உலகம்
கம்போடியாவில் உள்ள பிரபல ஓட்டலில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு..!
கம்போடியாவில் உள்ள பிரபல ஓட்டலில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு..!
53 பேர் தீக்காயங்களுடன் மீட்பு
கம்போடியாவில் பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து 10 பேர் உயிரிழந்தனர்.
கம்போடியா எல்லையில் உள்ள ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு துறையினர் செல்வதற்குள் கட்டடம் முழுவதும் உருக்குலைந்தது. சிலர் ஓட்டல் ஜன்னல் வழியாக குதித்து வெளியே இருந்தவர்கள் உதவியுடன் தப்பினர்.
பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் 53 பேரை தீக்காயங்களுடன் மீட்டனர்.
மேலும் கொளுந்து விட்ட எரிந்த நெருப்பை 6 மணி நேரம் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.