தலைமை ஆசிரியரை பார்த்தால் தள்ளிநின்று சல்யூட் வைப்பது அந்த காலம். அடித்து, உதைத்து, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது இந்தக் காலம். அப்படியொரு அடாவடியைக் கண்டு திகிலெடுத்துக் கிடக்கிறது தேனி. தேனி திட்டச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மஹாராஜா அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 30 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சென்றாயபெருமாள் என்ற ஒரு தலைமை ஆசிரியரும், சுமதி என்ற ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியின் தாளாளரான அன்பழகன், தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில்தான் நடந்தேறியுள்ளது அடாவடி சம்பவம்..தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவரும் சென்றாய பெருமாளை சந்தித்துப் பேசினோம். “இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கான வாகனத்தை கடந்த 13 வருடங்களாக நான் தான் ஓட்டி வந்தேன். இப்போது எனக்கு சுகர் அதிகரித்துவிட்டதால் ஓட்ட முடியவில்லை. இதை பள்ளி தாளாளரின் மனைவியிடம் தெரிவித்தபோது ஒத்துக்கொள்ளாமல் எனக்கும் டீச்சருக்கும் சம்பளம் போடுவதை நிறுத்தினார்கள். வேறு வழியின்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவே, ‘கோர்ட்ல தீர்ப்பு வந்தா உனக்கு உடனே சம்பளம் போட்டுருவாங்களா?’ என்றபடி கணவனும் மனைவியுமாக சேர்ந்து என்னைத் தாக்கத் துவங்கினார்கள். அவர்களுடைய அடியைத் தாங்கமுடியாமல் மயங்கி தாளாளரின் தோளிலேயே சாய்ந்துவிட்டேன். அதன் பின்னரும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் படிக்கும் பிள்ளைகளை வெளியே விரட்டி பள்ளிக்கும் பூட்டு போட்டுவிட்டு இருவரும் போய்விட்டார்கள்” என்றார்..மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகனிடம் விளக்கம் கேட்க பேசியபோது, ’’உங்களை மாதிரி நிருபர்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா... கண்ட நேரத்துக்கு போன் பண்றீங்க?” என்று கொந்தளித்தவர் பின்னர், “அந்தப் பள்ளியை மூடச் சொல்லி உத்தரவு போட்டு, அத்தனை மாணவர்களையும் நகராட்சி பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம். தாளாளர் தாக்கினால் அந்தத் தலைமை ஆசிரியர் காவல் துறையில் புகார் அளித்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல் வீடியோவுக்கு பேட்டி கொடுப்பது தவறானது. அடித்த தலைமை ஆசிரியர் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். அவர் பிடிபட்டவுடன் நடவடிக்கை இருக்கும்” என்றார்..பள்ளி நிர்வாகி அன்பழகனின் கருத்தை அறிய முயன்றோம். கணவரும் மனைவியும் தலைமறைவாக இருப்பதால், நமக்கு விளக்கம் அளிக்க முன்வரவில்லை. காவல் துறையினரோ, ‘வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’’ என்றனர் சிம்பிளாக. - இம்புட்டுத்தானா..?- பொ.அறிவழகன்