ஒரு நீண்ட ஷெட்யூல் வேலூர் பகுதிகளில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ அடுத்த கட்டப்படப்பிடிப்பு மே 3ம் தேதி மும்பையில் தொடங்கி 20 நாட்கள் நடக்கிறது. முதலில் இந்த இந்தப் படத்தின் கெஸ்ட் ரோலில் ரஜினி ஐந்து நாட்களே நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவரது போர்ஷன்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மும்பையின் இந்த 20 நாட்கள் படப்பிடிப்பிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாராம் ரஜினி. # ஸ்டார் சலாம்..விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘லியோ’படத் தயாரிப்பாளர் விரைவில் படத்தை விட்டு வெளியேறப்போகிறார். இதற்கு முந்தைய ‘வாரிசு’படத்திலேயே ஏகப்பட்ட குளறுபடிகள் செய்தார் என்று புகார் வந்திருந்த நிலையில், அதை நம்பாத விஜய், ‘லியோ’ பட விவகாரம் தொடர்பாக சிலவற்றை கிராஸ்செக் செய்தாராம். பணப்பட்டுவாடா தொடர்பான கூட்டல்,கழித்தல்களில் சில வழித்தல்கள் இருந்ததைக் கண்டுபிடித்தவர் ‘மொத்தக் கணக்கையும் நான் சொல்றவர் கிட்ட ஒப்படைங்க’என்று சீறிவிட்டாராம். # கணக்கு, பிணக்கு, ஆமணக்கு..தயாரிப்பாளர் ஒரே படத்துக்கு எட்டு திசைகளில் இருபத்தெட்டு பேர்களிடம் ஃபைனான்ஸ் வாங்கியிருந்த வகையில் பல ரிலீஸ் தேதிகளை வெறுமனே செய்தித்தாள்களில் மட்டுமே கண்ட விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ ஒரு வழியாக தியேட்டருக்கு வந்தேவிட்டது. படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள், தன் பேரன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்ததால் பிரிவியூ பார்க்க வந்திருந்தார் எடிட்டர் மோகன். க்ளைமேக்ஸ் நெருங்கும்போது பேரனின் காட்சிகளைப் பார்த்தவர், உணர்ச்சி வசப்பட்டு வெடித்து அழுதபடி தியேட்டரை விட்டு வெளியே வந்துவிட்டார். பாசத்தை # எடிட் பண்ண முடியுமா!.இந்தி உலகிலிருந்து அட்லி குறித்து வந்த செய்திகளெல்லாம் நொந்த செய்தியாகவே இருந்த நிலையில், நாம் ஏற்கெனவே எழுதியிருந்தபடி, தனது அடுத்த படத்திலிருந்து அட்லியை நாசூக்காக கழட்டிவிட்டுவிட்டார் விஜய். அதேபோல் சூரிய தயாரிப்பிலிருந்தும் மாறிய விஜய், அந்த தேதிகளை அப்படியே லம்பாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார். இயக்குனர்?... ‘நீங்களும் கதை கேளுங்க. நானும் கேக்குறேன். ஒரு மூணு மாசம் கழிச்சி பொறுமையா முடிவெடுக்கலாம்’என்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கிறாராம் லியோ. # டெட்லி டெசிஷன்.சீக் ரெட்ஐந்தெழுத்து வாரிசு நடிகர் தொடர்ந்து தோல்விப் படங்களாகவே நடித்துவருவதில், அவரின் அம்மாவுக்கு கோபமாம். ’எது மாதிரியான கதையில நடிக்கணும்னு என்கிட்ட டிஸ்கஸ் பண்ணி உங்க அப்பா எத்தனை ஹிட் குடுத்தாரு. நீயும்தான் இருக்கியே. திமிருக்குப் பொறந்தவன்’என்று மகனைத் திட்டுவதோடு, கதை சொல்ல வரும் புதுமுக இயக்குநர்களிடம் “ஏம்பா, உனக்கு வேற நல்ல ஹீரோவே கிடைக்கலயா?” என்று கலாய்க்கிறாராம். # கொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.