’’அங்க அடிச்சா இங்கே ஏன்யா வலிக்கணும்ங்குற கதையாப்போச்சே சுவாமி?’’ கொதிக்கும் வெயிலுக்கு ஆறுதலாய் ஜில்ஜில் ஜிகர்தண்டாவை வம்பானந்தாவுக்குப் பரிமாறியபடி எதிரில் அமர்ந்தார் சிஷ்யை.’’அ.தி.மு.கவினர் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்னு அண்ணாமலை சொன்னதுக்கு எடப்பாடியும் ஜெயக்குமாரும் கொடுத்த ரியாக்ஷனைத்தானே கேட்கிறாய். அறிவாலயத் தரப்பை விட இவர்களது கொதிப்பு, ரொம்பவே ஓவர். தேவையே இல்லாமல் அ.தி.மு.க.வை அண்ணாமலை வம்புக்கு இழுக்கிறார் என்று எடப்பாடியார் பல்ஸ் எகிறியிருந்தாராம். எனவே அண்ணாமலை பற்றி கேட்டதுமே, ‘ஏங்க அவரைப் பற்றியே பேசுறீங்க? இப்படி பேசி பேசிதாங்க அவரு பெரிய ஆள் ஆகிட்டாரு. இப்படிலாம் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகணும்னு அவரு நினைக்குறார். நான் கட்சியில் 50 வருசமா இருக்கேன். முதிர்ந்த அரசியல் தலைவர்களைப் பற்றி கேளுங்க. பதில் சொல்றேன்’ என்று போட்டுத் தாக்கிவிட்டார். ஜெயக்குமாரும், ’மறைமுகமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் வேண்டாம். கூட்டணிக்கு சீட் ஒதுக்குகிற இடத்தில் நாங்கள் தான் இருக்கிறோம்’ என்று நேரடியாகவே வீராப்பு காட்டிவிட்டார்...’’.‘’ரஃபேல் வாட்ச் விவகாரமும் முடியவில்லையே..’’ ‘’ம்.. கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக அண்ணாமலை ரசீது காண்பித்துள்ளார். உண்மையில் தனி நபரிடம் இருந்து வாங்கும்போது ஜி.எஸ்.டி., டி.டி.எஸ்., டி.சி.எஸ். போன்றவை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதுதவிர சேரலாதன் வாங்கிய வாட்ச் எண். BRO394EBL147, அண்ணாமலை வாங்கிய வாட்ச் எண். BRO394DAR147. அந்த 3 லட்ச ரூபாய் அண்ணாமலைக்கு எப்படி வந்தது என்பதற்கு அவரது வங்கிக் கணக்கில் ஆதாரம் எங்கே? என்று தி.மு.க.வின் ராஜீவ்காந்தி கேள்வி மேல் கேள்வி எழுப்பிவருகிறார்.’’ ’’அண்ணாமலை விவகாரத்துக்கு பன்னீர் வாயைத் திறக்கவில்லையே..?’’ ‘’ம்... இப்படியெல்லாம் தமிழகத்தில் நடக்கிறது என்பதையே அறியாதவர் போன்று திருச்சி மாநாட்டு நிகழ்சிகளில் பிசியாக இருக்கிறார். எப்படியும் 5 லட்சம் பேரை திரட்டி மாஸ் காட்ட வேண்டுமென ஆசைப்படுகிறார். இதற்காக மாவட்டத்திற்கு எத்தனை பேர், வாகனச் செலவு, சாப்பாட்டுச் செலவு என அனைத்தையும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டு வாங்கி, முதல் தவணையாக டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாம். சசிகலா முன்னிலையில் தினகரன் தலைமையில் கூட்டம் நடத்துவது என முடிவு செய்து, அழைப்பிதழ் டிசைன் செய்யப்பட்டு, சசிகலா, தினகரன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இருதரப்பிலும் இருந்து இன்னமும் ஒப்புதல் வரவில்லை. ஆகவே, இன்னமும் குழப்பத்தில் இருக்கிறார் பன்னீர்...’’.’’டி.டி.வி. தினகரனின் தென்மாவட்ட டூர் திடீரென கேன்சல் ஆகியிருக்கிறதே?”’’ஆம்... இம்மாதம் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய தினகரன் திட்டமிட்டிருந்தார். அந்த நேரத்தில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பரமசிவம், தனது ஆதரவாளர்கள் 5 ஆயிரம் பேருடன் அ.ம.மு.க.வில் இணைவதற்கு தயாராக இருந்தாராம். கட்சியில் இணையும் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் மாவட்டங்களைப் பிரித்து பதவிகள் தரவேண்டும் என்று தினகரனிடம் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இதற்கு தென் மண்டல பொறுப்பாளராக இருக்கும் மாணிக்கராஜா ஒப்புக்கொள்ளவில்லையாம். ’முதலில் அவர் கட்சியில் இணையட்டும், பின்னர் மாவட்டத்தைப் பிரிக்கலாம்’ என்று முட்டுக்கட்டை போட்டாராம். இதை கேள்விப்பட்ட பரமசிவம் இப்போது கோபித்துக்கொண்டு, இணைப்புக்கு தயாராக இல்லை கட்சியில் இருந்து பலரும் வெளியேறும் நிலையில், இத்தனை பேர் இணையும் ஒரு நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டார்களே என்ற கோபத்தில் தினகரன் டூரை கேன்சல் செய்துவிட்டாராம். இதற்கு காரணமான மாணிக்கராஜாவை மாற்றுங்கள் என்று கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள். எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறார் தினகரன்..’’.