தென் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள வெனிசுலா சிறுவர்களுக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சர்வதேச அளவில் ஆதரவு திரட்டி வருகிறார்.
தென் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள வெனிசுலா சிறுவர்களுக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சர்வதேச அளவில் ஆதரவு திரட்டி வருகிறார்.
ஹலிவுட் முன்னணி நடிகையும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நல்லெண்ண தூதரமுமான ஏஞ்சலினா ஜோலி தற்போது ஒரு நாள் பயணமாக கொலம்பியா சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் கொலம்பியாவில் அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டுள்ளார்.மேலும் அந்த நாட்டின் அதிபரான இவான் டூக்கையும் சந்தித்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பின் போது பொருளாதார சரிவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில்லாமல் வெனிசுலாவிலிருந்து பெரு, கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் நாடுகளுக்கு குடிபெயர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களின் நலன் குறித்து ஆலோசித்தார்.மேலும் அந்த சிறுவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான வழிகள் குறித்தும் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.