’சீச்சீ நீலகிரி புளிக்கும் என்று அந்த நாடாளுமன்றத் தொகுதியை விட்டு விலகி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு ஒரு தொகுதிக்கு ஸ்கெட்ச் போடுகிறார் தி.மு.க. சிட்டிங் எம்.பி.யான ஆ.ராசா’ என்பதுதான் கடந்த சில நாட்களாக ஏரியாவில் பரபர பட்டாஸ். ஏனிந்த மாற்றம் என்று நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டோம். ‘’பெரம்பலூரை சேர்ந்த ஆ.ராசா அதே நாடாளுமன்றத் தொகுதியில் சில முறை எம்.பி.யாக இருந்தாருங்க. தொகுதி சீரமைப்பின் மூலம் கடந்த 2009ல் அது பொது தொகுதியாக மாறியதும் தனக்கு ஏதுவாக வேறு ஒரு தனித் தொகுதியை தேடினார். அதே தேர்தலில் இந்த நீலகிரி தொகுதியானது பொதுப் பட்டியலில் இருந்து தனித்தொகுதி பட்டியலுக்கு மாற்றப்படுவது தெரிந்ததும், ராசா உடனே இதை குறி வெச்சார். ஆனாலும் நீலகிரி தொகுதியின் கீழ் நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை என நான்கு மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளும் வருவதால் தனக்கு அது எடுபடுமான்னு அவருக்கு சந்தேகம். உடனே தனது பெரம்பலூர் டீமை இங்கே அனுப்பி ஒரு சர்வே நடத்தியவருக்கு பாசிடீவ் ரிப்போர்ட் கிடைச்சுது. உடனே அப்போதைய எங்கள் தலைவரான கருணாநிதியின் பூரண ஆசியுடன் நீலகிரிக்கு மலையேறினார் ராசா. ஆக்சுவலாக பட்டியலினத்தோரில் மிகவும் அடிமட்டத்தில் கிடக்கும் அருந்ததியர் இனத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகளுக்கு வாய்ப்பிருக்கும் ஓரிரு தொகுதிகளில் நீலகிரியும் ஒன்று. ஆனா பட்டியலினத்தில் சற்று ஆதிக்கமான சமூகத்தைச் சேர்ந்த ராசா சட்டென வந்து குதித்ததை இங்கே அரசியல் செய்து வந்த அருந்ததியர் இன எங்க கட்சி நிர்வாகிகளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. ஆனாலும் தலைமையின் உத்தரவு மற்றும் ராசா ‘வசதி மற்றும் செல்வாக்கு’ படைத்தவர் என்பதால் அவரை கொண்டாட்டமாக வரவேற்று, குதூகலமாக ஜெயிக்க வெச்சோம்..சும்மா சொல்லக்கூடாது மக்கள் கிட்டேயும், கட்சிக்காரங்கட்டேயும் நல்ல பேரை சம்பாதிச்சார். 2ஜி வழக்குல சிறைக்குள்ளே இருந்த போதும் கூட தொகுதி ஏழைகளின் ஆபரேஷனுக்கு மத்திய அரசின் உதவிகளை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல ராசாவை தோற்கடித்தே தீரணும்னு ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் மிக வெறித்தனமா அ.தி.மு.க. பிரசாரம் பண்ணுச்சு, ராசா தோற்றார்.தோற்ற ராசா அப்புறம் நீலகிரிக்கு வரமாட்டார்னு நாங்க நினைச்சோம். ஆனால் அவர் அப்படி ஒதுங்கல. மாஜி மத்திய அமைச்சர் அப்படிங்கிற செல்வாக்கில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமில்லாமல் நீலகிரி நாடாளுமன்றத்தில் அடங்கும் நாலு மாவட்டத்திலுமே தன்னோட அரசியல் செல்வாக்கை காட்டினார். அதிலும் குறிப்பாக கோவை மாவட்ட தி.மு.க.வை நிர்வகிக்க உருப்படியா யாருமே இல்லாதது அவருக்கு வசதியா இருந்துச்சு. ராசாவுக்குன்னு ஒரு தனி அணியே இந்த நாலு மாவட்டங்களில் உருவாச்சு. பொதுவாக குறிப்பிட்ட ஒரு ஆதிக்க சாதியினரின் லாபி இருக்கும் கொங்குவில் அவங்களால் ராசாவுக்கு எதிரா பல்லைத்தான் கடிக்க முடிஞ்சுதே தவிர அவரோட செல்வாக்கை அசைக்க முடியலை...’’ என்று நிறுத்தியவர், அடுத்து ராசாவுக்கு இப்போது உருவாகியிருக்கும் நெருக்கடிக்கான காரணத்தை விளக்கினார். .“கொங்கு தி.மு.க.வில் வலுவாக யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு இங்கே அரசாண்ட ராசா, அடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மறுபடியும் இங்கே போட்டியிட்டார், ஜெயித்தார். ஆனால் ஒரு காமெடி பாருங்க, தோற்று மாஜி எம்.பி.யா இருந்தப்ப கூட அவருக்கு இந்த நாடாளுமன்றத் தொகுதியில் செல்வாக்கு இருந்துச்சு. ஆனால் ஜெயிச்சு இப்ப எம்.பி.யா இருக்கும் நிலையில் செல்வாக்கு சரிஞ்சுடுச்சு. இதுக்கு காரணம் அவரேதான். இந்த 4 வருடங்கள்ள பெருசா அவர் தொகுதியில் தலை காட்டல. தேர்தல் நெருங்கிய நிலையில் இப்ப சில மாசமாதான் தொகுதிக்குள் தென்படுறார். இது ஒட்டுமொத்தமா பெரிய அதிருப்தி. இது மட்டுமில்லாமல் இந்துக்களை ராசா உரசிப்பேசுறார், அசிங்கப்படுத்தி பேசுறார் என்று எழுந்துள்ள சர்ச்சையால் நீலகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியான படுகர் இனத்தில் அவர் மேலே அதிருப்தி உருவாகியிருக்குது. ரொம்பவே பக்தியும், கட்டுப்பாடுமான படுகர் மக்கள் அவர் மேலே கடுப்பாகியிருக்காங்க. இந்த சூழலை வகையா பயன்படுத்திக்கிட்ட பா.ஜ.க. இந்த தொகுதியில் தாங்கள் ஜெயித்தே ஆகணும்னு முடிவு பண்ணிடுச்சு. ராசாவுக்கு எதிரா வலுவான வேட்பாளரா மத்திய இணையமைச்சர் எல்.முருகனை இங்கே களமிறக்க முடிவு செய்திருக்குது. சில மாசங்களுக்கு முன் பா.ஜ.க.வின் தேசிய தலைவரான நட்டாவே வந்து பிரசாரம் பண்ணிட்டு போயிட்டார். ராசாவுக்கு எதிரான நேரடி அட்டாக் மட்டுமில்லாமல், தேர்தலில் அவர் துடிப்பா செயல்படுவதை தடுக்க பல வழியில் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கிறாங்க. கோவையில் இருக்கும் ராசாவுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியது. இதெல்லாமே தேர்தல் நேரத்தில் அவருக்கு பணத்தட்டுப்பாட்டு ஏற்பட்டு ராசா முடங்கணும் அப்படிங்கிற எண்ணம்தான். இதே மாதிரி பல பைபாஸ் அட்டாக்கிற்கு பா.ஜ.க. திட்டம் போட்டுள்ளது. இது ராசாவுக்கு நெருடலை தருது.இதுமட்டுமில்லாமல் நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் மற்றும் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு இடையில் உச்சம் தொடும் ஈகோ யுத்தமும் தனக்கு சரிவை தருமோன்னு பயப்படுறார் ராசா..இதையெல்லாம் தாண்டி, கழகத்தின் துணைபொதுச்செயலாளர் அப்படிங்கிற மிகப்பெரிய போஸ்டிங்கில் இருக்கும் அவர் சென்னையை விட்டு வெகுதொலைவில் உள்ள நீலகிரியில் இருப்பதால், அது கட்சியை விட்டு அதிகம் ஒதுங்கி இருக்கிறதா வருத்தப்படுறார். ஏற்கனவே அவரது செல்வாக்கை பார்த்து பொறாமையாகி, தலைமையில் அவரை கட்டங்கட்டிட துடிக்கும் எங்கள் கட்சியின் மாநில வி.ஐ.பி.க்களுக்கு அவர் அடிக்கடி அறிவாலயத்தில் இல்லாததும் நல்ல வசதியா போச்சு. தலைவர்ட்ட அவரை பத்தி தப்புதப்பா சொல்லி முடிச்சுவிட பார்க்கிறாங்க.ஆக இதுக்கெல்லாம் ஒரு தீர்வாகத்தான் ஆ.ராசா இந்த முறை பேசாமல் திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதிகளில் நிற்கலாமான்னு நினைக்கிறார். ஆனால் ராசாவின் இந்த மூவ்வால், அந்த தொகுதியில் எம்.