விஷம் கொடுத்து பின்னர் சிகிச்சை! திறமையை காட்ட விரும்பி 17 பேரை கொன்ற டாக்டர்!
பிரான்ஸ் நாட்டில் மயக்க மருந்து மருத்துவராக ஃபெடரிக் பேச்சியர் பணியாற்றி வந்தார்.
43 வயதான இவர், கடந்த 2017ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றவர்களுக்கு, சக மருத்துவர்களின் மருத்துவ உபகரணம் முலம் விஷத்தை ஏற்றியதால், 9 நோயாளிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
ஆனால், மீண்டும் 17 நோயாளிகள் இதே போன்ற சம்பவம் காரணமாக, உயிரிழந்துள்ளனர். இதற்காக மீண்டும் ஃபெடரிக் பேச்சியர் கைது செய்யப்பட்டார்.
அறுவை சிகிச்சையின்போது, விஷம் ஏற்றிய பின்னர் அந்த நோயாளிகளுக்கு மீண்டும் சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றி தனது திறமையை காட்ட விரும்பியதாக ஃபெடரிக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பு தெரிவித்துள்ளார்.