வனத்துக்குள் பழங்குடிகள் சுள்ளியைப் பொறுக்கினாலே கில்லியாக வந்து அள்ளிச் செல்லும் வனத்துறையினர் மரங்களை வெட்டி, குண்டுவீசி, தீ வைத்து அட்ராசிட்டிகளை செய்த ’கேப்டன் மில்லர்’ படக்குழுவினரை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றியெரிகிறது சர்ச்சை நெருப்பு. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவிக்கு அருகே கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகிறது, 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தயாரிப்பது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். முன்னதாக படக்குழுவினர் டிசம்பர் முதல் வாரமே அங்கே முகாம் போட்டபோது வனப்பகுதிகள் நாசமாகிவிடும் என்ற உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் பின் வாங்கினார்கள். பிறகு மேலிடத்தில் பேசி படப்பிடிப்புக்கு கிரீன் சிக்னல் வாங்கி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது..இந்தநிலையில்தான் தற்போது மூன்று மாதங்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது படக்குழு. இது குறித்து நம்மிடம் பேசினார் ம.தி.மு.க-வின் தென்காசி மாவட்டச் செயலாளர் உதயசூரியன்...“பழைய குற்றாலம் அருவித் தண்ணீர் செங்குளம் கால்வாய் வழியாக ஒப்பிலான்குளம், செண்பகராமபேரி, அருகன்குளம், செங்குளம், பெட்டைக்குளம், நல்லமாடன் புதுக்குளம் ஆகிய ஆறு குளங்களை நிரப்பிவிட்டு, வைராவி கால்வாய் வழியாக, புதுக்குளம், நாராயணபேரி குளம், கைக்கொண்டார் குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களை நிரப்பும். ஆனால், செங்குளம் கால்வாயில் உள்ள ஆறு குளங்களின் மதகுகள் உடைந்து விட்டதால் தண்ணீர் மதகுகள் வழியாய் வெளியேறி விடுகிறது. எந்தக் குளத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. எனவே, நானும் பொதுப்பணித்துறை அதிகாரி அன்வரும் புது ஷட்டர் போடுவதற்காக மதகுகளின் அளவெடுக்கப் போய்ப் பார்த்தபோது, பயங்கர ஷாக் ஆனோம்..எட்டடி உயர செங்குளம் கால்வாய்க்கரை சமப்படுத்தப்பட்டு அதில் தாற்காலிக மரப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஊர்ப் பொதுக் கால்வாயை இப்படி உடைத்து தள்ளியது யார் என்று விசாரித்தபோது, கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காகவே கால்வாய்க் கரை உடைக்கப்பட்டு அந்த மணலைக்கொண்டு ஏழு ஏக்கர் நிலம் சமப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.உடனே நாங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனோம். அங்கு குடிசைகள் போடப்பட்டிருந்தன. அரிவாள், கம்பு, குத்துக்கல், குதிர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புதிதாக கோயில் செட் ஒன்றும் போடப்பட்டிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரமான அந்தப் பகுதி களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிக்குள் வருகிறது. மலையடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு யாரும் நுழையக்கூடாது. சருகைக்கூட எடுக்கக் கூடாது..ஆனால் இவர்கள் மலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை புல்டோசரால் சமப்படுத்தியிருக்கிறார்கள். வனத்தைக் சிதைத்து செட் போட்டிருக்கிறார்கள். எனவே, நாங்கள் இருவரும் அங்கிருந்தவர்களிடம் ”அய்யா...இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதி. ஊர் மக்கள்கூட உள்ளே வரக்கூடாது. இது யானைகளின் வழித்தடம். தவிர, மான், மிளா, முயல்கள் வாழும் பகுதி. சாதாரண பொதுமக்கள் சின்ன முயலை அடித்தால் கூட மூன்று மாதங்கள் உள்ளே தூக்கி வைத்து விடுகிறது வனத்துறை. நீங்கள் சர்வ சாதாரணமாய் நடமாடுகிறீர்கள்... மான்களை அடித்து கசாப்பு போட்டிருக்கிறீர்கள், சண்டைக் காட்சிக்காக தீ வைத்துக் கொளுத்தியிருக்கிறீர்கள், குண்டுகளை வீசி புகை மண்டலமாக்கியிருக்கிறீர்கள். ராட்சத மின் விளக்குகளை வைத்திருக்கிறீர்கள், அதிலிருந்து வரும் ஒளி வன விலங்குகளை பாதிக்கும். இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? இதற்கெல்லாம் நீங்கள், வனத்துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கியிருக்கிறீர்களா?” என்று கேட்டேன்..அவ்வளவுதான், ‘யோவ்...நீ யாருய்யா இதைக் கேட்க?’ என்று கோபத்தோடு என்மீது பாய்ந்தார்கள். நான் என் கட்சி பொறுப்பைக் குறிப்பிட்ட போது ‘யாராயிருந்தா எங்களுக்கென்ன, நாங்க யார் தெரியுமா? சி.எம் சன்னுக்கு வேண்டியவங்க... போய் உன் வேலையைப் பார்!’ என்று தெனாவட்டாக பதில் சொன்னார்கள்.அதன் பிறகுதான் கலெக்டர் துரை ரவிச்சந்திரன், கன்சர்வேட்டர் ஆஃப் ஃபாரஸ்ட், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தேன். என் புகாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஸ்பாட் விசிட் செய்து உடனடியாய்ப் படப்பிடிப்பை நிறுத்தினார். ஆனால், ஒரு நாள் மட்டுமே நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, அடுத்த நாளே எந்தவித தடையும் இன்றி தொடங்கியிருக்கிறது. அவர்கள் பாட்டுக்கு வெடி வெடிக்கிறார்கள். ராட்சத விளக்கை எரிய விடுகிறார்கள். கேட்டால் ஒரு நாளைக்குள்ளாகவே வனத்துறை, பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்றதாக சொல்கிறார்கள்..அது எப்படி சாத்தியம் ? சினிமாக்காரனுக்கு ஒரு நீதி, பொதுமக்களுக்கு ஒரு நீதியா ? எனவே, நீதி கேட்டு ஐகோர்ட் வாசலைத் தட்டுவதை தவிர வேறு வழியில்லை” என்றார் கொந்தளிப்பாக.இது குறித்து விளக்கம் பெற வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அடுத்தடுத்து தொடர்புகொண்டபோது, எல்லாம் மேலிட விஷயம் என்று சொல்லி பேச மறுத்து விட்டார்கள். படப்பிடிப்புக் குழுவினர் தரப்பு விளக்கம் கேட்க மேலாளர் பழனியப்பனிடம் பேசினோம். முதலில் போனை அட்டெண்ட் செய்து, “ஃப்ரியானவுடன் பேசுகிறேன்” என்றவர், அடுத்தடுத்து அழைத்த போது பதில் கூட சொல்லாமல் தவிர்த்தார்.எல்லாம் மேல இருக்கறவங்க பாத்துக்குவாங்கங்குற தைரியம்தான்!அ.துரைசாமி