ஈரேழு உலகங்களையும் சொல்லினால் சுடும் சக்தி பெண்களுக்கு உண்டு. – ராம காவியம் இதுவும் ஒரு பெண்ணின் கதைதான். திவ்யா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், அவளுக்கு திருமணமாகி விருந்து விசேஷங்களில் திளைத்துக்கொண்டிருப்பாள். ஆனால், அப்படி திருமணமான ஓர் இளம்பெண்ணை ஒருவாரம்கூட நிம்மதியாக வாழவிடவில்லை ஹிஜாவு மோசடி நிறுவனம். ஆமாம், கீர்த்தனாவின் கதையைக் கேட்கும்போதே மனம் பதைபதைக்கிறது.ஓர் ஆண் பிள்ளை காணாமல் போனாலே அந்தக் குடும்பம் நிம்மதியை இழந்துவிடும். ‘பிள்ளை சாப்பிட்டானா, இல்லையா, அய்யோ பசி தாங்கமாட்டானே, இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பான், கையில் காசு வைத்திருப்பானா, யாரேனும் பிள்ளையைக் கொடுமைப்படுத்திக்கொண்டிருப்பார்களா, எங்கேனும் அடிபட்டு சாகக்கிடக்கிறானா, உயிரோடு இருக்கிறானா, இல்லையா…’ இப்படி எழும் கேள்விகளே அந்தக் குடும்பத்தை நொடிக்கு நொடி சாகடித்து நடைபிணமாக்கிவிடும்.இதுவே ஒரு பெண் பிள்ளை காணாமல் போனால்..? அதுவும் ஊர்மெச்ச திருமணம் செய்துகொடுத்து, பத்தே நாட்களில் அந்தப் பெண் காணாமல் போனால் எப்படியெல்லாம் தவித்துப்போகும் அந்தக் குடும்பம்? அப்படித்தான் தவித்துக்கொண்டிருக்கிறது காரைக்காலைச் சேர்ந்த கீர்த்தனாவின் குடும்பம்.கீர்த்தனாவுக்கு இப்போது வயது 24. பார்த்தவுடன் பார்வையைத் திருப்பத் தோணாத அழகு. சுறுசுறுப்பான பெண். துறுதுறுவென ஓடிக்கொண்டே இருப்பாள். பேசப் பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும் அளவுக்கு பேச்சில் புத்திசாலித்தனம் மிளிரும். எம்.பி.ஏ. படித்தவள், எதையும் பேச்சாலேயே வசியம் செய்யும் மாயத்தைக் கற்றிருந்தாள். கீர்த்தனா கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் சில நிறுவனங்கள் அவளை கெளரவமான சம்பளத்துக்கு முன்பதிவு செய்திருந்தன. ஆனால், அவளுக்குத்தான் வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை..அவள் முதலாளியாக ஆசைப்பட்டாள். தன்னைப் போன்ற பெண்களுக்கு வேலை கொடுக்க ஆசைப்பட்டாள். படிப்பை முடித்ததும் பெரிய முதலீடாக இல்லாமல் ஐந்தாயிரம், பத்தாயிரங்களில் சிறு சிறு வணிகங்களை செய்தாள். திருப்பூரிலிருந்து ஆடைகளை வரவழைத்து ஆன்லைனில் விற்பனை செய்தாள். தேன், நெல்லிக்காய், பழங்கள் என இயற்கை விளைபொருட்களை இவள் மதிப்புக்கூட்டி விற்றது பார்த்து வியந்தது உறவினர் கூட்டம். ப்யூடீசியன் கோர்ஸ் தேர்ந்து அழகுக் கலை நிபுணரானாள், ஃபேஷன் டெக்னாலஜியும் கற்றறிந்து அதிலும் நிபுணத்துவம் பெற்றாள். நிற்க நேரமில்லாமல் ஓடியவள் இளம் வயதிலேயே லட்சங்களை ஈட்டினாள். பூரித்துப்போனார்கள் பெற்றோர்கள்.இந்த வணிக தொடர்பில் கீர்த்தனாவுக்கு அறிமுகமானவன்தான் சசி. ஹிஜாவு புரோக்கர். வெற்றிகரமான தொழில் முனைவோராகத் திகழ்ந்த கீர்த்தனாவை, மல்டி மில்லினர் தொழிலதிபர் ஆக்குவதாக உறுதியளித்தான். அனைவருக்கும் சொன்ன அதே கதைதான். வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகளில் நேரடியாக முதலீடு செய்யலாம் என்றான். நம்பவில்லை கீர்த்தனா.