நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். மாலே விமானநிலையத்தில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மோடியை மரியாதையுடன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மதுவை சந்தித்து மோடி பேசினார். அந்த சந்திப்பின் போது கிரிக்கெட் பிரியரான மாலத்தீவு அதிபருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பிதமர் மோடி பரிசாக வழங்கினார். அந்தப் பேட்டில் இந்திய உலகக்கோப்பை 2019ம் ஆண்டு பங்கேற்கும் அணி வீரர்களின் பெயருடன் அவர்கள் கையொப்பமும் உள்ளது.
இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட்டால் இணைந்தோம், தனது நண்பரும் மாலத்தீவு அதிபருமான இப்ராஹிம் முகம்மது கிரிக்கெட் ரசிகர். இதன் காரணமாகவே உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் கையொப்பம் செய்த கிரிக்கெட் பேட்டினை அவருக்கு பரிசாக அளித்தாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தப் பயணத்தில் மாலத்தீவில் இந்தியா சார்பில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டிக்கொடுப்பது. மாலத்தீவுகளில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ மூலம் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ குழு சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.