என்னடா, டர்பனுக்கு வந்த சோதனை! இது நியூயார்க் ப்ராப்ளம்!!

என்னடா, டர்பனுக்கு வந்த சோதனை! இது நியூயார்க் ப்ராப்ளம்!!

நியூயார்க்கைச் சேர்ந்த 23 வயதான குர்விந்தர் க்ரீவல் தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இரவு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

நியூயார்க்கைச் சேர்ந்த 23 வயதான குர்விந்தர் க்ரீவல் தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இரவு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். 

ஆனால் வாசலில் நின்ற காவலர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் தனது மத வழக்கப்படி டர்பன் கட்டியிருந்தது தான். 

அவர் ஹோட்டல் அதிகாரியிடம் எவ்வளவு பேசியும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதுகுறித்து குர்விந்தர் கூறும் போது, ‘இது எனக்கு அதிர்ச்சியாகவும், மனதை புண்படுத்தும் வகையிலும் அமைந்தது. என்னுடைய மத வழக்கங்களை பின்பற்றுவதற்கு தடை விதிப்பது மிகவும் மோசமான ஒன்று’ என்றார். 

இதுதொடர்பாக விளக்கமளித்த ஹோட்டல் நிர்வாகம், ‘இரவு நேரங்களி, இங்கு வருபவர்களுக்கு உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. இது அவர்களது பாதுகாப்பிற்காக தான். டர்பன் மட்டுமல்லாமல் வேறு தொப்பி அணிந்தால் கூட அதே தடை தான் விதிக்கப்படும்’ என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com