நியூயார்க்: 14-வது மாடியில் இருந்து குதித்து கூகுள் ஊழியர் தற்கொலை- அலுவலகத்தில் என்ன நடந்தது?

நியூயார்க்: 14-வது மாடியில் இருந்து குதித்து கூகுள் ஊழியர் தற்கொலை- அலுவலகத்தில் என்ன நடந்தது?

நியூயார்க் நகரில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் 14 -வது மாடியில் இருந்து குதித்து கூகுள் நிறுவன பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கூகுள் நிறுவனத்தில் மன்ஹாட்டன் தலைமை அலுவலகத்தில் பொறியாளர் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு இன்னும் தெரிவிக்காததால், அந்த நபரின் அடையாளம் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. போலீஸ் விசாரணையில் 15 மாடி ஆர்ட் டெகோ கட்டிடத்திற்கு எதிரே, மேற்கு 15வது தெருவில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அருகில் ஒரு மயக்கமடைந்த நபர் தரையில் கிடந்ததைக் கண்டு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை மயங்கிய நிலையில் கண்டனர். அவர் உடனடியாக பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

14-வது தளத்தின் மொட்டை மாடியின் விளிம்பில் கைரேகைகள் இருப்பதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த நபர் அங்கிருந்து குதித்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும், தற்கொலை சம்பவத்திற்கான வீடியோ எதுவும் அவர்களிடம் கிடைக்கவில்லை. முன்னதாக மற்றொரு கூகுள் ஊழியரான ஜேக்கப் பிராட் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. 33 வயதான பிராட், மன்ஹாட்டன் தலைமையகத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார். அவர் கடந்த பிப்ரவரி 16 ம் தேதி செல்சியாவின் மேற்கு 26 வது தெரு மற்றும் 6 வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கூகுள் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொழில்நுட்பத் துறையில் உள்ள மனநலப் பிரச்சினை, அதற்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com