுப்பேன்’ என்று அடம் பிடித்திருக்கிறார். ‘அதற்கு அனுமதிக்க முடியாது. பணம் தரலைன்னா வேலையை ராஜினாமா செய்யும்மா’ என்று மிரட்டியுள்ளார் பாலமுருகன். அதற்கும் சளைக்காத காயத்ரி, ’நான் எல்லாருக்கும் இதை புகாராக அனுப்பி விட்டுதான் ராஜினாமா செய்வேன்’ என்று சொல்லிவிட்டு ஆடியோ ரிலீஸ் செய்துவிட்டார். இப்போது பாலமுருகனின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப். காயத்ரி செல்போனும் ஸ்விட்ச் ஆஃப். நல்லா வருவீங்க...- ஷானு.தி.மு.க.வில் மணல் புள்ளி!ஆளும் அனைத்து அரசியல் தலைவர்களோடும் அன்னியோன்யமாய் இருப்பவர் மணல் ராமச்சந்திரன். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரது பிஸினஸ் மட்டும் போய்க்கொண்டே இருக்கும். அரசியல் புள்ளிகள் தொடங்கி அதிகாரிகள் வரை யாரும் குறுக்கிடமாட்டார்கள். தற்போதுகூட திருச்சியில் பெரிய கான்ட்ராக்ட்டை அப்பகுதியின் அதிகாரப் புள்ளியோடு இணைந்து எடுத்து வேலை நடத்திவருகிறார். அப்படிப்பட்டவர் இப்போது நேரடி அரசியலுக்கு வர இருக்கிறாராம். கம்பன் கழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், ஆங்காங்கே நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடைப் பேச்சு பழகி வருகிறார். விரைவிலேயே தி.மு.க.வில் இணைந்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கேட்க இருப்பதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகிறது. இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆளும் கட்சியின் அதிகாரப் புள்ளிகள் சற்றே ஆடிப் போயிருக்கிறார். எங்கிருந்து வர்றீங்கப்பா- வீ.மாணிக்கவாசகம்.அன்று எங்கே போனார்கள்?எம்.பி. பதவி பறிக்கப்பட்ட ராகுல், புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலிசெய்தார். இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது பங்களாவை ராகுல் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவருக்கேற்றபடி புதிய வடிவமைப்பில் பங்களாவை மாற்றி தருவதாகவும் மாஜி எம்.எல்.ஏ. அருள் அன்பரசு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதற்கு ராகுல் பதில் எதுவும் தராத நிலையில், அதிர்ந்துபோன தமிழக காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏக்களான இளங்கோவன், ரூபி மனோகரன் மற்றும் திருநாவுக்கரசர் எம்.பி. போன்றோரும் தங்கள் பங்களாக்களை ராகுலுக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள். ’ஒருகாலத்தில் த.மா.கா.வினர் சத்தியமூர்த்தி பவனை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அப்போது எனது சொந்த வீட்டை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகமாக பயன்படுத்த கொடுத்தேன். அப்போதெல்லாம் மவுனமாக இருந்த சீனியர்கள் இப்போது சீனை போடுவது நியாயமா?’ என புலம்புகிறார் அருள். ஸ்கோர் பண்ண விட மாட்டேங்கிறாங்களே- கணேஷ்குமார்