சுவாமிக்கு கொறிக்க கொஞ்சம் ஸ்நாக்ஸ் கொடுத்தார் சிஷ்யை. “அடடே... முக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் மேட்டர் இருக்கிறதே” என்றபடி தொடர்ந்தார். ’’தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், துறை ரீதியில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மதிய உணவு, ஸ்நாக்ஸ் போன்றவற்றை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கி வருகின்றனர். ஸ்நாக்ஸ், சாப்பாடு, பிரியாணி ஆகியவை பேரவை வளாகத்திற்குள் உள்ள கேன்டீனில் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 13ம் தேதி வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை பிரபல ஹோட்டலில் இருந்து ஸ்வீட், காரம் அடங்கிய பேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அன்றைய தினம் பகல் 11 மணியளவில் கவனஈர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது, கேன்டீனுக்கு வந்த தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, மா.கம்யூ., எம்.எல்.ஏ.க்களுக்கு வெறுமனே டீ மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்நாக்ஸ் எங்கே என்று கேட்டதற்கு, ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே கடுப்பான காங்கிரஸ் எம்.எல்.ஏ. சண்டைக்குப் போயிருக்கிறார். அதன்பிறகு, ‘ஸ்நாக்ஸ் பாக்கெட்களை ஒரு எம்.எல்.ஏ. ஒட்டுமொத்தமாக காரில் ஏற்றி கொண்டுசெல்கிறார்’ என்று கூறியுள்ளனர். ‘பொய் சொல்லாதீங்க” என்று அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அடிதடியில் இறங்க... ஊழியர்கள் ஓடிப்போய் பேரவை செயலாளரிடம் புகார் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, பேரவை கேன்டீனில் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே அனுமதி என்று எழுதியே ஒட்டிவிட்டார்கள்...’’ ’’அப்புறம்..?’’.”முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கு மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. அதாவது, தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனையை செய்ய, லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு..சென்னை செங்குன்றத்தில் எம்.டி.எம். பான் மசாலா என்ற குட்கா தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, 250 கோடி ரூபாய்க்குமேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டைரிகளில் ‘ஹெச்.எம்’ அதாவது ஹெல்த் மினிஸ்டர் 14 லட்ச ரூபாய், கமிஷனர் 15 லட்ச ரூபாய், முன்னாள் கமிஷனர் 15 லட்ச ரூபாய் மற்றும் அமைச்சர், கலால் அதிகாரி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டு, மாதாமாதம் அவர்களுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது என்றாலும், அ.தி.மு.க ஆட்சி என்பதாலும், அந்த கட்சியின் புள்ளிகளே லஞ்சப்புகாரில் சிக்கியிருப்பதாலும் கிடப்பில் போடப்பட்டது. எனவே, வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவேண்டும் என்று அப்போதைய தி.மு.க எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் காரணமாக வழக்கு சி.பி.ஐக்கு மாறியது..முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, ஓய்வுபெற்ற டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், ஓய்வுபெற்ற கமிஷனர் ஜார்ஜ், எம்.டி.எம் மசாலா உரிமையாளர்கள் உட்பட 35 மேற்பட்ட இடங்களில் கடந்த 2018 செப்டம்பர்-5 அதிரடி ரெய்டு நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அன்றைய அமைச்சர் விஜயபாஸ்கரோடு அப்போதைய அமைச்சர் பி.வி ரமணாவும் லஞ்சம் பெற்ற புகாரில் விசாரணை செய்யப்பட்டார். சட்டவிரோத குட்கா விற்றது, லஞ்சம் பெற்றதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையில் பெயர்கள் இடம்பெற்றதால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போதே தமிழக அரசிடம் சி.பி.ஐ. கடிதம் எழுதி அனுமதி கேட்டிருந்தது. மேலும், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது சி.பி.ஐ. இப்போது அதற்கான, அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியிருக்கிறது.இதனால் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு சிக்கல் சீரியஸாகிறது, இந்த முறை கைது நிச்சயம் என்கிறார்கள்...’’ என்றபடி வாட்ஸ் ஆப் செய்திகளுக்குள் மூழ்கினார் வம்பு.