அமெரிக்கா: ’கூகுள் மேப்’ பின்பற்றி ஆழ்கடலுக்குள் காரை விட்ட பெண் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

குடிபோதையில் இருந்த பெண் ஒருவர் கூகுள் மேப் உதவியுடன் காரை இயக்கியுள்ளார். அவர் நம்பிய கூகுள் மேப் அவரை கடலுக்குள் அழைத்துச் சென்றது
கூகுள் மேப்பால் கடலுக்குள் சென்ற கார்
கூகுள் மேப்பால் கடலுக்குள் சென்ற கார்

இந்த தொழில்நுட்ப உலகில் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் நாம் தொடர்புக் கொள்ள முடியும். ஆனால் தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் சீராக இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. அந்த வகையில் கூகுள் மேப்பை நம்பி காரை கடலுக்குள் ஓட்டி சென்ற பெண்ணின் விடீயோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போக வேண்டிய இடத்திற்கு வழிதெரியாத பலரும் இன்றைக்கு கூகுள் மேப்பையே நம்பியுள்ளனர். இதனால் பயணங்கள் பலருக்கு சாத்தியப்பட்டாலும், சிக்கல்களை சந்திக்கிறவர்களும் உண்டு. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

குடிபோதையில் இருந்த பெண் ஒருவர் கூகுள் மேப் உதவியுடன் காரை இயக்கியுள்ளார். அவர் நம்பிய கூகுள் மேப் அவரை கடலுக்குள் அழைத்துச் சென்றது. அதிர்ஷ்டவசமாக, கார் கடலில் கவிழ்வதற்குள் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் இருவரும் பாதுகாப்பாக கார் கண்ணாடி வழியாக வெளியே மீட்கபட்டனர். இன்ஸ்டாகிராம் பயனரான கிறிஸ்டி ஹட்சின்சன் இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சம்பவ இடத்திலும் அவர் இருந்துள்ளார்.

கூகுள் மேப் எப்போதும் சரியான வழியைக் காட்டாது, சில சமயங்களில் அது உங்களைத் தவறாக வழிநடத்தும், எனவே தெரியாத பகுதிகளுக்குப் பயணம் செய்யும் போது ஜிபிஎஸ்ஸை விட உள்ளூர்வாசிகளிடம் வழி கேட்டு உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com