மாநகராட்சி அந்தஸ்து பெற்றதிலிருந்து தொடர்ந்து 5 பெண் மேயர்களையே கண்ட திருச்சி மாநகராட்சியின் முதல் ஆண் மேயர் எனும் பெருமையை தி.மு.க.வின் அன்பழகன் பெற்றுள்ளார். அந்தப் பெருமையை அன்பழகன் தக்கவைத்திருக்கிறாரா என்று அலசினால், நொண்டியாட்டம். தற்போது திருச்சி மாநகராட்சியில் தி.மு.க. 52, ம.தி.மு.க. 2, காங்கிரஸ் 5, அ.தி.மு.க. 3, வி.சி.க., கம்யூனிஸ்ட், அ.ம.மு.க. தலா 1 என மொத்தம் 65 வார்டுகளில் 52 வார்டுகளை பிடித்து ஆளும் கட்சி மிருக பலத்துடன் உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. மேயரின் செயல்பாடு குறித்து அ.தி.மு.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளரும் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான சீனிவாசனிடம் கேட்டோம். ‘’மேயர் அமைச்சர் நேருவின் ஆள் என்றும் துணை மேயர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் ஆள் என்றும் தனித்தனி கோஷ்டியாக இயங்குகிறார்களே தவிர, மக்கள் பணி செய்வதாகத் தெரியவில்லை. இப்போது துணை மேயர் திவ்யாவின் பதவி டம்மி பதவி ஆகிவிட்டது. அவர் தன்னுடன் எந்த விஷயத்திற்கும் போட்டிக்கு வரக்கூடாது என்று திட்டமிட்ட அன்பழகன், 5 கோட்டத் தலைவர்களில் 4 தலைவர்களை பெண்களாக நியமித்துவிட்டார். எனவே கோஷ்டிப் பூசலில் மாநகராட்சி தள்ளாடுகிறது. மாநகரப் பகுதிகளில் சாலைகள் வெட்டி போடப்பட்டபடியும் மின் விளக்குகள் கெட்டுப்போனதாகவுமே இருக்கின்றன. எதையுமே சரி செய்யவில்லை. மாநகராட்சிப் பணிகளில் வெறும் 5 பேர் மட்டுமே ஈடுபடும் நிலையில், 20 பேர் வேலை செய்வதாக கணக்குக் காட்டி துட்டு அள்ளுகின்றனர். அதிலும் யாரேனும் லீவு போட்டுவிட்டால் அதையும் பணமாக்குவதில் குறியாக இருக்கிறார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை.இவர்கள் வைக்கிற எல்லா டெண்டர்களுமே சிங்கிள் டெண்டர் என்று அவர்களுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்கிறார்கள். என்ன டெண்டர் வருகிறது என்பது குறித்த தகவல்கள் கவுன்சிலர்களுக்கு சொல்லப்படுவதில்லை. இதில் வெளிப்படைத்தன்மை அறவே இல்லாமல் போய்விட்டது.புதிதாக வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே கொண்டு வரவில்லை. பஞ்சப்பூரில் அமையும் பஸ் ஸ்டாண்ட் பற்றி சொல்வார்கள். அது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு நிதி எல்லாம் ஒதுக்கப்பட்டுவிட்டது இடம் மட்டும் தேர்வு செய்து தங்களுக்கும் தங்கள் வேண்டியவர்கள், உறவினர்களுக்குமான இடங்களின் விலைகளை உயர்த்தும் வகையில் பஞ்சப்பூரில் பஸ் ஸ்டாண்டை அமைத்துக்கொண்டார்கள். அந்த இடம் பொருத்தமில்லாத இடம் என்றாலும், அங்கு சுயநலத்துக்காக பஸ் ஸ்டாண்ட் அமைக்கிறார்கள். மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இப்போது நடக்கும் அனைத்துப் பணிகளும் அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நடக்கும் பணிகளாகவே இருக்கிறது. இவர்கள் நிதி ஒதுக்கி எந்தப் பணியும் தொடங்கவில்லை. சொத்து வரியை 50 முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி இருக்கிறார்கள். பாதாள சாக்கடை இணைப்புக்கான பராமரிப்பு தொகையை மூன்று மடங்காக உயர்த்தி இருக்கிறார்கள்’’ என்றார் ஆவேசமாக..பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் மாநகராட்சி கல்வி குழுத்தலைவருமான சரவணன், ’’திருச்சி மாநகராட்சியில் செயல்படாத மேயரும் செயல்படாத கமிஷனரும்தான் இருக்கிறார்கள். பாதாள சாக்கடை திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள்கூட ஃபெயிலியர் ஆகிக் கிடக்கின்றன. பாதாள சாக்கடைக்கு தரமற்ற, குறுக்களவு குறைந்த குழாய்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.இதில் கனெக்ஷன் கொடுத்த உடனே குழாய்கள் வெடித்து திட்டம் மொத்தமும் ஃபெயிலியர் ஆகப்போகிறது. அரசு அதிகாரிகள் இந்த பணிகளை நேரடி ஆய்வு செய்வதில்லை. ஊரில் இருக்கும் இரண்டு அமைச்சர்களின் பின்னால் சுற்றுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. கான்ட்ராக்டர்கள் அவங்கவங்க நோக்கத்துக்கு வேலை செய்கிறார்கள். ’எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்தாச்சு, நீ என்ன வேணாலும் பண்ணிக்க’ என்கிறார்கள். சுப்பையா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற இந்த நிறுவனம் காங்கிரஸ் எம்.பி.யின் சம்பந்தி நிறுவனம் என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு உள்ளது.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்து தரமற்ற வேலைகளைப் பார்க்கிறார்கள். கட்டட அனுமதி எல்லாம் ஆன்லைன் என்று ஆகிவிட்டதால் எங்கேயாவது மண், ஜல்லி கொட்டி இருந்தால், அஸ்திவாரம் தோண்டப்பட்டு விட்டால் உடனே அங்கே போய் வசூல் செய்யத்தான் ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய ரோடு சுத்தமாக இருக்கிறதா? தண்ணீர் ஒழுங்காக வருகிறதா என்பதை பார்க்க ஆட்கள் இல்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதில்லை..நிதிக் குழுத் தலைவரான முத்துசெல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மாமன்ற உறுப்பினர்கள் 65 பேருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள டைட்டன் வாட்ச் கொடுக்கிறார். இதை எல்லாம் எந்த நிதியில் இருந்து அவர்கள் கொடுக்கிறார்கள்? காஜாமலை விஜய் என்கிற கவுன்சிலர், ’பத்தாயிரம் ரூபாய் வாட்ச் தான் கொடுப்பீர்களா? ரேடோ வாட்ச் கொடுக்க மாட்டீர்களா?’ என்று கேட்கிறார் என்றால், இவர்கள் எந்த அளவுக்கு எகத்தாளமாக மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள், இவர்களின் மனதில் மக்கள் நலப் பணிகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து விட்டார்கள். அதில் இவர்கள் காட்டுவதுதான் கணக்கு. எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது தெரியாது. இதனால் மாநகராட்சி எல்லா பக்கமும் குப்பைகள் நிறைந்து சுத்தமற்ற சூழ்நிலையே நிலவுகிறது. வரி வசூலில் ஏழை மக்களை இம்சைப்படுத்தும் இவர்கள் பெரிய பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வைத்திருக்கும் பாக்கிகளை வசூல் செய்யாமல் அவர்களிடம் போய் பேரம் பேசி பணம் வாங்கிக் கொள்கிறார்கள். மாநகராட்சியில் நிதி இல்லை என்று பல கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன..காவிரிக் கரையில் அமைந்திருக்கும் திருச்சி மாநகரத்தில் தண்ணீர் சப்ளையை தனியாருக்கு கொடுத்து அதில் மீட்டர் போட்டு வசூல் செய்யப் போகிறார்கள். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? என் பாட்டன் முப்பாட்டன் பூட்டன் குளித்து குடித்து வாழ்ந்த இந்த காவிரி தண்ணீரை நான் குடிப்பதற்கு நான் தனியாருக்கு பணம் கட்ட வேண்டுமா? இந்தப் பாவம் எல்லாம் இவர்களை சும்மா விடுமா?’’ என்று ஆக்ரோஷமானார்.பெயர் சொல்ல விரும்பாத தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், ’’மாவட்ட துணைச் செயலாளராக இருந்த முத்துசெல்வமும், தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த காஜாமலை விஜயும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டும் மாநகராட்சி மேயருடன் மல்லுக்கட்டுவதை நிறுத்தவில்லை. மேயரும் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமான இவர்களை மீறி எதுவும் செய்துவிடப் போவதில்லை. சொல்லப்போனால் இவர்கள் எடுத்துக்கொண்டது போக மிச்சம் தான் மாநகராட்சியில் உள்ள மற்ற கவுன்சிலர்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்கிற நிலை தொடர்கிறது. பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில்தான் நடக்கின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரம் செய்யும் கான்ட்ராக்ட் மொத்தத்தையும் மேயரின் அண்ணன் மகன் சுதாகர்தான் எடுத்து செய்கிறார்.மேயரின் அக்கா மகன் செந்திலும் மாநகராட்சியில் ஒரு கான்ட்ராக்டர். மேயரின் மகள் கவினி பெயரில் ஒரு நிறுவனம் மாநகராட்சி வேலைகளை செய்கிறது. மேயரின் நெருங்கிய உறவுக்காரர் ஒருவரின் ’எஸ்.கே. என்டர்பிரைசஸ் தஞ்சாவூர்’ என்கிற கம்பெனி மாநகராட்சியின் பெரும்பாலான வேலைகளை செய்கிறது’’ என்று புகார் வாசித்தார்..குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் விளக்கம் கேட்டோம். ‘’காஜாமலை விஜய், முத்து செல்வம் இருவரும் மாமன்றத் தலைவராகவும் கோட்டத் தலைவராகவும் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். என் அண்ணன் மகன் எந்த விளம்பர நிறுவனமும் நடத்தவில்லை. அக்கா மகன் செந்தில் இன்றைக்கு கான்ட்ராக்டராக செயல்படவில்லை. கடந்த 10 வருடங்களாக அவர் கான்ட்ராக்டராக தான் இருக்கிறார். தனாவூரில் இருந்து செயல்படும் எஸ்கே என்டர்பிரைசஸ் என்னுடைய உறவினர் கிடையாது. தலைவர் கட் அவுட் எல்லாம் வரையும் ஆர்ட்டிஸ்ட் தமிழரசனின் மகன் ஆவார். அமைச்சரிடம் கேட்டுத்தான் கான்ட்ராக்ட் வாங்கிக்கொண்டார். அதில் என் பங்கு ஏதுமில்லை. மாநகராட்சிப் பகுதிக்குள் ஏற்கெனவே 300 கிலோமீட்டர் சாலைப் பணி முடிந்துவிட்டது. இந்த மாதம் 100 கோடி நிதி வருகிறது. அடுத்த மாதம் 100 கோடி நிதி வருகிறது. சாலைப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுவிடும். குடிநீருக்கு மீட்டர் போட்டு காசு வாங்குகிறோம் என்றால், ஏற்கெனவே கடன் வாங்கித்தான் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கிறோம். அந்தப் பணத்தை எல்லாம் திருப்பிக் கட்ட வேண்டாமா? மாநகராட்சியில் வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வசூல் செய்து கொண்டிருக்கிறோம்.ஸ்மார்ட் சிட்டி நிதியில் வந்த கட்டடங்களை கட்டிக்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர்கள் காலதாமதத்தினால் ஏற்பட்ட விலை உயர்வுக்காக கூடுதல் பணம் கேட்கிறார்கள். அதை தர முடியாது என்று சொல்லி இருக்கிறோம். ஜூன் மாதத்திற்குள் அவர்கள் அந்த கட்டடங்களின் பணிகளை முடிக்கவில்லை என்றால் அவர்கள் பிளாக் லிஸ்ட் செய்யப்படுவார்கள். எனவே, கட்டடப் பணிகள் விரைந்து முடிந்துவிடும்’’ என்றார் அவர்.வேலையைப் பாருங்க சார். - ஷானு