இஸ்ராவோல் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு அதில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கப்பட்டது. அதன் மூலமாக நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதையடுத்து லேண்டர் தரையிறங்கிய சிறிது நேரத்திலே அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் ஊர்ந்து சென்றது. அதன் பின் ரோவரை புகைப்படம் எடுத்து லேண்டர் பூமிக்கு அனுப்பியிருந்தது. லேண்டரை ரோவரும் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர வைரலாகியது. இது காலத்திற்கும் அழியாத சாதனை என்று பலரும் X தளத்தில் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இஸ்ரோ பற்றிய பேச்சுகள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதால் அதனுடைய ஃபாலோயர்ஸ்கள் தற்போது அதிகமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி குறுகிய காலத்தில் அதிக ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளது இஸ்ரோ.
அதனை தொடர்ந்து கடந்த 30 நாட்களில் இஸ்ரோ 11.66 லட்சம் ஃபாலோயர்ஸ்களை பெற்று முதல் இடத்திலும், 6.32 லட்சம் ஃபாலோயர்ஸ்களை பெற்று பிரதமர் மோடி இரண்டாவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, ஆதித்யநாத், பிசிசிஐ, ராகுல் காந்தி, ரத்தன் டாடா, அமித்ஷா, பாஜக உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.