பி. சீட் எதிர்பார்த்து அரசியல் செய்யும் எங்கள் கட்சி நபர்கள் காண்டாகி மெதுவா எதிர்ப்பை துவக்கிட்டாங்க...” என முடித்தனர். நாம் ராசாவிடம் இது பற்றி விளக்கம் கேட்க முயன்றோம். அவர் தொடர்புக்கு வரவில்லை. ஆகவே, நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர தி.மு.க. செயலாளரான ஜார்ஜ். ‘’ “ஆ.ராசா நீலகிரியில்தான் போட்டி போடணும் அப்படிங்கிறது எங்கள் விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் அதுதான். அவர் தொகுதி மாறும் வாய்ப்பே இல்லை. மக்கள் கொண்டாடுற அளவுக்கு அவ்வளவு நல்லது பண்ணிட்டிருக்கார். கடும் மழை வெள்ளத்திலும் வேட்டியை மடிச்சு கட்டிட்டு சகதிக்குள் இறங்கிய மனுஷன் அவர். தொகுதி நிதியாகவும், தன் சொந்த நிதியாகவும் மக்களுக்கு அள்ளியள்ளி கொடுத்திருக்கார். அதனால் நீலகிரி மக்களே ராசாவை கௌம்ப விடமாட்டாங்க. இந்த முறை எம்.பி.யான பின் ராசா தொகுதிக்கு அதிகம் வரலைங்கிறது பொய்யான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்ட, ஆரவாரமில்லாமல் அவர் கிராமம் கிராமமாக வந்து செல்வது வெளியே தெரியலைங்கிறதுதான் உண்மை. இந்த 4 வருடங்களில் அவர் எத்தனை கிராமங்களில் எவ்வளவு சேவைகளை மக்களுக்கு செய்திருக்கார்னு புள்ளிவிபரமா எடுத்து விளக்க நாங்க தயார்’’ என்கிறார். ஆ.ராசாவுக்கு எதிராக பா.ஜ.க. தரும் நெருக்கடி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கேட்டதும், “அரசியல் எதிரிகளை பைபாஸில் முடக்கும் செயலை பா.ஜ.க. ஒரு நாளும் செய்யாது. நேரடி மோதல்தான் எங்களின் ஸ்டைல். அதே வேளையில் ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டார் என்பது உண்மை. பக்திமான்களான படுகர் மக்கள் மட்டுமல்ல ஆறு தொகுதி இந்துக்களும் ராசா மீது மிக கடுமையான கோபத்தில் உள்ளனர். பகுத்தறிவு எனும் பெயரில் புரட்டு நாத்திகம் பேசுவதுதான் ராசாவின் சித்தாந்தம். இதை இந்துக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்..கோவையிலுள்ள ராசாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டபோதே மக்களுக்கு ‘எப்படி வந்தன இவ்வளவு சொத்துக்கள்?’ எனும் கேள்வி எழுந்தது. அது அவருடைய சொத்து சமுத்திரத்தின் ஒரு துளிதான் என்பதை பா.ஜ.க. மக்களுக்கு எடுத்து விளக்கியபோது மிரண்டு போனார்கள் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்கள். ராசாவின் வெளிநாட்டு போக்குவரத்துகளும் மிக முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அவர் மக்கள் மன்றத்தில் தந்துதான் ஆக வேண்டும்.நீலகிரி நாடாளுமன்றத்தில் உள்ள 6 தொகுதிகளில் நான்கில் கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிதான் வென்றுள்ளது என்பதை கவனியுங்கள். ஊட்டியிலும் கூட பா.ஜ.க. வேட்பாளர் வெற்றியை நெருங்கி வந்துதான் தோற்றார். அவர் தோல்வியை மக்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. அதனால் நீலகிரி நாடாளுமன்றமானது பா.ஜ.க.வின் கோட்டை. அதனால் நீலகிரி மட்டுமல்ல தமிழகத்தில் எந்த தொகுதியில் போய் நின்றாலும் ராசாவுக்கு தோல்வி ஒன்றையே மக்கள் பரிசாக தருவார்கள்...” என்றார். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..