புதுடில்லி: பறக்கும் விமானத்தில் 7 பயணிகள் காயம் - நடுவானில் என்ன நடந்தது?

நடுவானில் சென்று கொண்டிருந்த போது காற்றழுத்த தாழ்வு காரணமாகக் குலுங்கியுள்ளது. இதனால் பயத்தில் பயணிகள் சத்தம் போட்டுள்ளனர். இச்சம்பவத்தால் பயணிகள் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஏஐ- 302 என்ற ரக எண்  கொண்ட விமானம் இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்குச்  சென்றுள்ளது. விமானம் செல்லும் பாதையில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக விமானம் சிறிது நேரம் குலுங்கியுள்ளது. இதில் 7 பயணிகளுக்குச் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் மருத்துவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் நிலைமை சரியானதும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் சிட்னி நகரில் தரை இறங்கியதும் காயமடைந்த 3 பயணிகளுக்கு மட்டும் விமான நிலையத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானத்தில் தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக பழுது சரி செய்யப்பட்டதால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- இரா. விமல்ராஜ்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com