டிக்கெட் எடுக்க முடியாது... குழந்தையை ஏர்போர்ட்டில் விட்டுச்சென்ற பெற்றோர்
டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி குழந்தையை விமான நிலையத்திலேயே பெற்றோர் விட்டுச்சென்ற சம்பவம் இஸ்ரேலில் அரங்கேறியுள்ளது.
பெல்ஜியத்தை சேர்ந்த தம்பதியினர் ஒரு குழந்தையுடன் இஸ்ரேலில் இருக்கும் டெல் அவிவ் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். விமானத்திற்குத் தாமதமானதால் பரபரப்பாக வந்த தம்பதியினர், குழந்தைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளனர். இதைக் கவனித்த அதிகாரிகள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் டிக்கெட்டை எடுக்க மறுத்த அந்த தம்பதியினர் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டனர்.பின்னர் விமானத்தில் ஏற முற்பட்டுள்ளனர். இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து அந்த தம்பதியை விமான நிலைய போலீசார் தம்பதியினரை கையும் களவுமாகப் பிடித்தனர்.மேலும் அந்த குழந்தை தம்பதிகளுடையது தானா என்ற கோணத்திலும், வேறு ஏதாவது காரணத்திற்காகக் குழந்தையை விட்டுச்செல்ல முயன்றார்களா? என்றும் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!
