மார்தட்டும் மகாமக மேயர்… கும்பகோணம் வெற்றிலையைப் போட்டுச் சிவக்காதவர்களின் வாய்கள்கூட இப்போது அங்கு நடக்கும் மேயர் VS துணை மேயர் அக்கப்போரைச் சொல்லிச் சொல்லிச் சிவந்து கொண்டிருக்கின்றன. இருவருக்கும் இடையிலானஈகோ வாரில் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் தளர்ச்சி அடைந்துவிட்டன என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் குரல்தான் மகாமக மாநகராட்சியின் கோரஸ் குற்றச்சாட்டு!கும்பகோணம் மாநகராட்சியின் 48 வார்டுகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் 42 வார்டுகளைக்கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. தி.மு.க.வுக்குத்தான் மேயர் பதவி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட, ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் அப்போதே படு அப்செட். கும்பகோணம் வெற்றிலையைப் போட்டுச் சிவக்காதவர்களின் வாய்கள்கூட இப்போது அங்கு நடக்கும் மேயர் VS துணை மேயர் அக்கப்போரைச் சொல்லிச் சொல்லிச் சிவந்துகொண்டிருக்கின்றன. இருவருக்கும் இடையிலான ஈகோ வாரில் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் தளர்ச்சி அடைந்துவிட்டன என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் குரல்தான் மகாமக மாநகராட்சியின் கோரஸ் குற்றச்சாட்டு!கும்பகோணம் மாநகராட்சியின் 48 வார்டுகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் 42 வார்டுகளைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. தி.மு.க.வுக்குத்தான் மேயர் பதவி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட, ஒட்டுமொத்த உடன் பிறப்புகளும் அப்போதே படு அப்செட். .காங்கிரஸின் நகர துணைத் தலைவரும் கவுன்சிலருமான சரவணன் மேயராகவும், தி.மு.க.வின் சுப.தமிழழகன் துணை மேயராகவும் பொறுப்பேற்றனர். சரவணன் ஆட்டோ டிரைவர் என்பதால், சாதாரண எளிய நபருக்கு மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக பலரும் பெருமையாகப் பேசிக்கொண்டனர்.ஆனால், பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மேயருக்கும் துணை மேயருக்குமான அதிகார மோதல் உச்சத்தை எட்டியது. ‘‘நான் மேயர் ஆனதை துணைமேயரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாநகராட்சி தொடர்பான எல்லா விஷயங்களும் தனது கன்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று, அனைத்து அதிகாரங்களையும் அவரே எடுத்துக்கொள்கிறார். ‘இவன் ஆட்டோக்காரன்தானே. இவனுக்கு என்ன தெரியும் என்று நினைத்துவிட்டனர். ஆனால், எனக்கு என்ன தெரியும் என்பதை நான் காட்டப்போகிறேன்” அப்போதே என்று சவால்விட்டார், மேயர் சரவணன்..“சவால் விட்ட மேயரின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி?” என்று காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கவுன்சிலரான அய்யப்பனிடம் கேட்டோம். “மே யர் செயல்படுகிறாரா? அட நீங்க வேற… எல்லாமே துணை மேயர்தான் பார்த்துக்கொள்கிறார். மாநகராட்சிக் கூட்டத்தில் மேயரிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதே இல்லை. திருதிருவென முழிக்கிறார். துணை மேயர்தான் பதில் சொல்கிறார். அவரது அனுபவமும், செயல்பாடும்தான் மாநகராட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. மேயர் ஏதோ இருக்கிறார், வருகிறார், போகிறார். அவ்வளவுதான். அவருக்கு எந்த அனுபவமும் கிடையாது.கும்பகோணத்தை கொசு இல்லாத நகரமாக ஆக்குவேன் என்றவர,அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோரிக்கை வைத்தால் அதைக் கண்டுகொள்வதே இல்லை. ஒரு மேயராக இருப்பவர் எல்லா கவுன்சிலர்களையும் அரவணைத்துச் செயல்பட வேண்டும். வார்டு பிரச்னைகளைக் கூறினால் அதனை சரிசெய்வதில்லை. அவர் ஒரு அனுபவமில்லாத நபர் என்பதை அவ்வப்போது அவரே காட்டிக்கொள்வார்..