கண்சிமிட்டினால் கச்சிதமான படம்…. 8 கோடிக்கு ஏலம்!!

கண்சிமிட்டினால் கச்சிதமான படம்…. 8 கோடிக்கு ஏலம்!!

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ இங்கிலாந்தின் கார்ன் வாலில் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ இங்கிலாந்தின் கார்ன் வாலில் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ கண்களால் பார்க்கக்கூடியதை அப்படியே தத்ரூபமாக வரைந்து அனைவரையும் அசத்தி வருகிறது. 

இந்த ரோபோவிற்கு அய் டா ன்று பெயரிடப்பட்டுள்ளது. பெண் உருவம் கொண்ட இந்த ரோபோ பார்க்கும் காட்சிகளை கண்களைச் சிமிட்டியபடி அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயோனிக் முறையில் படமாக வரைந்து தருகிறது. இந்த ரோபோவை மனிதர்களுக்கு நிகராகச் செயல்பட வைப்பதே தங்களின் குறிக்கோள் என்று அய் டாவின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அய் டா ரோபோ வரைந்த ஓவியம் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com