“நம்ப வேண்டாம், நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வா கீர்த்தனா” என்றான்.புதுச்சேரியின் பெரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது அந்தக் கூட்டம். கோட், சூட்டுடன் மேடையில் மட்டுமே 25 பேர் அமர்ந்திருந்தார்கள். அலெக்ஸ்தான் பேசினான்….“நீங்கள் தொழிலாளியாகி முதல் மாதமே லட்சம் ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்களா… இல்லை, முதலாளியாகி முதல் மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் மட்டுமே போதும் என்று நினைக்கிறீர்களா? உங்களில் இந்தக் கேள்விக்கு விடை சொல்லப்போவது யார்?”முதல் ஆளாக கையை உயர்த்தினாள் கீர்த்தனா…“முதலாளியாகி பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கவே விரும்புகிறேன். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டாம் எனக்கு…”“காரணம் சொல்ல முடியுமா கீர்த்தனா?”“தொழிலாளியாகி முதல் மாதம் நான் சம்பாதிக்கும் அந்த ஒரு லட்சம் ரூபாய் கூலிப்பணம், ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதிகம் போனால் பத்து லட்சமாக மட்டுமே உயர்ந்திருக்கும். ஆனால், பத்தாயிரம் ரூபாய் சொந்தமாக சம்பாதிக்கத் தொடங்கும் நான் பத்து வருடங்களுக்குப் பிறகு நூறு பேருக்கு லட்சம் ரூபாயை சம்பளமாகக் கொடுத்துக்கொண்டிருப்பேன்…” கூட்டம் வாயடைத்துப் போனது.தொடர்ந்து கேட்டாள் கீர்த்தனா… “உங்கள் பிசினஸ் மாடலை காட்ட முடியுமா?”அலெக்ஸ் பேசத் தொடங்கினான்… “பங்குச் சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புத்திசாலிகள் மட்டுமே சந்தையைப் பிடிக்க முடியும். அதுபோலதான் கச்சா எண்ணெய் சந்தையும். அதில்…”இடைமறித்தாள் கீர்த்தனா… “மிஸ்டர் அலெக்ஸ்… எனது கேள்வியை ரிவைண்ட் செய்துப் பாருங்கள்… நான் உங்கள் பிசினஸ் மாடலைப் பற்றி பேசச் சொல்லி கேட்கவில்லை, காட்ட முடியுமா என்றுதான் கேட்டேன். நேரில் அழைத்துச் சென்று காட்ட முடியுமா?”கீர்த்தனாவின் தோரணையிலும் ஆளுமையிலும் வியந்துபோனான் அலெக்ஸ். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டான்… “எவ்வளவு முதலீடு செய்வதாக உத்தேசம்?”“சொந்தமாக எண்ணெய்க் கிணறு வாங்கும் அளவுக்கு…” பட்டென்று வந்து விழுந்தன வார்த்தைகள்..அன்றைய கூட்டம் முடிந்தது. அடுத்த வாரமே அவர்கள் மலேஷியா, துபாய் மற்றும் சில வளைகுடா நாடுகளுக்கு பயணித்தார்கள். சொந்த காசை செலவு செய்து கீர்த்தனாவை அழைத்துச் சென்றான் அலெக்ஸ். எண்ணெய்க் கிணறு நிறுவனங்களைச் சுற்றிக் காட்டினான். அதன் உரிமையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தொழிலதிபர்கள் என பலரையும் சந்திக்க வைத்தான். கையோடு அவன் கொண்டுசென்ற 70 கோடி ரூபாயை கீர்த்தனா கண்முன்னாலேயே ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தான்.