கட்சியில் மாவட்டப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வரும் நான்தான் சீனியர். எனக்குத்தான் மேயர் பதவி கொடுத்திருக்கவேண்டும். சீனியாரிட்டி பார்க்காமல் சரவணனுக்கு மேயர் பதவி கொடுத்ததன் விளைவை இப்போது மக்கள் அனுபவிக்கின்றனர்.நகரின் அடிப்படை வசதிகளான குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமானபழைய மீன் மார்க்கெட், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பலஇடங்கள் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளன. ஆக்ரமிப்புகளை அகற்றி அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் வருமானம் கிடைக்கும்.48 வார்டுகளிலும் இன்னும் கமிட்டி அமைக்கவில்லை. முக்கியமாக ஆளும்கட்சியுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். ‘நான் ஒரு ஆட்டோக்காரன்.அதனால் என்னை யாரும் மதிக்கமாட்டேன் என்கிறார்கள்’ என்று கூறி மக்களிடம் அனுதாபத்தை எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை” என்று போட்டுத் தாக்கினார்..அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமியோ, “மேயரை தி.மு.க.வினர் சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை. மேயருக்குள்ள மரியாதையையும் அவர்கள் கொடுப்பதில்லை. நாங்களெல்லாம் வார்டில் ஏதாவது பிரச்னை என்றால் மேயரிடம்தான் மனு கொடுப்போம். ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் துணை மேயரிடம்தான் மனு கொடுப்பார்கள்.எந்தவொரு அதிகாரியும் மேயரின் அறைக்கு வருவதே இல்லை. மேயருக்கான அறையை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் துணை மேயர் தனது அறையை ஆடம்பரமாக மாற்றிக்கொண்டார். மெஜாரிட்டியாக தி.மு.க.வினர் இருப்பதால் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று செயல்பட்டு வருகின்றனர்.கும்பகோணம் முழுவதும் பாதாளச் சாக்கடை அடைத்துக் கொண்டு,தெருவெல்லாம் சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை நிரந்தரமாகச் சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான ஓலப்பட்டினம் வாய்க்காலுக்குத் தண்ணீர் வரும் பாதையும், இது முடியும் இடமும் வீடுகள் கட்டப்பட்டு அடைபட்டுவிட்டது. இதனை தூர்வாரினாலும் தண்ணீர் ஓடாது. யாருக்கும் பயனில்லை. ஆனால், இதனைத் தூர்வார 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பயனில்லா வாய்க்காலுக்குப் பலகோடி ஒதுக்கீடு எதற்கென்றே புரியவில்லைஇந்த நிதியில் குண்டும் குழியுமாக இருக்கின்ற சாலைகளை சரி செய்யலாம். வீட்டு வரியை உயர்த்தியதோடு அதனை வசூல் செய்வதில் கடுமை காட்டி ஜப்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். புதிய மாநகராட்சிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் சுமார் 50 லட்ச ரூபாய் செலவு செய்து லிஃப்ட் வசதியுடன் கவுன்சில் ஹாலை கட்டி முடித்துவிட்டு, தற்போது பழைய நகராட்சி கட்டடத்தில் உள்ள படேல் மண்டபத்தில்தான் கூட்டத்தை நடத்துகின்றனர்..மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1 கோடியே 7 லட்சம் செலவில் தரைக்கடை வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி கொடுத்ததிலும் பெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. 25,000 ரூபாய் விலைபெறாத, அந்த வண்டியின் விலை ஒரு லட்சம் என்கிறார்கள். ஏற்கெனவே மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுத்து இன்னும் பணிகளை முடிக்காத தி.மு.