வேலூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் நந்தகுமாரின் தீவிர ஆதரவாளரான மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜாகுப்பம் முருகானந்தம் திடீரென கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டுள்ளார். இதன் பின்னணியை விசாரித்தால், பதவி பூகம்பம். இதுபற்றி பேசிய மூத்த தி.மு.க.வினர், ’’சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமாரின் ஆதரவாளரான குடியாத்தம் குமரன், தன்னை தரக்குறைவாகப் பேசினார் என்று காரணம் சொல்லி, அவரை கட்சியைவிட்டு நீக்கினார் துரைமுருகன். அதே பாணியில் இப்போது முருகானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இவரும் நந்தகுமாரின் தீவிர ஆதரவாளர். நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் துரைமுருகன், ‘நான் இறந்துபோனால் என் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதி வையுங்கள்’ என உணர்ச்சிவசப்பட்டு பேசி அப்ளாஸ் வாங்கினார். உடனே அதை அ.தி.மு.க.வினர் கிண்டலடித்து, ‘கோபாலபுரத்து கொத்தடிமை இங்கே உறங்குகிறார்’ என்று மீம்ஸ் போட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இந்த மீம்ஸ் பதிவு எப்படியோ முருகானந்தத்தின் ஃபேஸ்புக்கில் வந்துவிட்டது. இதை பார்த்தவுடனே ஆதரவாளர்கள் முருகானந்தத்தை தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்ல, விழுந்தடித்து அதை டெலீட் செய்துவிட்டார். ஆனாலும் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த்துக்கு இந்த விஷயம் பாஸ் செய்யப்படவே, விவகாரம் பூதாகரமாகிவிட்டது. இருவரும் கடும் கோபமாகியுள்ளனர். எனவே மாவட்டச் செயலாளர் நந்தகுமாரின் யோசனைப்படி, சென்னைக்குச் சென்று துரைமுருகனைச் சந்தித்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் முருகானந்தம். அப்போது அதை ஏற்றுக்கொண்டது போல் துரைமுருகன் பேசியிருக்கிறார். ஆனால் மறுநாள் முரசொலியில் முருகானந்தம் கட்டம் கட்டப்பட்ட செய்தி வந்துவிட்டது..இப்போது விஷயம் என்னவென்றால், மாவட்டச் செயலாளர் நந்தகுமாருக்கு செக் வைப்பதற்காகவே முருகானந்தத்தை கட்டம் கட்டியிருக்கிறார்கள். இந்த விஷயத்திற்கு நந்தகுமார் ரியாக்ட் செய்தால், அவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, கதிர் ஆனந்தை அமரவைப்பதற்காகவே, இந்த வேலைகளை எல்லாம் துரைமுருகன் செய்துவருகிறார்...’’ என்றனர். நடந்த சம்பவம் குறித்து ராஜாகுப்பம் முருகானந்தத்திடம் கேட்டோம். ‘’அது என் கவனக் குறைவால் நடந்துவிட்டது. எதிர்க்கட்சிக்காரர்கள் கருத்தை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்து, வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்வதற்காக ஃபேஸ்புக் கையாண்ட நிலையில் டெக்னிக்கல் எர்ரரால் இப்படி நடந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுவிட்டேன்...’’ என்றார்.தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நம் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அவரது மகன் எம்.பி. கதிர் ஆனந்திடம் கேட்டோம். ‘’கட்சி எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை குறித்தும், கட்சியைப் பற்றியும் நான் எதுவும் கருத்து கூறமுடியாது. வேலூர் தொகுதி பிரச்னை அல்லது நான் சார்ந்திருக்கும் ஓட்டுநர் அணி குறித்து என்றால் மட்டும் கேளுங்கள்’’ என்று முடித்துக்கொண்டார். அதிகாரம்னா சும்மாவா..?- அன்புவேலாயுதம்