விண்வெளித்துறையில் இந்தியாவை முந்தியிருக்கும் நாடுகளே மூக்கில் விரல்வைத்து உற்றுநோக்கும் வகையில், சந்திரயான் 3ஐ நிலவின் தென்துருவத்தில் இறக்கி உலக சாதனை படைத்துள்ளது, இந்தியா. விக்ரம் லேண்டர், புதிய வொண்டராக மாறியிருப்பதை தேசத்தின் பெருமையாகக் கொண்டாடித் தீர்க்கின்றனர், இந்திய மக்கள். நிலவின் தென்துருவப் பகுதியை சோலாவாக அடைந்திருக்கும் இந்த மகத்தான பயணம் குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவனிடம் பேசினோம். “நிலவில் தரையிறங்குவதை நான்கு கட்டங்களாகப் பிரிக்க முடியும். அவை ரஃப் பிரேக்கிங் பேஸ், ஆட்டிட்யூட் ஹோல்ட் பேஸ், பைன் பிரேக்கிங் பேஸ், டெர்மினல் டிசெண்ட் பேஸ்'' எனப் பட்டியலிட்டவர், அவை ஒவ்வொன்றும் இயங்கும் விதத்தை விவரித்தார். ரஃப் பிரேக்கிங் பேஸ்: (Rough-Breaking Phase) நிலவின் தரைப்பகுதியிலிருந்து 30 கி.மீ உயரத்தில் இருக்கும் விக்ரம் லேண்டர், கிடைமட்டமாகச் செய்துகொண்டிருந்த பயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக செங்குத்துப் பயணமாக மாற்றும் வேலை இது. அந்தநேரத்தில் அதனுடைய வேகம் ஒரு நொடிக்கு 1.68 கி.மீட்டராக இருக்கும். சுமார் 696 நொடிகளுக்கு இதேவேகத்தில் லேண்டர் தனது பயணத்தைத் தொடரும்..ஆட்டிட்யூட் ஹோல்ட் பேஸ்: (Attitude-Hold Phase) இரண்டாவது கட்டத்தில் விக்ரம் லேண்டர் கிடைமட்டத்திலிருந்து முழுக்க செங்குத்தாக தனது பயணத்தை மாற்றிக்கொள்ளும். நிலவின் தரைப்பகுதியிலிருந்து 7.4 கி.மீ தூரம் இருக்கும்போது, லேண்டர் தனது வேகத்தைக் குறைத்துக்கொள்ளும். வெறும் 10 நொடிகளில் இது நடக்கவேண்டும். ஃபைன் பிரேக்கிங் பேஸ்: (Fine breaking phase) நிலவை நோக்கி கிட்டத்தட்ட 28.52 கி.மீ தூரம் பயணம் செய்தபிறகு, விக்ரம் லேண்டரின் வேகம் பூஜ்யமாக மாற்றப்படும். அதேநேரம், லேண்டரின் கட்டுப்பாடு இழக்காமல், அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். டெர்மினல் டிசெண்ட் பேஸ்: (Terminal descent phase) தரையிறங்க வேண்டிய இடத்துக்கு சிறிது தொலைவில் நிற்கும் லேண்டர், அந்த இடத்தை மீண்டும் ஒருமுறை, `சரியான இடம்தானா?' என்று பரிசோதனை செய்யும். மேலும், சில பாதுகாப்பு சோதனைகளையும் நடத்தும். அது முடிந்த பிறகுதான் லேண்டர் அங்கு இறங்கும். - என ஒவ்வொரு கட்டத்தையும் விவரித்து முடித்த சிவன், `` தற்போது இந்த நான்கு கட்டங்களையும் பிசிறில்லாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து முடித்துள்ளனர். நிலவின் தென்துருவப் பகுதியில் ‘போகுஸ்லாஸ்கி’ என்ற இடத்துக்கு அருகே இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. நிலவில் புவியீர்ப்பு விசை குறைவு. இதனால் விக்ரம் தரையிறங்கியபோது எழுந்த புழுதி அடங்குவதற்கு கிட்டத்தட்ட 4 மணிநேரம் தேவைப்படும். அதுவரை விக்ரம் லேண்டர் இயங்காது. அதன்பின்னர், அதிலிருந்து ஒரு பலகை விழும். அதன்வழியாக பிரக்யான் ரோவர் வெளியில் வந்து ஆய்வில் ஈடுபடும்” என்றார், உற்சாகத்துடன். . ``நிலவின் தரையில் இறங்க, ஆகஸ்ட் 23ம் தேதியை தேர்ந்தெடுக்க ஏதேனும் காரணம் உண்டா?" என சந்திரயானின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்டோம். “நிச்சயம் உண்டு. ஆகஸ்ட் 23-ம் தேதியில் இருந்து நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி வீசிக்கொண்டே இருக்கும். விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வரும் பிரக்யானில் சூரியத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், சூரிய சக்தியின் மூலம் அது செயல்படும். விக்ரம் லேண்டரிலிருந்து ஒரு கி.மீ வரை மட்டுமே பிரக்யானால் செயல்பட முடியும். அது, நிலவின் தரைப்பகுதியில் உள்ள நீர், கனிமங்கள் தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டு, தகவல்களை லேண்டருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் அனுப்பும். ஒருவேளை, பிரக்யானுக்கு சிக்னல் கிடைக்காமல் போனால், கடைசியாக தனக்கு சிக்னல் கிடைத்த இடத்தை நினைவில் வைத்துக்கொண்டு, சரியாகத் திரும்பிவரும் வகையில் செயற்கை நுண்ணறிவு அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் முடிவில், அங்கே இருட்டு ஏற்படும்போது, கடும் குளிர் நிலவும். அதனால் அனைத்து சாதனங்களும் செயலிழந்துவிடும். ஆனால், புதிய முயற்சியாக பிரக்யானின் சோலார் பேனல்களை ஒரு போர்வையாக மடக்கி, அதனை மூடிக்கொள்ளும் திட்டம் உள்ளது. இருட்டு முடிந்தபிறகு, `மீண்டும் பிரக்யான் வேலை செய்கிறதா?' என்ற சோதனை நடத்தப்படும். இதன்மூலம் அதன் சுற்றுச்சூழலை அறியும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. உண்மையில், சந்திரயான்-3 திட்டத்தின் நோக்கம் நிலவிலிருந்து கல், மண்ணை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும்புவதுதான். இனி இந்தியாவும் ஜப்பானும் கூட்டுசேர்ந்து நிலவிலிருந்து கற்கள், மண் போன்றவற்றை எடுத்துவந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அது சந்திரயான் - 4 ஆக கருதப்படலாம். ஏற்கெனவே, இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்துக்கு தீவிர முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவைப் பயன்படுத்தி விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை பல நாடுகளும் அனுப்பத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் நமக்கு லாபம் கிடைத்து வருகிறது. விண்வெளித்துறையில் முதலீடு அதிகரிப்பதால் வேலைவாய்ப்பும் பெருகும்'' என்றார் உறுதியான குரலில். .அனைவருமே அரசுப் பள்ளி மாணவர்கள்தான்! * சந்திரயான் 1 திட்டத்தில் இருந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் - 2 திட்டத்தில் இருந்த வனிதா முத்தையா, மங்கள்யான் திட்டத்தின் சுப்பையா அருணன், சந்திரயான்-3 திட்டத்தில் இருந்த வீரமுத்துவேல் ஆகிய நால்வருமே அரசுப்பள்ளியில் தமிழ் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது ஆச்சர்ய தகவல். -அபிநவ்