அரசியலில் சி.பி.ஐ. திருப்புமுனை..? சி.பி.ஐ. விசாரணை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் கோபத்தை உருவாக்கிவிட்டதாம். பா.ஜ.க. இந்த அளவுக்குப் போகும் என்றால், நானும் எந்த அளவுக்கும் போவேன் என்பதை காட்டுவது போல் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து பேசத் தொடங்கிவிட்டார். இருவரும் இணைகிறார்கள் என்றால், அதை சேர்த்துவைத்த பெருமை சி.பி.ஐ.யையே சேரும்..முதல்வரை அழைத்த உத்தவ் தாக்கரே! பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது என்றாலும், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. ஏனென்றால் மம்தா, நிதீஷ்குமார், கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, சரத்பவார், சந்திரசேகரராவ் ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் கூட்டணி குறித்துப் பேச தமிழக முதல்வரை மும்பைக்கு அழைத்திருக்கிறாராம் உத்தவ் தாக்கரே. ஸ்டாலின் நேரில் செல்வாரா என்பதே இப்போதைய கேள்வி.