மூன்றாம் பாலினத்தவரை சர்ச்க்குள் மறுக்க யாருக்கும் உரிமை இல்லை
ஆவணப் படம் ஒன்றில் பாலியல் உறவு மற்றும் கருக்கலைப்புக் குறித்துப் போப் பிரான்சிஸ் பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கிறிஸ்தவ மதத்தின் தலைமையாகக் கருதப்படுவது ஐரோப்பாவில் உள்ள வாடிகன் சிட்டி. இது உலகின் மிகச் சிறிய நாடு என்றாலும், கிறிஸ்தவ மதத்தின் தலைமையகம் இதுவே. இங்குள்ள போப் பிரான்சிஸ் கிறிஸ்துவர்களின் தலைவராகக் கருதப்படுகிறார்.
இதனிடையே செக்ஸ் தொடர்பாகப் போப் பேச்சு, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. டிஸ்னி தயாரித்துள்ள "தி போப் ஆன்சர்ஸ்" ஆவணப்படத்தில், பே பேச்சு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு, போப் பிரான்சிஸ், ரோம் நகரில் 20 வயதிற்குட்பட்ட 10 சிறுவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார், அந்த உரையாடலை வைத்து ஆவணப்படம் தயாரித்துள்ளனர். இதில், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் உறவு, கருக்கலைப்பு, தன்பாலின உரிமைகள், பாலியல் பலாத்காரம், கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
அதில் பேசிய போப், கர்ப்பம் கலைத்த பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் நடந்து கொள்ளவேண்டும். இறைவன் கொடுப்பதைக் யார் தடுத்தாலும் அது தவறுதான். கருக்கலைப்பு செய்தவரை சமூகம் ஏற்றுக்கொள்வது என்பது வேறு. ஆனால், அதை நியாயப்படுத்த முடியாது என்றவர், மனிதனுக்குக் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்னவென்றால், அது செக்ஸ் மட்டுமே. எனவே, செக்ஸ் என்பது கடவுள் கொடுத்த வரம் என்றார்.
மேலும், மூன்றாம் பாலினத்தவரை சர்ச்க்குள் மறுக்க யாருக்கும் உரிமை இல்லை. நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள். நாம் அனைவருக்கும் கடவுள் ஒருவரே தந்தை' என்றார்.