கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல என்பார்கள். அப்படி ‘எனது வீடு ராகுல் வீடு’ என்று ஸ்டிக்கர் ஒட்டி தொகுதி மக்களின் வீடுகளை எல்லாம் ராகுலுக்கு தாரை வார்த்துக்கொண்டிருக்கும் கரூர் எம்.பி. ஜோதிமணி, அதே ஸ்டிக்கரை தனது வீட்டில் ஒட்டாதது தான் கரூர் மாவட்டத்தின் குபீர் பாலிடிக்ஸ்!“தொகுதி மக்கள் நெத்தியை மட்டும் தான் விட்டு வெச்சிருக்காங்க. தொகுதி முழுக்க எந்தப்பக்கம் திரும்பினாலும் ‘எனது வீடு ராகுல் வீடு’ ஸ்டிக்கர்தான். ஒரு எட்டு இந்தப் பக்கம் வந்துட்டுப்போங்களேன்” என்று அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் மகேஷ்குமார் அழைக்க, ஜோதிமணியின் சொந்த ஊரான அரவக்குறிச்சி அருகேயுள்ள பெரியதிருமங்கலம் சென்றோம்.ஊருக்கு மேற்கே பளீரென வெள்ளையடிக்கபட்ட ஜோதிமணி வீட்டின் மாடியில் புதிதாககட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த ஜோதிமணியின் அண்ணியிடம், “கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறைனு எல்லா ஊருக்கும் போகும் ஜோதிமணி, அங்குள்ள வீடுகளின் சுவத்துல ‘எனது வீடு, ராகுல் வீடு’னு ஸ்டிக்கர் ஒட்டுறாரு. ஒரு லட்சம் ஸ்டிக்கர் ஒட்டப்போறேன்னு சொல்லி ஸ்டிக்கரும், கையுமாவே அலைகிறார். ஆனா அவரோட சொந்தவீட்டுல ராகுல் வீடுனு ஸ்டிக்கர் ஒட்டலையே?” என்று கேட்டோம். “அது என்னமோப்பா... அதைப்பத்தி நீங்க ஜோதிமணிட்டதான் கேக்கணும்” என்று வெள்ளந்தியாக சிரித்தார்..எதிரில் வந்த 70 வயது பாட்டியிடம் ஜோதிமணி பற்றி கேட்க கொட்டித்தீர்த்து விட்டார்... “உள்ளூர் புள்ளைங்குற பாசத்துல தான் ஓட்டு போட்டோம். ஜெயிச்சா அதைச் செய்வேன்... இதைச் செய்வேன்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டு இப்ப வரைக்கும் ஊருக்கு ஒண்ணும் செய்யல. அரிஜன தெரு மக்களுக்கு 3 சென்ட் நிலம் தர்றேன்னு சொல்லி அதைக்கூட செய்யல. என் ஊட்டுக்காரர் செத்து ஒருவருசமாகுது... கவர்மென்ட்டுல ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்குறதுக்கு சொல்லலாம்னு, ஜோதிமணிவீட்டுக்கு பேசப்போனா, ‘போ... போ...’னு துளியும் மரியாதையில்லாம பேசுது” என்று மூக்கைத் சீந்தியபடி அழுதார் பாட்டி!ஊரைச்சுற்றி பார்த்தோம். உள்ளூர் வெறுப்பை சம்பாதித்ததாலோ என்னவோ, தொகுதி முழுக்க ஒட்டப்பட்டிருந்த ராகுல் ஸ்டிக்கர் உள்ளூரில் எந்த வீட்டிலும் இல்லை..காங்கிரஸ் தலைவர் மகேஷ் நம்மிடம், “தேர்தல் வந்து விட்டால் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவது தான் ஜோதிமணியின் வாடிக்கை. கடந்த தேர்தலின்போது, ‘என் தொகுதி, என் மக்கள்’வசனம் எழுதி அதில் தன் போட்டோவை போட்டு, காலண்டர் அடித்து வீடுவீடா கொடுக்கச் சொன்னார். நானும் கொடுத்தேன். தேர்தலிலும் ஜெயித்தார். ஆனால், அடுத்தவருடம் காலண்டர் கொடுக்கவில்லை. ஜோதிமணி ஜெயித்த பிறகு யாரையும் மதிப்பதில்லை. இப்போது தேர்தல் வரப்போகிறதல்லவா? அதனால் விளம்பரத்திற்காக இந்த ஸ்டிக்கர் வேலையை ஆரம்பித்திருக்கிறார். ஊரார் வீட்டு சுவரில் ஸ்டிக்கர் ஒட்டும் ஜோதிமணி, முதலில் தன் வீட்டில் ஒட்டி விட்டு வரட்டும். இதை காங்கிரஸ்காரர்கள் கேட்டால், ’உன் வேலையைப்பாரு’ என்று பாய்வார்”என்றார் சலிப்புடன்.கரூர் நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன்பாபுவிடம் பேசினோம், “ஜோதிமணி என்னிடம் ஸ்டிக்கர் கொடுத்து ஊர்ஊராக ஒட்டச்சொன்னார். முதலில் நான் என் வீட்டில்ஒட்டிவிட்டு, வீரராக்கியம், புலியூர் என பல ஊர்களுக்கு சென்று ஒட்டி வருகிறேன்” என்றார்.இதுபற்றி கேட்க ஜோதிமணியின் அலைபேசிக்கு பலமுறை அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவரது வாட்ஸ் ஆப்பிலும் விளக்கம் கேட்டு அனுப்பியிருக்கிறோம். அதற்கும் பதிலில்லை.எலெக்ஷன் நெருங்குது மேடம்.கரூர்அரவிந்த்