நயாகரா நீர்வீழ்ச்சி மதிப்புமிக்க இயற்கை சொத்து
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன் தோன்றியது நயாகரா நீர்வீழ்ச்சி.
அழகிற்கு பெயர்போன நயாகரா மின்சார உற்பத்திக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிதிப்புமிக்க இயற்கை சொத்து.
நயாகரா அருவியை விட உலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட உயரமான அருவிகள் இருந்தாலும் அவை குறைந்த அளவு நீரையே தருகின்றன.
ஆண்டுதோறும் இதனை பார்க்க சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.அதிலும் கோடை காலத்தில் காலை, மாலை என இரு வேளையிலும் அதிக பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சிக்கு வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த சிலநாட்களாக பனிப்புயல் வீசுகிறது. இதனால், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ள நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியால் சூழப்பட்டுள்ளது.
விமானம், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்தனர்.
இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி உறைந்து போய் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.