க. சார்பு ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் பணிகளைக் கொடுக்கின்றனர். அதேபோல் எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் செய்யப்படும் பணிகளையும் மாநகராட்சி கூட்டத் தீர்மானத்திலும் பொருளாக வைக்க வேண்டும். அப்படி எந்த நடைமுறையையும் இவர்கள் கடைப்பிடிப்பதில்லை. இது தொடர்பாக நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார்.சவால்விட்ட ஓராண்டில் நீங்கள் செய்த சாதனை என்ன? என்று மேயர் சரவணனிடம் கேட்டோம். “கும்பகோணத்தில் பாதாளச் சாக்கடை பிரச்னையை 90 சதவிகிதம் சரி செய்துள்ளேன். தாராசுரம் பகுதியில் பாதாளச் சாக்கடை கிடையாது. அங்கே பாதாள சாக்கடை அமைக்க புது புராஜெக்ட் தொடங்கியுள்ளோம். மக்கள் பிரச்னைகளை விரைந்து சரிசெய்ய கும்பகோணத்தை நான்கு மண்டலமாகப் பிரித்து அலுவலகம் கட்டி வருகிறோம். குடிநீர்ப் பிரச்னையை சரிசெய்து வருகிறோம். மழைக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிதாங்கியின் பைப்புகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அதைத் தடுக்க, பாலம் போட்டு அதன் மீது பைப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிக்கென புதிதாக சைக்கிள் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டியுள்ளோம். ஐந்து பெரிய குளங்களை தூர்வாரி வருகிறோம். புதிய மாநகராட்சியில் கூட்டம் நடத்துவதற்கான வசதிகள் இல்லாததால் பழைய நகராட்சி கட்டிடத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே கவுன்சில் ஹால் கட்டுவதற்காக திட்டம் ஒன்றும் உள்ளது. அதற்கான அனுமதியும் பெறப்பட்டுவிட்டது.இப்போது எனக்கும் துணை மேயருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. தி.மு.க. கவுன்சிலர்களும் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். சில விஷயங்களில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றாலும் நாம்தான் அட்ஜெஸ்ட் செய்து போகவேண்டும். அப்படித்தான் நான் இருந்து வருகிறேன். சிலருக்கு என் மீதான புரிதல்கள் இல்லாமல் இருக்கலாம்.யார் என்ன சொன்னாலும் தீர்மானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் கையெழுத்துப் போடும் அதிகாரம் என்னிடம்தானே உள்ளது. ஒரு பணி செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா? தேவையா? தேவையில்லையா? என்பதை முடிவு செய்வது நான்தானே? ஓரளவு பிரச்னைகளை சரிசெய்து போய்க்கொண்டிருக்கிறேன். வாய்க்கால் தூர்வாரல், தரைக்கடை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி போன்றவற்றில் ஊழல் என அ.தி.மு.க.வினர் கூறிவரும் புகார்கள் அனைத்தும் பொய்யானது” என்றார்.மேயரின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டீர்களாமே? என துணை மேயர் சுப.தமிழழகனிடம் கேட்டோம். “ஏதோ ஒரு ஆதங்கத்தில் என் மீது மேயர் குற்றம் சுமத்தினார். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கிறது. இனி பிரச்னைகள் எதுவும் இருக்காது, வரவும் வராது. அ.தி.மு.க கவுன்சிலர்கள்தான் எங்களுக்குள் பிரச்னை இருப்பதாக சொல்லிவருகின்றனர். அது பொய்யான தகவல். எனக்கு எங்கள் தலைவர் ஸ்டாலின் சொல்வதுதான் முக்கியம். அதன்படிதான் நடந்துவருகிறோம்.மாநகராட்சியின் முக்கிய பிரச்னையான குடிநீர்ப் பிரச்னை சரி செய்யப்பட்டு வருகிறது. நிறைய சாலைகள் போட்டிருக்கிறோம். பாதாளச் சாக்கடை பிரச்னை தொடர்பாக 15வது நிதிக்குழுவில் வந்துள்ள நிதியின் மூலம் மேஜர் பிராப்ளம் உள்ள 7 இடங்களில் பணிகள் நடக்கவிருக்கிறது. இதனால் 50 சதவிகித பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும்” என்றார்.சாக்கடையைத் தூர் வார்றீங்களோ இல்லையோ, சந்தியில பேர் நாறாமப் பார்த்துக்குங்க அப்பு! ஆர். விவேக் ஆனந்தன்