உயிருடன் குழந்தையை புதைத்த தாய்! காப்பாற்றிய நாய்!

உயிருடன் குழந்தையை புதைத்த தாய்! காப்பாற்றிய நாய்!

வடக்கு தாய்லாந்தில் 15 வயது பெண் ஒருவர், தனது பெற்றோரிடம் இருந்து தனது குழந்தையை மறைக்க, உயிருடன் குழந்தையை புதைத்துள்ளார்.

வடக்கு தாய்லாந்தில் 15 வயது பெண் ஒருவர், தனது பெற்றோரிடம் இருந்து தனது குழந்தையை மறைக்க,  உயிருடன் குழந்தையை புதைத்துள்ளார். 

அந்த இடத்தை அறிந்த பிங் பாங்க் என்ற நாய், அங்கேயே நின்று குறைத்தது. அங்கிருந்த மண்ணை, தனது கால்களால் நோண்டிக்கொண்டே இருந்தது.

இதனைக் கண்ட  அந்த நாயின் உரிமையாளர் குழந்தையின் கால் வெளியே தெரிவதை கண்டார். உடனே அவரும் சுற்றி இருந்த மக்களும் அந்த குழந்தையை மண்ணில் இருந்து எடுத்து மருத்துவமனைக்கு தூக்கிச்  சென்றனர். 

அந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை நலமாக இருப்பதாக கூறினார். அத்துடன் அந்த 15 வயது பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com