திருப்பதி பெருமாளை சேவிக்க தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டாலும், அதனை முறைப்படுத்தி வரிசையில் அனுப்புகிறது தேவஸ்தானம். ஆனால், அதையும் மீறி கூட்டத்தில் பெண் பக்தைகளுக்கு பாலியல் சீண்டல் நடப்பதாக பாடகி சின்மயி போட்ட ட்விட்டால் கொதித்துக் கிடக்கிறார்கள் பெருமாள் பக்தர்கள்!என்ன நடந்தது? பாடகி சின்மயியிடம் பேசினோம். “நடந்ததை எழுதினேன்... ‘என்னை யாரும் திட்ட வேண்டாம். உங்கள் வீட்டுப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளோடு திருப்பதி கோயிலுக்குச் செல்வதாக இருந்தால், அவர்களை நாலாபுறத்திலும் இருந்து காப்பாற்றுங்கள். நிறைய பெண்கள் இதுபோன்ற மதக் கூட்டங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உள்ளனர்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன்.திருப்பதி மட்டுமல்ல, கோயில்களில் வரிசையில் நிற்கும் பெண்களை பலர் உரசிச் செல்கிறார்கள். இதை நான் பல வருடங்களாக பேசிவருகிறேன். ஆனால், ஒண்ணும் தெரியாதது போல் பலர் நடிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இதற்காக கோயில் மீது நான் குற்றம் சுமத்துகிறேன் என்பது பொருள் அல்ல..திருப்பதி என்பது மிகப் பெரிய புண்ணிய ஸ்தலம். அந்தக் கோயிலின் கண்ணியத்தைப் பற்றியோ, மகத்துவத்தைப் பற்றியோ நான் குறை சொல்லவில்லை. பொதுவாகவே, பெண்கள் கோயிலுக்குச் சென்றால் அவர்களை பாதுகாக்க ஆண்கள் சுற்றி நிற்கவேண்டும். இல்லையென்றால், பிறர் அவர்களை உரச வாய்ப்பு இருக்கிறது. கோயில்களில்கூட பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதே என் கருத்து” என்றார் சீரியஸாக.சின்மயி கருத்தை ஆமோதிப்பதுபோல் பேசிய பெண் பக்தர் உமா சத்யநாராயணன் என்பவர், “திருமலை வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு மாதம் ஒரு முறை குடும்பத்துடன் செல்வது வழக்கம். சில சமயங்களில் என்னிடமும் பாலியல் சீண்டல் நடந்திருக்கிறது. நான் அமைதியாக செல்பவள் அல்ல. அங்கேயே தவறை தட்டிக்கேட்பேன். ஒருசில நேரங்களில் சிலரைப் பிடித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்..இதற்காக நான் திருப்பதி கோயில் மீதோ, நிர்வாகத்தின் மீதோ குற்றம் சுமத்தவில்லை. பக்தர்கள் நலன் கருதி கோயில் நிர்வாகம் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தந்திருக்கிறது. போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களும் இருக்கின்றன.ஆனால் ‘கேலரி’யைத் தாண்டி மூலவரைக் காண அருகில் சென்று, மெய்மறந்து ‘கோவிந்தா... கோவிந்தா’என்று உச்சரிக்கத் தொடங்கும்போது சிலர் உரசிப் பார்க்கிறார்கள். இவர்கள் ஆண்டவனை வணங்கத் தகுதியற்றவர்கள். தெரியாமல் நடப்பது வேறு. தெரிந்தே செய்வது வேறு.இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைத்து பெண்களாலும் உணரமுடியும். சமயபுரம், திருப்புவனம் சரபேஸ்வரர் கோயில் ஆகிய தலங்களிலும் எனக்கு இதுபோன்று நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறேன். புகாரும் கொடுத்திருக்கிறேன்” என்றார் ஆவேசமாக.நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி, ” பெண்களை உடலால் மட்டும் அல்ல... பார்வையால் சீண்டுதல்கூட பல இடங்களில் தொடர்கிறது. இப்படிப்பட்டவர்கள் கோயிலை மட்டும் விட்டு வைக்கப்போகிறார்களா? மற்ற விஷயங்களுக்கு எல்லாம் வர்க்க பேதங்கள்,சாதி பேதங்களை பார்ப்பார்கள். ஆனால், பெண்களை சீண்டுவதற்கு எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.இப்போதைய நிலவரப்படி பெரிய கோயில்களில் பெண்களுக்கென்று தனிவரிசை எதுவும் கிடையாது. ஆனால், சிறிய கோயில்களில் மூலவரை பெண்கள் தரிசனம் செய்ய தனிவரிசை இருக்கிறது. எனவே, பெரிய கோயில்களில் பெண்களுக்கென தனி வரிசைகளை அமைக்க அரசு முன்வர வேண்டும்..இதற்கான தீர்வு ஆண்களிடம்தான் இருக்கிறது. ஆண் குழந்தைகள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளரும்போது, ‘ஒரு பெண்ணை போகப்பொருளாகவும், உடலாகவும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லி வளர்க்க வேண்டும். ‘கற்பு’என்பது எப்படி இருபாலருக்கும் பொதுவானதோ அதேபோல் சீண்டலும் பொதுவானதுதான். இதை ஆண்கள் உணர்ந்து நடந்தால் சீண்டல் தொடர்பான குற்றங்கள் குறையும். இதையும் மீறி செயல்படுகிறவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார் காட்டமாக.திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியிடம் விளக்கம் கேட்டோம். “கோயில் நிர்வாகம் முடிந்தவரை பக்தர்களை முழுமையாக பாதுகாக்கும் பணியை செய்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்தும் தேவஸ்தானத்தில் முழுமையாக செய்து தரப்பட்டிருக்கிறது. எந்த தவறுகளும் நடக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.இதையும் மீறி பெண்களிடம் தவறாக நடக்கக் கூடியவர்கள் பாரபட்சமின்றி சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் துணிந்து புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால்தான் இப்படிப்பட்ட தவறுகளை களைவது குறித்து கோயில் நிர்வாகம் ஆலோசனை நடத்தி முழுமையான தீர்வு காணமுடியும்” என்றார் திடமாக.புனிதத்தைக் காப்போம்... பாலியல் நபர்களை தண்டிப்போம்!கணேஷ்குமார்