அமெரிக்கா: பெற்ற மகனையே சூப்பர் மார்க்கெட்டில் விற்ற தாய் - என்ன நடந்தது?

அமெரிக்கா: பெற்ற மகனையே சூப்பர் மார்க்கெட்டில் விற்ற தாய் - என்ன நடந்தது?
அமெரிக்கா: பெற்ற மகனையே சூப்பர் மார்க்கெட்டில் விற்ற தாய் - என்ன நடந்தது?

தனது முதல் கவணவருக்குப் பிறந்த குழந்தையை சரிவரக் கவனிக்கவில்லை

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் என்ற பெண், தனது குழந்தையை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருவர் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் நோயல் ரோட்ரிக்ஸ் அல்வாரெஸ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த சிண்டி, அர்ஷ்தீப் சிங் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சிண்டி தனது இரட்டை குழந்தைகளை மட்டும் மிகுந்த கவனிவுடன் கவனித்துக்கொண்டார். ஆனால், தனது முதல் கவணவருக்குப் பிறந்த, 6 வயது குழந்தையை சரிவரக் கவனிக்கவில்லை. இதனால், அந்த 6 வயது சிறுவன், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டான்.

இந்த நிலையில் தனது இரட்டை குழந்தைகளுக்கும், புதிய கணவருக்கும், 6 வயது சிறுவன் பாரமாக இருப்பதாகக் கருதிய சிண்டி, அந்தச் சிறுவனை அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே அந்தச் சிறுவனை விற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனிடையே தனது பாதுகாப்புக்காக தனது குழந்தை காணாமல் போனதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார் சிண்டி. அதன்பேரில் காவல்துறையினர்  விசாரணை நடத்தியபோது சிண்டியால் சிறுவன் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இந்த நிலையில் சிண்டியும், அவரது இரண்டாவது கணவரும் காவல்துறையினருக்கு பயந்து தலைமறைவாகியுள்ளனர். அவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com