அவனது கண்கட்டி வித்தைகள் புத்திசாலியான கீர்த்தனாவின் கண்களையே மறைத்துவிட்டன. ஊருக்குத் திரும்பியதும் முதல் வேலையாக தனது மொத்த சேமிப்பான ஐந்து லட்சம் ரூபாயை ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்தாள் கீர்த்தனா. அதோடு விடவில்லை, சுற்றிச்சுழன்று வேலை பார்த்தாள். தனது தொழில் தொடர்புகள், நட்பு வட்டாரங்கள், உறவுகள் அத்தனை பேர் வாசலுக்கும் ஏறி இறங்கினாள். மிகப் பெரிய தொழிலதிபராகும் வைராக்கியம் அவள் மனதில் ஆழமாக வேர் பதித்தது. நாளொன்றுக்கு இத்தனை பேரை சந்திக்க வேண்டும், இத்தனை லட்சங்களை திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக்கொண்டு ஓடினாள்.யாருமே நம்ப முடியாத அளவுக்கு சாதித்தாள் கீர்த்தனா. இரண்டே மாதங்களில் ஐம்பது லட்சம் ரூபாயை ஹிஜாவுவில் முதலீடு செய்ய வைத்து டீம் லீடர் ஆனாள். சொன்னபடியே எதிர்பாராத பெரும் லாபத்துடன் பணம் மாதா மாதம் திரும்ப வந்தது. புதுப்புது வாடிக்கையாளர்களின் முதலீட்டுடன் லாபமாக கிடைத்த தொகையையும் முதலீடு செய்தாள். அடுத்த மாதமே அவள் முதலீடு ஒரு கோடி ரூபாயைத் தாண்ட ஹிஜாவு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி அவளைத் தேடி வந்தது. நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த தொடர் கூட்டங்கள் அவள் உத்வேகத்தை மின்னல் வேகமாக மாற்றின.என்ன தான் மகள் லட்சங்களில் வருமானம் ஈட்டினாலும் பெற்றோருக்கு கவலை இல்லாமல் இருக்குமா? பெண் பிள்ளை ஆயிற்றே… புதுச்சேரி ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற தொழிலதிபரை தங்கள் மகளுக்கு வரனாக பார்த்தார்கள். கோடீஸ்வரக் குடும்பம் அது. பார்த்த மாத்திரத்திலேயே கீர்த்தனாவை ரமேஷுக்கு பிடித்துவிட்டது..கீர்த்தனா இத்தனை நாட்கள் செய்யத் துணியாத ஒரு செயலையும் செய்யத் துணிந்தாள்… ரமேஷின் குடும்பத்தினரிடமும் பேசி ஹிஜாவு நிறுவனத்தில் கோடிகளில் முதலீடு செய்ய வைத்தாள். கிட்டத்தட்ட அவளது வழியாக மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் ஹிஜாவு நிறுவனத்தில் குவிந்தது. நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில் அவளது திருமணமும் நடந்தேறியது.சுமார் ஐந்து மாதங்கள் தொடர்ந்து பணம் வந்துகொண்டிருந்த நிலையில், திருமணமான ஓரிரு நாட்களிலேயே ஹிஜாவு நிறுவனத்திடம் இருந்து பணவரத்து நின்றுபோனது. அடுத்தடுத்த நாட்களில் ஹிஜாவு நிறுவனத்தினர் தலைமறைவு என்று தகவல் வரவே… நிலைகுலைந்துபோனாள் கீர்த்தனா. உடனடியாக காவல் நிலையத்தின் படியேறினாள். சொல்லப்போனால், ஹிஜாவு நிறுவனத்தின் மீது முதல் முதலாக காவல் நிலையத்தில் புகார் அளித்தவள் கீர்த்தனாதான்..லட்சங்களில்… கோடிகளில் முதலீடு செய்தவர்கள் விடுவார்களா? கீர்த்தனாவின் வீட்டை முற்றுகையிட்டார்கள். புகுந்த வீட்டிலும் கலவரமாகிப்போனது. ஒருநாள் மாப்பிள்ளை வீட்டில் புகுந்த குண்டர்கள் சிலர் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி கையில் கிடைத்தவற்றை எல்லாம் அள்ளிச் சென்றார்கள். அவமானத்தால் கூனிக்குறுகிப்போனது குடும்பம். அனல் வார்த்தைகளால் சாம்பலாகி பொசுங்கிப்போனாள் கீர்த்தனா. அப்படியான களேபரத்துக்குப் பிறகு ஒரு நாள் விடிந்தபோது கீர்த்தனாவைக் காணவில்லை… இதோ ஆயிற்று கிட்டத்தட்ட ஒரு வருடம்…அந்த அழகான கீர்த்தனாவை எங்கேனும் பார்த்தால் தகவல் சொல்லுங்கள்!- சந்தன் வருவான்…