இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இடம் கேட்டு 40 ஆண்டுகளாகப் போராடி வரும் மக்களுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வால் விடிவு கிடைத்தும் ஆளும் தி.மு.க.வினர் தடை போடுவதால் மயிலாடுதுறை கூட்டணியில் கடமுடா குஸ்தி.போராட்டத்தில் ஈடுபட்ட மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கத்திடம் பேசினோம். ’’மயிலாடுதுறை தனி மாவட்ட தலைநகர் ஆனாலும் அருகிலுள்ள ஊர்களுக்கு எந்த வசதியும் இல்லை. குறிப்பாக மாப்படுகை, கூறைநாடு, ஜங்ஷன், திருவிழந்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, சுடுகாட்டில் சடலங்களை எரிப்பதற்கு முறையான, பாதுகாப்பான எரிகூடமும் இறந்துபோனவருக்கு கருமாதி செய்ய கருமாதி மண்டபமும் இல்லை. இதற்காக 1980ம் ஆண்டு முதல் முதல் கொடுத்துவருகிறோம். மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கை சுத்தம் செய்து அந்த இடத்தில் கருமாதி மண்டபம் கட்ட வேண்டும் என்று எம்.எல்.ஏ. ராஜ்குமாரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் கருமாதி மண்டபம் கட்ட 10 லட்ச ரூபாயை ஒதுக்கிவிட்டார். ஆனால், ஒரு வருடமாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, மீண்டும் போராடத் தொடங்கினோம். எங்கள் போராட்டத்தால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. ஆனால், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெகவீரபாண்டியன் கருமாதி மண்டபம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திவிட்டார்..இந்த கருமாதி மண்டபத்துக்கு அருகே அவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு நடுவே 10,000 சதுர அடிக்கு மேல் எங்களது சுடுகாடு உள்ளது. இதற்கு வாய்க்கால் கரைதான் பாதை. இந்த பாதை அவருக்குத்தான் சொந்தம் என்பதால், சுடுகாட்டில் எரிகொட்டகை அமைப்பதை தடுத்தார். அவரிடம் பிரச்னை செய்ய விருப்பமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்படி நடுவில் இருக்கும் எங்கள் 10,000 சதுர அடிக்கு பதிலாக அவரது நிலத்திற்கு கிழக்கே 10,000 சதுர அடி இடம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டது. அந்த முடிவு எடுக்கப்பட்டு ஐந்து வருடமாகியும் அந்த இடத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. ஆனால், இப்போது கருமாதி மண்டபம் கட்டும் எங்கள் கோரிக்கையில் மண் அள்ளிப்போடுகிறார். மேலும், அவரது தம்பி மூலம் நீதிமன்றத்தில் வழக்கு போடச்செய்து பிரச்னையை பெரிதாக்குக்கிறார். இது முழுக்க முழுக்க நகராட்சிக்குச் சொந்தமான இடம். பதிவேட்டிலும் மயானம் என்றுதான் உள்ளது. ஆனால், அமைச்சர் மூலம் ஜெகவீரபாண்டியன் நெருக்கடி தருவதால், நகராட்சி அதிகாரிகளும் அவருக்கு சாதகமாகவே பேசிவருகின்றனர். மெயின்ரோடு அருகே கருமாதி மண்டபம் கட்டினால் பொதுமக்கள் பார்வையில் இருக்கும். அங்கே எந்த சமூக விரோத செயல்களும் நடைபெறாது. இவர்கள் சொல்வது போல் உள்ளே தள்ளி மறைவான இடத்தில் கட்டினால், அது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிடும்..இவருக்கு ஆதரவாக எந்த தி.மு.க.வினரும் இல்லை. இவர் பா.ஜ.க.வில் இருந்தபோது தன்னுடன் இருந்த நான்கைந்து நபர்களை இப்போதும் கையில் வைத்துக்கொண்டு இப்படி மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மீண்டும் அதே இடத்தில் பணியை தொடங்குவதாக சேர்மன் மற்றும் அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்துள்ளதால், தற்காலிகமாகப் போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளோம்’’ என்றார்.சி.பி.எம். கட்சியின் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ’’கருமாதி மண்டபம் கட்டினால் அருகே உள்ள ஜெகவீரபாண்டியனுக்குச் சொந்தமான நிலத்தின் விற்பனை விலை குறைந்துவிடும் என்ற ஒரே காரணத்தால்தான் தடுத்து வருகிறார். கட்டுவதற்கு முன்பே பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர் இப்போது கட்டிடம் கட்ட பில்லர் எழுப்பப்பட்ட பிறகு தீவிரமாக தடுத்து வருகிறார். தம்பியை விட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, வன்னியர் சங்கத்தினரை தூண்டிவிட்டு, ’இது பாளையப்பட்டு வன்னியர்களுக்குச் சொந்தமான இடம்” என்று புகார் கொடுக்கச் சொல்வது என்று புதுப்புது வகையில் இடைஞ்சல் செய்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் சம்பந்தப்பட்ட பாளையப்பட்டு வன்னியர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் கொடுக்க வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு இது தங்களுடைய இடம் கிடையாது என்பது தெரியும். இவர் வேண்டுமென்றே அவர்களை உள்ளே இழுத்து இருதரப்பினருக்கும் ஜாதி மோதல் ஏற்படும்படி நடந்துகொள்கிறார். இப்போது நகராட்சி அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு கட்டித்தருகிறோம் என்று நாட்களை கடத்துகின்றனர்’’ என்றார்..இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜெகவீரபாண்டியனிடம் விளக்கம் கேட்டோம். ‘’அடுத்தவர் இடத்தையோ, பொருளையோ அபகரிக்கும் எண்ணம் என் ரத்தத்தில் இருந்ததில்லை. கருமாதி மண்டபம் கட்டும் பணியை நான் தடுக்கவில்லை. நான்தான் மயிலாடுதுறையையும், பல கிராமங்களையும் இணைக்கின்ற சாலைக்கு மாப்படுகையில் இடம் கொடுத்திருக்கிறேன். மாப்படுகை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுப்பியதோடு, என சொந்த பட்டா நிலத்தை ரயில்வே நிர்வாகத்திடம் கொடுக்கவும் உத்தரவாதம் அளித்தேன்..இப்படியிருக்கையில், எனது அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காத சிலரது தூண்டுதலின் பேரில் காம்ரேடுகள் தங்கள் கொள்கை சித்தாந்தத்திலிருந்து விலகி எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் திருவிடைமருதூர் ராமலிங்கத்திற்கு நான் வாக்கு கொடுத்ததன் அடிப்படையில் அவரை வாழ்த்தி வழிவிட்டு ஒதுங்கி நின்றேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதை கெடுப்பதற்காகவே சி.பி.எம். காம்ரேடுகள் மூலம் எனக்கு எதிராக அவதூறை பரப்பி வருகின்றனர்...’’ என்றார்.மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜியோ, ’’உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் கருமாதி மண்டபம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும்...’’ என்றார்.சட்டுபுட்டுனு வழிபண்ணுங்க.- ஆர்.விவேக் ஆனந்தன்