உலகம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி - ரஷ்ய பொறியாளருக்கு நேர்ந்த சோகம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி - ரஷ்ய பொறியாளருக்கு நேர்ந்த சோகம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்த ரஷ்யாவைச் சேர்ந்த தலைமை பொறியாளர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்த ரஷ்யாவை சேர்ந்த தலைமைப் பொறியாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிளிங்கோ வெடின் . வழக்கம்போல இவர் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத்
தொடர்ந்து அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காரணத்தால் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கிளிங்கோ வெடின் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூதரகம் மூலம் அவரது சொந்த நாடான ரஷ்யாவிற்கு உடலை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.