மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே அமைந்துள்ளது மையிட்டான்பட்டி கிராமம். அந்த ஊரில் இருந்து ஏப்ரல் 12ம் தேதி பகல் 11.30 மணி அளவில் ஒரு நகரப் பேருந்து 25 பயணிகளுடன் மதுரை பெரியார் நிலையம் நோக்கிப் புறப்பட்டது. அந்த பஸ்ஸில் இருந்த நாகலட்சுமி, திடீரென ஓடும்பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள, தெருவெல்லாம் ரத்தவெள்ளம். சம்பவம் பார்த்த ஒரு நபர், ‘’அந்த பஸ்ஸில் ஏறிய மையிட்டான்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் நாகலட்சுமி மிகவும் சோகமாக காணப்பட்டார். தனது இரண்டு குழந்தைகளை அணைத்துக்கொண்டு நின்றார். பேருந்து சிவரகோட்டை அருகே வந்ததும், தனக்கு அருகில் இருந்தவர்களிடம் ’குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்’ என கூறிவிட்டு, விறுவிறுவென முன்புற வாசல் பகுதிக்கு வந்தவர், ஓடும் பேருந்தில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் குதித்துவிட்டார். பேருந்தில் இருந்தவர்கள் கத்தி கூப்பாடு போட்டதும் பஸ் உடனே நிறுத்தப்பட்டது. கீழே இறங்கி பார்த்தபோது, படுகாயத்துடன் சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தார் நாகலட்சுமி. ஆம்புலன்ஸ் மூலம் நாகலட்சுமியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால், அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது....’’ என்று வருந்தினார். இந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, ’’தனக்கு ஐந்து பெண் பிள்ளைகள் இருப்பதை கலெக்டரிடம் சுட்டிக்காட்டிய நாகலட்சுமிக்கு நூறு நாள் வேலை பணியை கண்காணிக்கும் தற்காலிக வேலை கொடுத்தார் கலெக்டர் அனீஷ் சேகர். நாகலட்சுமியை 100 நாள் வேலை திட்டப் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுமாறு மையிட்டான்பட்டி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 2 பேரும், ஊராட்சி செயலர் முத்துவும் என மிரட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து நாகலட்சுமி ஏற்கெனவே கள்ளிக்குடி போலீஸில் புகார் அளித்து இருக்கிறார். எனவே, அந்த 3 பேரும் சேர்ந்து மீண்டும் நாகலட்சுமியிடம், போலீஸில் புகார் அளித்தது பற்றி அவதூறாக பேசி தாக்க முயன்றதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனை கலெக்டரிடம் முறையிடுவதற்காக ஊரில் இருந்து மதுரைக்கு கிளம்பி வரும்போது அவர்கள் போன் செய்து அசிங்கமாக திட்டியிருக்கிறார்கள். ஜாதி வெறியே இதற்கு முக்கிய காரணம். ஜாதியை காரணம் காட்டியே அவமானப்படுத்தியிருக்கிறார்கள். நூறு நாள் வேலையில் நடக்கும் போலி அடையாள அட்டையைப் போட்டு கிளார்க் மூலம் கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். இதுபற்றி கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும் என நினைத்து ஊரில் இருந்து நாகலட்சுமி புறப்பட்டுள்ளார். மூத்த மூன்று மகள்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி ஆகிய குழந்தைகளை தன்னோடு அழைத்துக்கொண்டு, தங்கள் ஊரில் இருந்து திருமங்கலம் வழியாக மதுரை பெரியார் நிலையம் வரும் பஸ்ஸில் ஏறி பயணித்துள்ளார். வரும் வழியில்தான், இந்த விபரீத முடிவு எடுத்து ஓடும் பஸ்சில் இருந்து நாகலட்சுமி குதித்து உயிரை துறந்திருக்கிறார்..அந்தப் பெண் கொடுத்த புகாருக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யாத காரணத்தால் ஒரு அபலைப் பெண் உயிர் போய்விட்டது. இந்தப் பெண் இறந்ததற்கு மையிட்டான்பட்டி கிராம மக்கள் யாரும் போகக்கூடாது என்று மறைமுகமாக உத்தரவு வந்திருக்கிறது. அதனால் அவர்கள் எல்லாம் உயிருக்கு பயந்து நாகலட்சுமி இறப்பை புறக்கணித்திருக்கிறார்கள். மதுரையில் அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லக்கூட முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை. அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக எங்கள் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்’’ என்றார். போலீஸ் விசாரணையிஙன்போது, நாகலட்சுமி வைத்திருந்த பையில், கலெக்டருக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், ’அன்புள்ள கலெக்டர் ஐயா அவர்களுக்கு, மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய என்னை நியமித்தீர்கள். ஆனால், அந்த வேலையை எனக்கு கொடுக்கமாட்டேன் என்று அந்த ஊர் வார்டு மெம்பர் வீரக்குமார் மற்றும் பாலமுருகன், கிளார்க் (ஊராட்சி செயலர்) முத்து ஆகியோர் என்னை மிகவும் தவறாக பேசினார்கள். நான் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இதுபற்றி புகார் அளித்தேன். இதை அறிந்து ஏன் புகார் கொடுத்தாய் என்று திட்டி தற்கொலை முயற்சிக்கு தூண்டினர். எனக்கு 5 பெண் குழந்தைகள். ஆதலால், எனக்கு வேலை கேட்டது தவறா? மேற்கண்ட 3 பேரும் என்னை வேலையை விட்டு விலகும்படி கூறினார்கள். என் தற்கொலை முயற்சிக்கு அவர்கள்தான் முக்கிய காரணம். அவர்கள் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்திவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, தற்கொலை செய்யும் தீர்மானத்தோடே கடிதம் எழுதிக்கொண்டு பேருந்தில் பயணித்துள்ளது தெரியவருகிறது. இதுதொடர்பாக கள்ளிக்குடி போலீஸார் தீவிரமாக விசாரித்தால் உண்மை தெரியவரும். மேற்படி மூவரின் செல்போன் கால் டீடெயில் விவரங்களை சேகரித்தால் வழக்கிற்கு கூடுதல் வலு சேர்க்கும்...’’ என்றார். உயிரை மாய்த்துக்கொண்ட நாகலட்சுமியின் கணவர் கணேசன், ’’என் மனைவிக்கு மிரட்டல் விடுத்து சித்திரவதை செய்த ஊராட்சி செயலர் முத்து, உறுப்பினர் பாலமுருகன், இவரது மனைவி நாகரெத்தினம் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க கலெக்டரும், தமிழக முதல்வரும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என்றார். கூடுதல் ஆட்சியர் சரவணன், ’’நாகலட்சுமி மரணம் கொடுமையானது. அவருக்கு பணி செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்னைகளை எங்களிடம் தெரிவித்திருந்தால் அவரிடம் பேசியிருப்போம். அவரின் குழந்தைகளைக்கூட நினைக்காமல் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டார். நாகலட்சுமி அரசுப் பணியாளர் அல்ல. என்ன நடந்தது என்று அந்த பஞ்சாயத்து, யூனியன் அலுவலகம், கிராம மக்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார். பரிதாபம். - பாலா