`முப்பது நாள்களில் 15 கொலைகள்' என தமிழக அரசுக்குத் தொல்லை கொடுக்கும் நகராக உருவெடுத்து வருகிறது, நெல்லை. அதிலும், பாதயாத்திரையில் வலம்வந்த நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் சாய்த்ததால், அக்னிப்பிழம்பாக கொதித்திருக்கிறார், அண்ணாமலை. நெல்லை, பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது மூளிக்குளம். தேவேந்திரகுல சமுதாயத்தினர் மட்டுமே வசிக்கும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர், ஜெகன். தொடக்கத்தில் பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்றக் கழகம், அடுத்து, ஜான் பாண்டியனின் கட்சி எனப் பயணித்தவர், 2022ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு நெல்லை மாநகர இளைஞர் அணி பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாய் வெட்டி சாய்த்துள்ளது. “என்ன நடந்தது?” என ஜெகனின் சகோதரி சத்யாவிடம் கேட்டோம். ``எனக்கு ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். மூளிக்குளம் பிரபு ஆளுங்கட்சியில இருக்கார். ஊர்த்தலைவரும் (நாட்டாமை) அவர்தான். அதனால் ஊரையே தனக்கு அடிமையாக நினைத்தார். இது ஜெகனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட சண்டையால உயிருக்குப்பயந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னாடியே ஊரை காலி செஞ்சுட்டு கே.டி.சி. நகருக்கு போனோம். ஆனாலும் மூளிக்குளத்துக்கு ஜெகன் அடிக்கடி போனார். அங்குள்ள மக்களுக்கு நிறைய உதவிகளை செஞ்சதால, ஊரே ஜெகனை கொண்டாடுச்சு..பா.ஜ.க தலைவர் அண்ணாமலையோட புரோக்ராமை ஏற்பாடு செஞ்சதும் ஜெகன்தான். இந்த நிலையில, கோயில் திருவிழாவை ஊரே மெச்சும்படி நடத்தினார். இதனால கோபப்பட்ட பிரபுவும் அவரின் மனைவி ரேவதியும் திருவிழாவுக்கு வரவில்லை. அதே வேகத்துல ஜெகனை கொன்னுட்டாங்க. ‘பிரபுவை கைது செய்யும் வரை ஜெகனின் உடலை வாங்கவேண்டாம்’ என்று அண்ணாமலை கூறிவிட்டார். அந்த முடிவில்தான் நாங்களும் உறுதியாக இருக்கிறோம்” என்றார். இதுகுறித்து, மூளிக்குளம் பிரபுவிடம் விளக்கம் கேட்க பலமுறை தொடர்பு கொண்டும் அவரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. அடுத்து, இன்ஸ்பெக்டர்கள் காசிப்பாண்டியன், வாசிவம் ஆகியோரிடம் பேசியபோதும், அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “மூளிக்குளம் பிரபு ரவுடிகள் பட்டியலில் இருக்கிறார். ஜெகன் மீதும் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் இருக்கின்றன. `ஊரில் யார் கெத்து?' என்கிற போட்டியில் ஒருவரை ஒருவர் கொல்ல தயாராகி வருவதை அறிந்து நான்கு முறை எச்சரித்தோம். இப்போது கொலை நடந்துவிட்டது. இதுதொடர்பாக, எட்டு பேரை கைது செய்திருக்கிறோம். இந்தக் கொலையில் தேடப்பட்டு வந்த ரஞ்சித் என்பவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அவர், பிரபுவின் வலதுகரமாக இருந்தவர். பிரபு தலைமறைவாக இருப்பதால் தீவிரமாக தேடி வருகிறோம்” என்றார். `கிரைம் சிட்டி' என்ற களங்கத்தைத் துடைக்குமா அரசு? - அ.துரைசாமி