கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துச் சென்ற கும்பல்!

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துச் சென்ற கும்பல்!
கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துச் சென்ற  கும்பல்!

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துச் சென்ற கும்பல்!

அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஒசாவோ லோபஸ். 19 வயதான இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இவர் திடீரென காணாமல் மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டின் அருகிலேயே உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இருப்பினும் அவரது வயிற்றில் குழந்தை இல்லை. 

இந்நிலையில், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்கள், பின்னர் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துச்சென்றுள்ளது தெரியவந்தது. 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கர்ப்பிணி பெண்களுக்கு  இலவச உடைகள் வழங்குவதாக முகநூலில் பார்த்து அவர் அங்கு சென்றுள்ளார். அப்போது தான் அவர் காணாமல் போனது தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com