ஒரே குடும்பத்தில் தாய், அவரின் 11 வயது மகன், 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஆகியோர் மர்ம நபர்களால் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டிருப்பதால் கதிகலங்கிக் கிடக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்! அதேசமயம் சற்றும் யூகிக்க முடியாத சொத்துக்காக கொலை செய்த கொடூர குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் மடக்கி, மக்களிடம் சபாஷ் வாங்கியிருக்கிறது காவல்துறை.இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் பேசினோம். “ஏப்ரல் 19-ம் தேதி மாலை ஏமாப்போர் -நரிமேடு பகுதியில் மணிகண்டனின் மனைவி வளர்மதி என்பவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்டு வளர்மதி (35), தமிழரசன் (11), கேசவன் (10 மாத ஆண் குழந்தை) என மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். வீட்டுக்கு வெளியே இருந்த கன்றுக்குட்டியும் கோழிக்குஞ்சுகளும் இறந்து கிடந்தன..இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உடனடியாக ஏ.டி.எஸ்.பி. ஜவஹர்லால், டி.எஸ்.பி.-க்கள் பாலசுப்பிரமணியன், ரமேஷ், திருமேனி ஆகியோர் தலைமையில் ஏழு தனிப்படைகளை அமைத்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூர், கடலூர் பகுதியில் சைக்கோ ஒருவன் இப்படித்தான் திடீர் திடீரென்று கொலைகள் செய்திருந்தான். அவனைப் பற்றி விசாரித்தபோது வேறொரு வழக்கில் சிறையில் இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து இறந்துபோன வளர்மதி பற்றி விசாரித்தோம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுப்பேட்டை கிராமம்தான் வளர்மதியின் சொந்த ஊர். இவரின் தந்தை ரங்கநாதனுக்கு நான்கு மனைவிகள். வளர்மதிக்கு உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்த முருகவேலோடு முதல் திருமணம் நடந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர்.இரண்டாவதாக சென்னையைச் சேர்ந்த செல்வத்தை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த போது பெண் குழந்தை பிறந்தது. ஆனால், செல்வமும் அந்தக் குழந்தையும் சாலை விபத்தில் மரணமடைந்தனர். பிறகு மூன்றாவதாக சென்னையைச் சேர்ந்த குப்புசாமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தமிழரசன் என்ற குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாட்டால் குப்புசாமியையும் பிரிந்து வாழ்ந்த வளர்மதி, நான்காவதாக விருத்தாசலம் ஆலடி பாலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை திருமணம் செய்துகொண்டார்..மேற்கண்ட இருவரும் மினி டெம்போவில் காய்கறி விற்பனை செய்து வந்தனர். மணிகண்டனின் குழந்தையை வளர்மதி வயிற்றில் சுமந்தபோது மணிகண்டனும் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இப்படி எங்களது எல்லா விசாரணைகளும் முட்டுச்சந்தில் போய் முடிந்ததே தவிர உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஆனாலும் விடாமல் வளர்மதியின் உறவினரான வனிதாவை விசாரித்தபோது, அவரின் சித்தி அஞ்சலையைப் பற்றி தகவல் கிடைத்தது. கொலை செய்யப்பட்ட வளர்மதிக்கும் இவர் சித்தி முறையாவார். அவரிடம் விசாரித்த போது தான் எங்கள் புலன் விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டது... என்று பெருமூச்சு விட்டவர்கள் தொடர்ந்து விவரித்தார்கள்...“எங்கள் விசாரணையின் போது எனக்கு எதுவும் தெரியாது’ என்று சாதித்தார் அஞ்சலை. அவர் முகத்தில் பயம் தெரிந்தது. அவர் பொய் பேசுகிறார் என்பது உறுதியானது. அதன் பிறகே அவரிடம் அழுத்தமாக விசாரித்தோம். அப்போதுதான் அவருக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் முறை தவறிய உறவு இருந்தது தெரியவந்தது. முன்னதாக அஞ்சலை, வளர்மதிக்கு 22 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.ஆனால், அவர் அதை திருப்பித் தரவில்லையாம். இதை தமிழ்ச்செல்வனிடம் சொன்ன அஞ்சலை, கள்ளக்குறிச்சியில் வளர்மதிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது’ எனபதையும் சொல்லியிருக்கிறார். அந்த சொத்தை குறி வைத்துதான் வளர்மதியின் குழந்தைகளைக் கூட விடாமல் கொலை செய்யத் திட்டமிட்டார்கள்.தொடர்ந்து ஏப்ரல் 17-ம் தேதி இரவு 9 மணிக்கு தமிழ்ச்செல்வன், அஞ்சலை மற்றும் அவர்களின் கூட்டாளிகள் ராமு, பூபாலன், சிவா ஆகிய ஐந்து பேரும் வளர்மதி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அஞ்சலை ‘ஏய், நான் உன் சித்தி வந்திருக்கேன்டி’ என்று கதவைத் தட்ட, வளர்மதி கதவைத் திறந்திருக்கிறார். உடனே உள்ளே புகுந்த மற்ற நான்கு பேரும் வளர்மதியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய, இதனை பார்த்து அழுத 11 வயது தமிழரசன் மற்றும் பத்து மாத குழந்தை கேசவனையும் கழுத்தறுத்து கொலை செய்திருக்கிறார்கள் போலீஸார் சொல்லி முடித்த போது பகீர் என்றிருந்தது..கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் நம்மிடம், ”தனிமையில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் மீதாவது சந்தேகம் வந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொள்ளுங்கள். அஞ்சலை உள்ளிட்ட குற்றவாளிகளை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளோம் என்று முடித்தார்.குழந்தைகளின் முகத்தை பார்க்கும்போது நூற்றாண்டுகளாக தணியாத கோபம்கூட தணியும் என்பார்கள். ஆனால், பச்சிளங் குழந்தைகளைக் கூட கொலை செய்த இவர்கள், இந்த மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள். தேவை நீதி!பி.கோவிந்தராஜு