இலங்கையைவிட மோசமான நிலையில் பாகிஸ்தான் - அதிர்ச்சி கொடுத்த வங்கி வட்டி விகிதம்

இலங்கையைவிட மோசமான நிலையில் பாகிஸ்தான் - அதிர்ச்சி கொடுத்த வங்கி வட்டி விகிதம்
இலங்கையைவிட மோசமான நிலையில் பாகிஸ்தான் - அதிர்ச்சி கொடுத்த வங்கி வட்டி விகிதம்

பாகிஸ்தானில் பணவீக்கம், உணவு பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது

பாகிஸ்தானில் நெருக்கடியான நிலை நிலவி வரும் நிலையில், அந்த நாட்டு மத்திய வங்கியானது 100 அடிப்படை புள்ளிகளை மீண்டும் கூட்டியுள்ளது மற்றும் அதன் வட்டி விகிதத்தினை 21% ஆக அதிகரித்துள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்கனவே, வரலாறு காணாத பணவீக்கம், பெரு வெள்ளம், உணவு பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, மற்றும் வட்டி விகிதம் என நாடு விண்ணை முட்டும் பணவீக்கத்தில் சிக்கி திண்டாடி வருகிறது.

ஏற்கனவே, இலங்கை போல் பாகிஸ்தான் நாடு மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற கூறப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால், இலங்கையை விடப் பாகிஸ்தானின் நிலை படுமோசம் அடைந்து, வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்துப் பாகிஸ்தான் மத்திய வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை வலிமைபடுத்தவும், வட்டி விகிதத்தை உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டது' தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகப் பற்றாக்குறை, குறைந்து வரும் நாணய மதிப்பு , அதிகரித்து வரும் கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சவால்களைப் பாகிஸ்தான் அரசு ஏற்கனவே எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வட்டி விகிதம் உயர்த்தும் முடிவை பாகிஸ்தான் அரசு அதிரடியாக எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பணவீக்கம் அழுத்தம் தரக்கூடிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கி ஏற்கனவே, பல முறை வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. ஆனால், சமீபத்திய வட்டி விகிதங்களை இன்னும் பல மடங்கு உயர்த்தியது. இந்த நடவடிக்கை பொது மக்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் நாட்டில் கடும் கோதுமை பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில், கோதுமையை இலவசமாகப் பெறும்போது அதனை வாங்க அலைமோதிய கூட்டத்தில், 10க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடியாக இருந்து வரும் இப்பிரச்சனை, தற்போது உணவு நெருக்கடியாகவும் மாறி வருகின்றது.

இப்படி, ஏற்கனவே என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு, பாகிஸ்தான் மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு செய்தி மேலும் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com