காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கம் என்று கூறிக்கொண்டு, சிறுமிகளை வேட்டையாடி, விளையாடிய டுபாக்கூர் நிருபர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறான். சிறுமிகளை வைத்து பாலியல் நடத்தியவனின் லீலைகளைக் கேட்டு கதிகலங்கி நிற்கிறது திருச்சி. விசாரணை அதிகாரி ஒருவரிடம் கேட்டதும், ‘’கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மகன் பிரபின் கிரிஸ்டல் ராஜ். 15 வருடங்களாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நிருபராக பணிபுரிந்தவன், தற்போது ’சிலந்தி வலை’ என்ற மாதாந்திர பத்திரிகையை நடத்துவதாக சொல்லிக்கொண்டு திரிகிறான். மீடியா என்று சொல்லிக்கொண்டு பல்வேறு அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகளுடன் நெருங்கி படம் எடுத்துக்கொள்வான். அந்த போட்டோவைக் காட்டி பல்வேறு இடங்களில் காரியம் காரியம் சாதிப்பான். வாயைத் திறந்தாலே பொய்யாக சொல்வான். இவன் பேச்சைக் கேட்டு நிறைய பேர் ஏமாந்து பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்கள். போலீஸ் அதிகாரிகள் பழக்கம் என்று சொல்லி மிரட்டி, எல்லோரையும் ஆஃப் செய்துவிடுவான். பணத்தோடு பொம்பளை விவகாரத்திலும் ரொம்பவே வீக். குறிப்பாக சின்னப் பெண் பிள்ளைகளை குறிவைத்து பிடிப்பான். அந்த பிள்ளைகளை வீடியோ, போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு டார்ச்சர் செய்வான். ஃபேஸ்புக்கில் அந்த சிறுமி படத்தைப் போட்டு, ஆர்வம் காட்டுபவர்களிடம் பணம் கறந்துவிடுவான். நிறைய முறை போலீஸில் சிக்கியிருக்கிறான். ஆனால், மேலதிகாரிகள் பெயரைச் சொல்லி தப்பிவிடுவான். பணக்காரர்களுக்கு சிறுமியை அனுப்பிவைப்பான். பின்னர் அதை காரணம் காட்டியே பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பான். போலீஸ் உயரதிகாரிகள் பெயரைச் சொல்லி ப்ளாக்மெயில் செய்வது ஒருபுறம் என்றால், ’இணைந்த கரங்கள்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு நிறைய பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன்பு 16 வயதுச் சிறுமியை அடைத்துவைத்து பாலியல் டார்ச்சர் செய்ததாகவும் சிறுமி இவனிடமிருந்து தப்பித்து ஓடியதாகவும் குற்றச்சாட்டு உண்டு. இவன் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு உள்ள பெண் தொடர்பை தெரிந்துகொண்டு, அவரிடமும் பணம் கேட்டு மிரட்டி காரியம் சாதித்திருக்கிறான்..இவன் இப்போது 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொழில் செய்கிறான் என்று தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து டுபாக்கூரை பிடிக்க திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா தனது ஸ்பெஷல் டீம் ஆய்வாளர் கருணாகரனை களமிறக்கினார். உடனே நகரின் முக்கிய ஹோட்டல்களில் எல்லாம் புகுந்து தேடியும் உருப்படியான தகவல் கிடைக்கவில்லை. எனவே, அடுத்தகட்டமாக சுமார் ரக ஹோட்டல்களில் தேடுதல் தொடங்கியது. ஃபெமினா ஹோட்டலுக்கு எதிரே ஒரு தனியார் ஹோட்டலில் புகுந்து ஒரு புகைப்படத்தைக் காட்டியதும், கிரீன் சிக்னல் கிடைத்தது. உடனே டுபாக்கூர் இருந்த அறையின் கதவு தட்டப்பட்டது. திறக்கப்பட்ட அறையில் டுபாக்கூருடன் நடுத்தர வயதில் ஒரு பெண்மணியும் இன்னொரு இளம்பெண்ணும் இருந்தனர். ஆனாலும் கொஞ்சமும் அசாரத டுபாக்கூர், ‘நான் யார் தெரியுமா? ஐ.ஜி.கிட்ட பேசுறீங்களா?” என்று போனை கையில் எடுக்க, சட்டென அதை பறித்த கருணாகரன், மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த சந்தியா என்பவரின் மகள்தான் இவனுடன் பிடிபட்ட சிறுமி. 15 வயதாக இருக்கும் போதே பெரம்பலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். தாய் சந்தியாவே, சிறுமியை திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜா பானுவிடம் அனுப்பியிருக்கிறார்.டுபாக்கூர் பிரபினுக்கும் ரமீஜா பானுவுக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இருவரும் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். ஃபேஸ்புக்கில் சிறுமியின் படத்தைப் போட்டு வெகுஜோராக வியாபாரத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் பிடிபட்டுள்ளான். காவல்நிலையத்தில் வைத்து போலீஸ் பாணியில் விசாரித்ததும் உண்மையை ஒப்புக்கொண்டான். சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்தார். சிறுமி சொன்ன தகவலில் உண்மைத்தன்மை இருந்ததையடுத்து தனியாக ஒரு புகார் கொடுத்தார்.அந்தப் புகாரின் பேரில் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் விபச்சார தடுப்பு, குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச் செயலுக்கு சிறுமியின் தாயாரான சந்தியாவும் உடந்தை எனவே பிரபின் கிரிஸ்டல் ராஜ், ரமீஜா பானு மற்றும் சந்தியா ஆகிய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்’’ என்றார்..டுபாக்கூர் பிரபின் பற்றி நம்மிடம் பேசிய தமிழச்சி பிரியா கோவிந்தராஜ். ‘’நான் நடத்தும் சாமுத்திரிகா அகாடமி அழகுக்கலை பயிற்சி நிலையம் தொடர்பான செய்திகளுக்காக என்னை சந்தித்த பிரபின், என்னிடம் 1 லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றினான். நான் காவல்துறை நடவடிக்கைக்கு போவேன் என்று கடுமையாக எச்சரித்து போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ’டிஐஜி கூப்பிடுறாங்க... கொஞ்சம் அப்படியே சைலன்ட்டா இருங்க. நான் கான்ஃபரன்ஸ் கால் போடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு பேசினான். அப்போது டி.ஐ.ஜி., பிரபினுடன் மிக நெருக்கமாக உரிமையாகப் பேசியதை நான் கேட்டேன். என்னைக்கு இருந்தாலும் அவன் ஜெயிலுக்குப் போகணும், போவான் என்று நம்பினேன். அது, இப்போது நடந்திருக்கிறது’’ என்றார். கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தவேதவல்லியிடம் பேசினோம். ’’குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 17 வயதுச் சிறுமியை மீட்டதுடன் அதற்குக் காரணமான ரமீஜாபானு, சிறுமியின் தாயார் சந்தியா, பிரபின் ஆகியோரை கைது செய்திருக்கிறோம். சிறுமியின் முன்னாள் கணவர் பாலமுருகனையும் கைது செய்திருக்கிறோம். தவிர, சிறுமியின் மாமனார், மாமியார் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். எத்தகைய நிர்ப்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார். பிரபினுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஷானு