`தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்' என்பதை பல ஆண்டுகளாகப் படித்து வந்தாலும் சாதித் தீயின் கோரப் பிடியில் இருந்து பேராசிரியர்களே வெளியில் வரவில்லை என்பதற்கு பரமக்குடி வேட்டஸ்ட் உதாரணம். `அடுத்து என்ன நடக்குமோ?' என அடுத்தடுத்த நடந்த மூன்று சம்பவங்களும் பெற்றோரை பதற்றத்தில் வைத்திருப்பதுதான் அதிர்ச்சி நிலவரம்.சம்பவம் 1:பரமக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் வகுப்பெடுப்பவர், பேராசிரியர் சத்தியசீலன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், தனது உறவினரான மாணவியிடம், அவரின் தோழி குறித்தும் காதலர் குறித்தும் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.இந்த ஆடியோ, சம்பந்தப்பட்ட மாணவரின் சமூகத்தை ரொம்பவே உசுப்பேற்ற, அவர்களில் சிலர் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். இந்தப் பேச்சுக்கு எதிராக ஆடியோவில் பேசப்படும் மாணவி போலீஸில் புகார் அளிக்கவே, பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார், வரலாற்று வாத்தியார்.ஆடியோவில் பேராசிரியரும் மாணவியும் பேசும் விஷயம் இதுதான்!``எவனோ சாமியார் மாதிரி ஒருத்தன் வர்றான்... அவளை கேட்டுக்கு முன்னாடிவந்து பைக்ல ஏத்திட்டுப் போறான். உனக்கு தெரியாதா.?"``நானும் சொல்லிட்டேன் சார்" ``ஏன் அவளுக்கு வேறு யாரும் கிடைக்கலையா? அவன் ...சாதிக்காரன். அவகிட்ட பழகி அனுபவிச்சிட்டு தூக்கிப் போட்டுட்டு போயிடுவான். அதுக்குப் பிறகு இவ என்ன பண்ணுவாளாம். ஒருநாளைக்கு நானும் அவளைத் தூக்கிட்டுப்போய் அனுபவிச்சுட்டு அனுப்பப் போறேன் பாரு. சரி.. அவன் என்ன படிக்கிறான்?’’. “காலேஜ் படிக்குறாங்க சார். எக்ஸாம் எழுதும்போது பழக்கம்போல...’’ “காலேஜுக்கு மூணு நாள் லீவு போட்டுட்டு அவ சென்னை போனது தெரியுமா? அவன்கூட ஊர் சுத்தப் போயிருக்கா. நம்ம சாதிக்காரனை லவ் பண்ணுனா கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கட்டும்னு விடலாம். அதான் எனக்கு கோபம்.’’சம்பவம் 2:இதுவும் அதே கல்லூரியில் நடந்த சம்பவம்தான். கல்லூரி ஆண்டு விழாவின்போது, வேட்டியை மடித்துக்கொண்டு கழிவறைக்குச் சென்றுள்ளார், எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர். அம்மாணவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்லத்துரை மற்றும் கவுரவ விரிவுரையாளர் ஜேசுதாஸ் ஆகியோர் சாதியைச் சொல்லி அடித்துள்ளனர்.கூடவே, தங்கள் சமூக மாணவர்களைத் தூண்டிவிட்டு, அந்த மாணவனை பள்ளி நூலகத்தில் வைத்துத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டும், துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று தொடர்ந்து அதே கல்லூரியில் செல்லத்துரை பணியாற்ற, கவுரவ விரிவுரையாளர் ஜேசுதாஸ் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் 3:பரமக்குடி கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர், அதியமான். இவர் மீது மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்லூரி முதல்வர் மேகலாவும் ஆங்கிலத்துறை பேராசிரியை ரேணுகாவும் விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில், போலீஸுக்குப் போன மாணவி, கல்லூரி கல்வி இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படாமலே அதியமான் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புகார் கொடுத்துள்ளார்.இந்த விவகாரத்தில் கவுரவ விரிவுரையாளர் காயத்ரி, அதியமான் மீது புகாரளித்த மாணவியுடன் பேசும் ஆடியோ வெளியாகி அதிரவைத்துள்ளது. அதில், கல்லூரி முதல்வரையும் ஆங்கிலம், வேதியியல் ஆகிய துறைகளின் தலைவர்களையும் சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். மேலும், மாணவியையும் அவள் தோழியையும் அதியமானுக்கு எதிராக புகார் அளிக்க வற்புறுத்துவதும் பதிவாகியுள்ளது..இதையடுத்து, `ஆங்கில துறைத் தலைவர் ரேணுகாதேவி கொடுத்த புகாரின்பேரில் காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரியில் இருதே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், காயத்ரி.இதுகுறித்து காயத்ரியிடம் கேட்டபோது, ``நான் டெர்மினேஷன்ல இருக்கேன். கல்லூரியில் பாலியல் தொந்தரவு இருப்பதாக மூன்று மாணவிகள் என்னிடம் சொன்னார்கள். நான் துறைத் தலைவரைப் பார்க்கச் சொன்னேன். மற்றபடி யாரையும் தூண்டிவிடவில்லை. சாதிரீதியாகவும் பேசவில்லை" என்கிறார்.கல்லூரி முதல்வர் மேகலாவிடம் பேசினோம். ``பேராசிரியர் அதியமான் மீது புகார் சொன்ன மாணவிகளை விசாரணைக்கு அழைத்தபோது, ஒரே ஒரு மாணவி மட்டுமே வந்தார். அதியமானோ, மற்றவர்களோ வரவில்லை. விசாரிக்காமலே யார்மீது தவறு என்று எப்படிச் சொல்வது? கல்லூரிக் கல்வி இயக்குநர் எனக்குப் போன் போட்டு, ‘யாரோ மாணவியை அதியமான் கட்டிபிடிச்சாராமே?' என்று கேட்டார். நான் விளக்கம் சொல்வதற்குள் அவர்களே பணிமாறுதல் உத்தரவை அனுப்பிவிட்டனர். அதன்பிறகு, திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்து விசாரணை செய்து அறிக்கையை அனுப்பினேன். கல்லூரியில் சாதிரீதியாக பழிவாங்கும்போக்கு நடப்பது மட்டும் தெரிகிறது. காயத்ரியை பணிநீக்கம் செய்திருக்கிறோம்." என்றார்.`அன்பு தன்னில் செழித்திடும் வையம்' என்பதெல்லாம் அந்தக்காலம்போல. - பாலா