’பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்பார்கள். அந்த வகையில் இங்கு ஒரு பாம்பு 16,000 பேரை மின்சாரம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. அமெரிக்க ஆஸ்டின் மாகாண மின்நிலையத்திற்குள் நுழைந்த பாம்பு ஒன்று ஏற்படுத்திய இயந்திர கோளாறால், அம்மாகாண மக்கள் 16,000 பேர் மின்சாரம் இன்றி அவதிபட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த அம்மாகாண எரிசக்தி துறை அதிகாரி மாட் மிட்செல் கூறும் போது, மின்நிலையத்திற்குள் நுழைந்த பாம்பு, மின்சார சர்க்யூட்களில் ஊர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியதால் 16 ஆயிரம் பேருக்கு மின்தடை ஏற்பட்டதாகவும், பின் மின் தடைக்கான காரணம் கண்டறியப்பட்டு, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க மின் நிலையங்களுக்குள் குறைந்த வோல்டேஜ் கொண்ட பாம்பு பிடி கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.