இங்கிலாந்து முழுவதும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனைக்காக சப்ளை செய்யப்பட்ட கேட்பெரி சாக்லேட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளன. கேட்பெரி நிறுவன சாக்லெட்டுகளில் லிஸ்டீரியா எனும் பாக்டீரியா கலந்திருப்பதாக அச்சப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
லிஸ்டீரியோ என்பது உணவு மூலம் பரவும் பாக்டீரியா. அசுத்தமான உணவை உட்கொள்வதால் இந்த லிஸ்டீரியோ தொற்று ஏற்படும். லிஸ்டீரியா பாக்டீரியா கலந்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால் காய்ச்சல், உடல்வலி, வயிற்று உபாதை ஏற்படும். கர்ப்பிணிகளுக்கும் வயதானோர்களுக்கும் இந்த தொற்று ஆபத்தை ஏற்படுத்தும்.
கேட்பெரி நிறுவன சாக்லெட்டுகளில் தயாரிக்கப்படும் ஆறு வகையான சாக்லேட்டுகளில் இந்த தொற்றுக்கான அபாயம் இருப்பதால், இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சாக்லெட்டுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. யார் வாங்கியிருந்தாலும் அதை உட்கொள்ளாமல், வாங்கிய இடத்திலே ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது